பேச்சு:கட்டுடைய அணுக்க முறைமை

திருத்தம் தேவை தொகு

த.வி.யின் கட்டுரைகளின் "வரலாற்றைக் காட்டவும்" பொத்தானைச் சொடுக்கும்போது தோன்றுகின்ற பக்கத்தில் "முந்தைய" என்னும் சொல் உள்ளது. வேறு இடங்களிலும் அச்சொல் வருகிறது. அது "முந்திய" என்று திருத்தப்பட வேண்டும்.

பிந்துதல் என்பதிலிருந்து பிந்து, பிந்திய, பிந்துகிற பிறப்பதுபோன்று, முந்துதல் என்பதிலிருந்து முந்து, முந்திய, முந்துகிற எனும் சொற்கள் பிறக்கும். எனவே, பிந்தைய, முந்தைய எனும் சொல்வடிவங்கள் தவறு.

இன்று, இன்றைய, இற்றைய; அன்று, அன்றைய; நேற்று, நேற்றைய; நாளை, நாளைய என்பவை வேறு மூலங்களிலிருந்து பிறக்கின்றன.

நிர்வாகிகள் இத்திருத்தத்தைச் செய்யுமாறு வேண்டுகிறேன். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 11:46, 13 சனவரி 2013 (UTC)Reply

இதனை படியெடுத்து ஆலமரத்தடி தொழில்நுட்பப் பகுதிக்கு மாற்றியுள்ளேன்.--மணியன் (பேச்சு) 03:34, 14 சனவரி 2013 (UTC)Reply
Return to "கட்டுடைய அணுக்க முறைமை" page.