பேச்சு:இரத்தச் சர்க்கரை

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இக் கட்டுரையின் முதல் வரியின் படி இரத்தச் சர்க்கரை என்பது காபோவைதரேட்டின் ஒரு வகை என்பதுபோல் எழுதப்பட்டுள்ளது. இது சரியாகத் தெரியவில்லை. இது இரத்தித்தில் கலந்திருக்கும் சர்க்கரையைக் குறிக்கப் பயன்படுகிறது. இரத்தச் சர்க்கரை மட்டம் அல்லது இரத்தச் சர்க்கரை அளவு என்பது இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் குறிக்கும். மயூரநாதன் 04:27, 14 மார்ச் 2009 (UTC)


சற்று மேலும் வாசித்து, தகுந்தவாறு மாற்றி விடுகிறேன். --Natkeeran 17:15, 14 மார்ச் 2009 (UTC)

உகந்ததாக மாற்றப்பட்டுள்ளது, எனினும் தலைப்பும் அவ்வாறே மாற்றுதல் நல்லதல்லவா? சக்கரை அல்லது சர்க்கரை எது சரி?--சி. செந்தி 14:02, 7 திசம்பர் 2010 (UTC)Reply

தமிழகத்தில் சர்க்கரை என்பதே எழுத்து வழக்கு. சக்கரை - பேச்சு வழக்கு. --சிவக்குமார் \பேச்சு 15:28, 7 திசம்பர் 2010 (UTC)Reply

நன்றி சிவகுமார், அப்படியெனின் "இரத்தச் சர்க்கரை" என்று அல்லது இரத்தச் சர்க்கரை அளவு என்று தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கின்றேன்.--சி. செந்தி 17:31, 7 திசம்பர் 2010 (UTC)Reply

குருதியினியம் என்றும் சொல்லலாம். hypoglycemia என்பதைக் குருதிக் குறையினியம் என்றோ, குருதி இனியக்குறைவு என்றோ சொல்லலாம். இரத்தம், அரத்தம் என்னும் சொற்களையும் பயன்படுத்தலாம். சர்க்கரை என்பதைவிட சக்கரை என்பதே மேல். சருக்கரை என்றும் எழுதும் வழக்கமும் உண்டு. இவை யாவுமே குறிப்புக்காகவே. மாற்ற வேண்டும் என்பதற்காக அல்ல. --செல்வா 18:30, 7 திசம்பர் 2010 (UTC)Reply

கட்டுரையானது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பற்றி என்பதால் குருதியினிய அளவு என்று பயன்படுத்துதல் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். குருதி இனியக்குறைவு என்பதும் அருமையான வார்த்தைப்பிரயோகம்!, நன்றி செல்வா. குருதியினிய அளவு என்று தலைப்பு இருப்பது தற்போதைய தலைப்பை விட நன்றாக உள்ளது எனக் கருதுகிறேன், மேலும் இரத்தச் சர்க்கரை (இரத்த மயமான சர்க்கரை!) எனும் போது மயக்கமான வார்த்தைப் பயன்பாடு உருவாகுகிறது என்பதை இப்போதே கவனித்தேன். ஏற்கனவே உள்ள இரத்தச் சர்க்கரைக் குறைவு எனும் கட்டுரையின் தலைப்பையும் குருதி இனியக்குறைவு என்று மாற்றினால் நன்று. கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகிறது.--சி. செந்தி 21:36, 7 திசம்பர் 2010 (UTC)Reply

செந்தி, //இரத்தச் சர்க்கரை (இரத்த மயமான சர்க்கரை!) எனும் போது மயக்கமான வார்த்தைப் பயன்பாடு உருவாகுகிறது// என்ற காரணத்துக்காக தலைப்பு மாற்றுவதானால், இதே காரணத்துக்காக இப்போது பயன்பாட்டில் இருக்கும் ஏராளமான பல சொற்களுக்குப் புதிய சொற்கள் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும். இரத்தச் சர்க்கரை என்பது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சொல். அதனை ஏன் மாற்ற வேண்டும்? வேன்டுமானால் இரத்தம் என்பது தமிழ்ச் சொல்லல்ல என்று யாராவது கருதினால் இணையான வேறு சொல் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 02:23, 8 திசம்பர் 2010 (UTC)Reply
  • தற்போது பயன்பாட்டிலிருந்து வரும் இரத்தம் என்கிற சொல்லே இருக்கட்டும். கட்டுரையினுள் வேண்டுமானால் இரத்தம் என்று முதலில் வரும் இடத்தில், அடைப்புக் குறிக்குள் குருதி என்கிற சொல்லைச் சேர்த்துக் கொள்ளலாம். --தேனி.எம்.சுப்பிரமணி. 02:44, 8 திசம்பர் 2010 (UTC)Reply
நன்றி, இங்குள்ள தலைப்பு இப்படியே இருக்க அந்த வார்த்தைப்பிரயோகமும் பயன்பாட்டில் (எ.கா: விக்சனரியில்) இருத்தல் நன்று. இரத்தச் சர்க்கரை அளவு என்று தலைப்பு இருந்தால் விளக்கமாக இருக்கும்.--சி. செந்தி 17:36, 10 திசம்பர் 2010 (UTC)Reply
இரத்தச் சருக்கரை அளவு என்று தலைப்பிடப் பரிந்துரைக்கிறேன். இது வேண்டாம் எனில் சக்கரை என்றே சொல்லலாம். தமிழில் சீனி என்றும் ஒரு சொல் பயன்பாட்டில் உள்ளது. இரத்தச் சீனி அளவு என்றும் சொல்லலாம் :) --செல்வா 20:05, 10 திசம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இரத்தச்_சர்க்கரை&oldid=646286" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இரத்தச் சர்க்கரை" page.