பேச்சு:கண்புரை அறுவைச் சிகிச்சை

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani

அரவிந்த் கண் மருத்துவமனை ஒரு நாளில்700-800 கண் அறுவைசிகிச்சையை தவறில்லாமல் செய்கிறது. அதுவும் இலவசமாக. இது சத்தமே இல்லாமல் நடக்கும் உலக சாதனையல்லவா? என் அம்மா கூட, இரு கண்களையும் அங்கு தான் செய்தார். அது பற்றிய (அரவிந்த் கண் மருத்துவமனை) கட்டுரையை, படங்களுடன் விரிவுபடுத்துங்களேன்.தேனீ! எனக்கு இங்கிருந்து அங்கு செல்ல, 7மணிநேர பயணம் என்பதால் தங்களைக் கேட்கிறேன்.3 நாட்களை இழக்க நேரிடும். தங்கள் ஊரிலிருந்து பக்கமென்றே எண்ணுகிறேன்.01:30, 9 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

  • தேனியில் அரவிந்த் கண் மருத்துவமனை உள்ளது. அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் மறைந்த டாக்டர்.ஜி.வெங்கிடசாமி தேனி அருகிலுள்ள அம்பாசமுத்திரம் என்ற ஊரைச் சேர்ந்தவர்தான். இந்த மருத்துவமனையின் முக்கியப் பொறுப்பிலிருப்பவர்கள் கூட இந்தப் பகுதியினர்தான். இருப்பினும் அடையாள அட்டை எதுவுமின்றி அவர்களைச் சந்தித்து செய்திகளைப் பெறுவது இயலாது. இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாக இருக்கும் குறிப்பேடு அவர்களது தேனி அலுவலகத்தில் பெற்றது. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:41, 9 சூலை 2011 (UTC)Reply

பல ஆண்டுகளுக்கு முன், வெங்கிடசாமியின் நேர்காணலை பொதிகையில் கண்டேன். என்ன ஒரு திட்டத் தெளிமை. இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கும் திட்டம். தங்கள் தகவலுக்கு நன்றி.எங்கள் வட்டத்திலிருந்து (ஆத்தூர் (சேலம்)), வருடத்திற்கு2000-2500நபர்களுக்கு இலவச கண் சிகிட்சை தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மூலம், (உணவு, இருப்பிடம், மருத்துவ செலவுகள் உட்பட) செய்கிறார்கள். அதில் என்னால் முடிந்த களப்பணிகளை, ஊரில் இருந்தால் செய்வதுண்டு. அடுத்த முறை நடக்கும் போது, படமெடுத்து இடுகிறேன். மதுரையின்னா, மதுரைதான்.வணக்கம்07:40, 9 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

Return to "கண்புரை அறுவைச் சிகிச்சை" page.