பேச்சு:இலட்சம்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

இலக்கம் என்பது, எண் என்பதனைக் குறிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.-- உழவன் +உரை.. 04:43, 10 சூலை 2012 (UTC)Reply

இலக்கம் என்பது தமிழ்ச் சொல்லே. இலக்கம் என்ற தமிழ்ச் சொல்லை லக்ஷ என்ற வடமொழிப் பலுக்கலின்படி இலட்சம் என்று எழுதி வருகின்றோம். இக்கட்டுரையின் தலைப்பும் இலக்கம் என்றே இருக்க வேண்டும். ஆதாரங்கள்:-
எது தமிழ் சொல் என்று ஆராய்வது நமது முதல் இலக்கன்று. மக்களிடையை தமிழ் வழி தகவற்பரிமாற்றத்தை வளர்த்தலே, நமது முதல் இலக்கு. எனவே, தலைப்புகளை விட, உள்ளிருக்கும் செய்திகளை வளர்த்தால் மட்டுமே, நம்மை பலர் அணுகுவர். தமிழகத்தில் ஆங்கிலச்சொற்கலப்பு அதிகமாகி வருகிறது. அதனைக் குறைப்பதற்கான வழிகளைப் பற்றி, அறிஞர்கள் கூறியவற்றைப் பற்றி, நாம் சிந்திக்க வேண்டும்.
நமக்கு முன்னே, தனித்தமிழ் வித்திட்டவர்களை, நம் சமுதாயம் ஏன் ஒரங்கட்டி விட்டது? அவர்கள் படைப்புகளை, நாம் காத்து உள்ளோமா? இப்பொழுது அறிஞர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் தமிழ் பற்றாளர்களே. அவர்கள் புதியதாக ஒன்றும் சொல்லவில்லை. நமது அறியாமையால், அவர்களையும் அறிஞர்கள் என்கிறோம்.
நாம் இங்கு, ஒரு சில சொற்களைத் தலைப்புகளில் மட்டும் புகுத்துவதால் தமிழ் வளரவே வளராது. உங்களுக்கு நேரம் இருக்கும் போது, அள்ள அள்ள குறையா, இத்தனித்தமிழை, 2 தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மாற்றுங்களேன். இயன்ற வரை, இது போல அறிஞர்களின் நூல்களை, நூலகத்தில் தொகுத்து உதவுகள். பல படைப்புகள் இணையத்தமிழில் காணாமல் போய் விடுகிறது. அதனை நூலகத்தில் நான் மேற்கொண்ட முறையில் காக்கலாமல்லவா? எனவே, அருள்கூர்ந்து தலைப்பிடலுக்கு, பின்னுரிமைத் தாருங்கள். உள்வளம் இல்லாதவர்கள் நாம் என்ற சொல்லை அகற்றுவோம்.-- உழவன் +உரை.. 12:44, 19 ஆகத்து 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இலட்சம்&oldid=1192556" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இலட்சம்" page.