பேச்சு:இலாப்பெ சனக்கு

தகவற்பெட்டி விவரம் தொகு

@Dineshkumar Ponnusamy:ஏறத்தாழ ஈரான் குறித்து பல்வேறு கட்டுரைகளை, இம்மாதத்தில் இருபது நாட்கள் படித்தேன். அதனால், ஈரான் நாட்டிலேயே தெகுரான் மாகாணம் தான் முக்கியம் என்பதை அறிந்தேன். அதனால் அம்மாகாணம் குறித்து முழுமையாக எழுத எண்ணியுள்ளேன். முதற்கட்டமாக அம்மாகாணத்தின் ஏறத்தாழ நூறு ஊர்களைக் குறித்து எழுத எண்ணுகிறேன். போட்டி காலத்தில் கட்டுரையின் அளவு முக்கியம் என்பதால், அம்மாகணத்திற்குரியக் குறிப்புகளை தகவற்பெட்டியில் இருக்கின்றன. அவற்றை விவரித்து, மேற்கோள்களுடன் எழுதுவதால் கட்டுரை அளவு அதிகமாகிறது. ஒரே மாகாணத்தில் அமைந்த ஊர்கள் அனைத்தும், ஏறத்தாழ ஒன்று போலவே இருக்கின்றன. ஆங்கிலக் கட்டுரையிலும் இருக்கும் தரவுகள் குறைவாக இருப்பதால், பொதுவானத் தரவுகளைக் கொண்டு தொடர்ந்து கட்டுரைகளை உருவாக்கலாமா? உங்களது ஆலோசனை என்ன? எழுதலாம் தானே? --உழவன் (உரை) 16:52, 27 நவம்பர் 2019 (UTC)Reply

பொதுவானத் தரவுகளை எவ்வாறு பெறுகின்றீர்கள், தகவற் பெட்டியில் இருந்தா? அல்லது வேறு சில தளங்களில் இருந்தா? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:48, 27 நவம்பர் 2019 (UTC)Reply
தகவல்பெட்டியில் இருந்து தான். எடுத்துக்காட்டாக, தெகுறான் மாகாணம், கவுண்டியின் பெயர் என்ற இரண்டு பெயர்ச்சொற்கள் உள்ளன. அதுகுறித்து நாலஞ்சு வரிகள். இதைப்போல ஒரு மாவட்டத்தில் இருக்கும் அனைத்து ஊர்களுக்கும் இது பொதுவான தகவல்கள் ஆக அமையும். ஆனால் அங்கு வாழும் மக்கள் தொகை இருக்கும் படம் போன்ற சில மட்டுமே மாறும். முதலில் ஆங்கில விக்கிபீடியாவில் இருக்கும் வரிகளை மொழிபெயர்த்து இணைப்பே பிறகு தகவல் பெட்டி சொற்களை விரிவாக்குவேன்.--உழவன் (உரை) 19:06, 27 நவம்பர் 2019 (UTC)Reply
சோழர் கட்டுரையை எடுத்துக்காட்டாகக் கொண்டு, {{முதன்மை}} வார்ப்புருவை இட்டுள்ளேன்.--உழவன் (உரை) 01:48, 28 நவம்பர் 2019 (UTC)Reply
விருப்பம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:38, 4 திசம்பர் 2019 (UTC)Reply

மொழிபெயர்ப்பு தொகு

மேலுள்ள தகவற்பெட்டியில் ஊரின் பெயர்கள் உள்ளன. அவற்றினை தமிழில் மொழிபெயர்க்க உதவுக.--உழவன் (உரை) 07:48, 29 நவம்பர் 2019 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இலாப்பெ_சனக்கு&oldid=2866634" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இலாப்பெ சனக்கு" page.