பேச்சு:உள்நாட்டுப் போர்

உள்நாட்டுப் போர் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

தமிழிலக்கணப்படி இது உண்ணாட்டுப் போர் அல்லது உள் நாட்டுப் போர் என்றிருக்க வேண்டும். ளகர மெய்யுடன் நகரவெழுத்து சேரும் போது ணகரமாக மாறுவது விதி.--பாஹிம் (பேச்சு) 05:36, 23 சூன் 2013 (UTC)Reply

ஒலிப்பு முறைப்படியும் இது சரிதான். என்றாலும், தமிழகத்தில் வழக்கில் இல்லை. உண் என்பதை மக்கள் சாப்பாடு என்றே நினைப்பார்கள். (இதன் வேர்ச்சொல் உள் என்பது உண்மைதான்). ஆனால், ண் போட்டு எழுதும் விதி எத்தனை பேருக்கு புரியும் எனத் தெரியவில்லை, அப்படியென்றால் தமிழ்நாடு என்பதை தமிணாடு என்றழைக்க வேண்டியிருக்கும். காவற்றுறை, உண்ணுழை போன்ற சொற்கள் தமிழகத்தில் வழக்கில் இல்லை. இலங்கையில் இருந்தால் பயன்படுத்துங்கள். இல்லையெனில், சொற்களை பிரித்து எழுத பரிந்துரைக்கிறேன். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:56, 23 சூன் 2013 (UTC)Reply

இலங்கையிலும் இப்பயன்பாடு இல்லை, இன்று தான் "உண்ணாட்டு" எனும் சொல்லை முதன்முறையாக பார்க்கிறேன்..:)--சங்கீர்த்தன் (பேச்சு) 06:02, 23 சூன் 2013 (UTC)Reply
அடப்பாவமே! :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:28, 23 சூன் 2013 (UTC)Reply

உண்ணாடு என்னும் சொல் ஏற்கனவே வழக்கில் இருந்தது தான். பிற்காலத்தில் பலரும் பிழை பிழையாக எழுதத் தொடங்கி, நற்றமிழ்ச் சொற்கள் பலவற்றைச் சீரழித்து விட்டனர். லகர மெய்யை அடுத்து நகரம் வரின் னகரமாகவும் (எ.கா. மேல் + நிலை = மேனிலை, உடல் + நலம் = உடனலம்), ளகர மெய்யை அடுத்து நகரம் வரின் ணகரமாகவும் (ஆள் + நிலம் = ஆணிலம்) திரியும். ஆயினும் ழகர மெய்யுடன் அவ்வாறு சேர்த்தெழுதப்படுவதாக அறியேன். எனவே தமிழ் நாடு என்று இரண்டு சொற்களாகப் பிரத்தே எழுதப்பட வேண்டும். தமிழ் நாட்டு அரசாங்கமும் ஆங்கிலத்தில் எழுதும் போது Tamil Nadu என்று இரு சொற்களாகப் பிரித்தே எழுதுகிறது. தமிழிலும் அச்சொற்கள் பிரிந்தே நின்றாக வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 06:23, 23 சூன் 2013 (UTC)Reply

பாவெந்தரும் இது குறித்து மன வேதனை அறிந்திருக்கிறார். கற்ற்ரை என்பதை கல்த்தரை என்றும் வாட்டடங்கண் என்பதை வாள்த்தடங்கண் என்றும் பிழையாக எழுதலாமோ என்று கூறியிருக்கிறார். எனினும், பயன்பாட்டில் இல்லாத விதிகளை நுழைத்தால், பெருமளவு புரியாமல் போக வாய்ப்புண்டு. :( ல்+ந என்னும் விதியில் எழுதப்படும் ஒரே சொல் மேனிலை என்பதே, இவ்விதி வழக்கில் இல்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:28, 23 சூன் 2013 (UTC)Reply

ஒரே சொல் என்று கூற வேண்டாம். பல சொற்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இது தொடர்பாக பேச்சு:கடனீர் இடுக்கேரி பக்கத்திலும் சில குறிப்புக்களை வழங்கியுள்ளேன்.--பாஹிம் (பேச்சு) 06:32, 23 சூன் 2013 (UTC)Reply

மறுமொழி தொகு

நீங்கள் கூறியிருக்கிறீர்கள்! ஆனால், பெருவழக்கில் இல்லை. கூகுளில் இட்டு தேடிய போது 881 முடிவுகளே கிட்டின. அகராதிகளிலும், பழம்பாடல்களிலும் மட்டுமே உள்ளன. சில ஆயிரம் முடிவுகளாவது கிட்டினாலே அதை வழக்கில் உள்ளதாகக் கொள்ளமுடியும். :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:41, 23 சூன் 2013 (UTC)Reply

பலர் பின்பற்றவில்லை என்பதற்காக இலக்கணப் பிழையை ஏற்க முடியாதன்றோ. பழந்தமிழ் ஆவணங்கள் பல அவ்வாறு கூறுகின்றன. பிழையைச் சரியென ஏற்பதாயின் (அப்படியே விட்டு விட்டாலும் சரியென்பதால் விட்டதாகத்தான் பொருள் கொள்ள நேரும்) தமிழிலக்கணம் எதற்கு? தமிழறியாதவர்கள் தமிழைப் பிழையற எழுதக் கற்க வேண்டுமே தவிர அதனைச் சிதைக்கக் கூடாது. இங்கே கூகுள் என்பது ஆதாரமல்ல. தமிழிலக்கணம் என்ன சொல்கிறது என்பதே ஆதாரம்.--பாஹிம் (பேச்சு) 06:48, 23 சூன் 2013 (UTC)Reply

சரியாக எழுத வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆயிரக்கணக்கான தமிழர் பயன்படுத்தும் இணையத்தில் சில நூறு முடிவுகள் கூட கிட்டாதது அவர்கள் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்பதையே காட்டுகிறது. எனக்கொன்றுமில்லை. நீங்கள் எழுதும் விதிகளை படித்து அறிந்து ஏற்றுக் கொள்வேன். ஆனால்,பெரும்பாலான மற்றையோர்க்கு?? இன்றைய உலகில் நல்ல தமிழ் அறிந்தோருக்கு இணையத்தில் எழுதும் வாய்ப்பு இன்னமும் கிட்டவில்லை. அதிகளவில் தமிழ் படிக்காத தமிழர் வாழும் காலம் இது. விக்கிப்பீடியாவில் அவர்களையும் ஈர்க்கவேண்டுமெனில், பெரும்பாலோர் பயன்படுத்தும் சொல்லை ஏற்கலாம். சிலவற்றை வழுவமைதி என்று ஏற்றுக்கொண்டுவிடலாமே? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:54, 23 சூன் 2013 (UTC)Reply

பிழையாகப் பயன்படுத்தப்படும் அத்தகைய சொற்களைச் சரியான சொற்களுக்கு வழிமாற்றாக வைக்க வேண்டுமே தவிர அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு வழிமாற்று ஏற்படுத்தும் போது அவ்வாறு பிழையான சொல்லைக் கொண்டு தேடுவோர் கண்டறியவும், சரியான சொற்களின் பக்கம் வழிகாட்டவும் உதவும். மாறாக, பிழையான சொற்களை அவ்வாறே பயன்படுத்தவது ஏற்புடையதன்று.--பாஹிம் (பேச்சு) 07:36, 23 சூன் 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உள்நாட்டுப்_போர்&oldid=2277943" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உள்நாட்டுப் போர்" page.