பேச்சு:ஊட்டியார்

ஒரு வேண்டுகோள்

சங்கத்தொகை நூல்களின் பாடல் எண்ணைக்கொண்டு பொருளைத் தேடுவதற்கு ஏந்தாகச் சில தொகுப்புகளை அமைத்துத் தந்தால் பாடல் எண்ணை அதனோடு நான் இணைத்துவிடுவேன். அல்லது தாங்களும் இணைத்து உதவலாம்.

தொகை நூல்கள் எட்டுக்கும் இந்தத் தொகுப்புப் பக்கம் தேவை. அந்தப் பக்கங்கள் இவ்வாறு அமையின் நலம்.

அகநானூறு - பாடல் - எண் வரிசை - தொகுப்புச் செய்தி
கடவுள் வாழ்த்து
1 | 2 | 3 | ... | 20 |
21 ...
இப்படி எல்லாப் பாடல்களுக்கும், எட்டு நூல்களுக்கும்.

இதனால் நற்றிணை 99 என்னும் எண்ணைத் தட்டி அதன் செய்தியை எளிதில் உணரமுடியும். இதுபோன்று அனைத்துப் பாடல்களையும் தேடலாம்.

அனைத்துப் பாடல்களின் செய்திகளையும் தருவது என் திட்டம்.

அன்புள்ள --Sengai Podhuvan 11:53, 7 அக்டோபர் 2010 (UTC)Reply

செங்கைப்பொதுவன், இது போன்றவற்றைப் பதிவேற்றுவதற்கு விக்கிமூலமே சிறந்த தளமாகும். அங்குஇங்கு கலைக்களஞ்சியத் தலைப்புகளில் மட்டுமே கட்டுரைகள் எழுதுவது நலம். -- சுந்தர் \பேச்சு 12:33, 7 அக்டோபர் 2010 (UTC)Reply

சுந்தர் பெருந்தகைக்கு வணக்கம். தாங்கள் தமிழுக்குச் செய்துவரும் அளப்பருந் தொண்டுகளையும், தாங்கள் விக்கியில் வழங்கியுள்ள அண்டம் பற்றிய கட்டுரையையும் படித்தேன். பொருண்மையிலும், காலத்திலும் முப்பரிமானம், லெப்டான் விளக்கம், புராணம், தந்துவம் என்னும் தெளிவான பாகுபாடு, அறிவியல் கோணம் ஆகியவற்றோடு வடித்திருந்த அந்தக் கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது.

அகவையில் முதிர்ந்த நான் எனது பட்டறிவை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறேன். பழந்தமிழைப் படிப்போர் அருகிவரும் காலத்தில் அதனைப் பற்றி ஆழமாக எண்ணி அதன் சுவையையும், அதனுள் பொதிந்துகிடக்கும் பண்பாட்டையும் நுகர்வோர் யார்?

விக்கி மூலம் பகுதியைப் பார்த்தேன். மூலமும் உரையும் அமைந்துள்ள பகுதியையும் பார்த்தேன். பாடலுக்கு உரை ஆற்றொழுக்காக அதில் உள்ளது. பாடலிலுள்ள செய்தியைத் திரட்டித் தரும் எனது பாங்கு பலாப்பழத்தைச் சுளையாக்கித் தருவது.

விக்கி மூலத்தில் நான் எந்த வகையில் இணையமுடியும் என்று வழி காட்டுங்கள்.

விரும்பினால் என் e-mail: podhuvan@gmail.com -ல் தொடர்பு கொண்டால் நலமாக இருக்கும்.--Sengai Podhuvan 16:34, 7 அக்டோபர் 2010 (UTC)Reply

ஐயா, வணக்கம். இப்போதுதான் உங்கள் பயனர் பக்கத் தகவல்களைப் படித்து மகிழ்ந்தேன். உங்களைப் போன்ற பட்டறிவு மிகுந்தவர்கள் நம் தளத்துக்கு பெரிதும் வளம் சேர்க்க முடியும். நிற்க.
அருள் கூர்ந்து என்னைப் பெருந்தகை என்றெல்லாம் அழைக்க வேண்டாம். அகவையில் மிகச்சிறியவன் என்பதற்காக மட்டுமல்ல. இங்கு நாம் பின்பற்றும் மரபு, அனைவரும் ஒருவரையொருவர் அகவை வேறுபாடு காணாமல் பெயர் சொல்லி, அதே வேளையில் மதிப்புக் குறையாமல் விளிப்பதே. உங்களையும் பிறர் பெயர் சொல்லி அழைத்தால் மனங்கோண வேண்டாம்.
மேலும் தகவல்களை உங்கள் பேச்சுப்பக்கத்தில் இடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 03:11, 8 அக்டோபர் 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஊட்டியார்&oldid=608160" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஊட்டியார்" page.