பேச்சு:எஸ்டேட் பாய்ஸ்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

எசுரேற் போய்சு (ஆங்கிலம்: Estate Boys)என்பது தவறான எழுத்துக்கூட்டல். இதன் தமிழ் ஒலிப்பு esurayt poysu. யாழ்ப்பாணத்தில் ரகரத்தை பல்லணை நுனிநா ஆக்கில 'டகரமாக'க் கொண்டாலும் சூழ்ந்து வரும் சு என்னும் எழுத்துக்கு அருகே அப்படி வருதல் கூடாது. அவசரமாக, அபசுரமாக போன்ற வேற்றுமொழிச்சொற்களிலும், ஆசிரியர், அசராது (அயராது), உசிர வச்சி இருக்கேன் (உயிரை வைத்து இருக்கின்றேன்), கொசுரு (கொசுறு), சுருசுருப்பாய் போன்ற தமிழ்ச்சொற்களிலும் சகரத்துக்கு அடுத்துவரும் ரகரம் டகரமாக ஒலிக்காதையும், அதுவும் வலுத்து பல்லணை நுனிநா ஆங்கிலட் டகரமாக ஒலிக்காதையும் நோக்கலாம். எசிட்டேட்டு பாய்சு என்றோ எசிட்டேட்டு போய்சு என்றோ எழுதலாம், அல்லது எசுட்டேட்டு என்று எழுதலாம். தமிழ்ல் சீர்மையின் தேவையை அருள்கூர்ந்து எண்ணிப்பாருங்கள். பல்லணை நுனிநா டகரத்தில் தொடங்கும் ஆங்கிலச் சொற்களை மிகப்பெரும்பாலான ஐரோப்பியர்கள் தமிழ்த்தகரத்துக்கு ஏறத்தாழ ஒப்பாகவே ஒலிக்கின்றனர். Temperature என்பதை ஏறத்தாழ தெம்ப்பராத்தூரா (எசுப்பானியம்), தம்ப்பஃறாத்யூஃற் (température /tɑ̃.pe.ʁa.tyʁ/ என பிரான்சியத்திலும் சற்றே வேறாக பிறமொழிகளும் ஒலிக்கின்றனர். முதல் எழுத்தாக "t" வரும் இடங்களில் தமிழ் தகரத்தைப் பயன்படுத்தலாம். இதுவே நெடுங்கால (சரியான) வழக்கமும். எங்கெல்லாம் வல்லினம் போல் அழுத்தமாக ஆங்கிலத்திலோ பிறமொழிகளிலோ ஒலிக்க வேண்டுமோ, அவ்வொலிகள் தமிழில் வேண்டும் எனில் (கட்டாயம் வேண்டும் என்று எந்த விதியும் நெறியும் கிடையாது), புள்ளிவைத்த வல்லின எழுத்து இட்டுப் பிறகு உயிர் ஏறிய வல்லின எழுத்தை எழுத வேண்டும். ஆங்கிலத்தில் open, happen என்ற இரன்டு சொற்களுக்கும் இடையே வரும் பகர ஒலிப்பு (-ப்பெ- ) என்பதுதான். அகராதியைப் பாருங்கள் இரண்டு pp இருந்தாலும் ஒரே p இருந்தாலும் அதே ஒலிப்புதான் இந்த சொற்களில். தமிழானது எழுத்துச்சூழல் சார்ந்து சீரொழுக்கமான ஒலிப்பு கொண்டு எழுதும் மொழி. இதனைக் காப்பது தேவை. பிற இந்திய மொழிகளில் ஓரெழுத்துக்கு ஒரே ஒலிதான். இந்த வேறுபாட்டை நினைவில் கொள்ளல் வேண்டும். --செல்வா (பேச்சு) 09:45, 7 சனவரி 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எஸ்டேட்_பாய்ஸ்&oldid=1389803" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "எஸ்டேட் பாய்ஸ்" page.