பேச்சு:கதிரவன் கிருட்ணமூர்த்தி

ஒரு விவரமும் இல்லாமல் கட்டுரை இருப்பதை சுட்டி காண்பித்தால், அந்த பேச்சை இங்கிருந்து எடுப்பது எதையோ மறைப்பது போல ஆகும். திண்ணை கட்டுரைகளில் இவர் பெயர் கதிரவன் கிருஷ்ணமூர்த்தி என அறியப் படுகிறார். அதனால் அப்படியே பெயர் எழுத பரிவு. விக்கி புது பெயர்கள் கொடுக்கும் தளமல்ல.--217.28.2.87 16:58, 28 பெப்ரவரி 2009 (UTC)

தமிழ் என்பதை ஏன் ஆங்கிலேயர் Tamil என்று எழுதினார்கள்? நாம் ஏன் அதை அப்படியே ஏற்றுக் கொண்டோம்? ஏன் Thamil என்று கூட எழுத முற்படவில்லை? தமிழ்ப்பெயரை மாற்ற ஆங்கிலேயன் யார்?--ரவி 17:24, 28 பெப்ரவரி 2009 (UTC)
இது நேரம் வீணாக்கும் வாதம். ஒரு தமிழரரின் பெயர், எப்படி தமிழ் பதிவுகளில், அவர் விருப்பத்துடன் வந்துள்ளதோ, அதைத் தான் ஏற்க்க வேண்டும்.--217.28.2.87 23:39, 28 பெப்ரவரி 2009 (UTC)

//எதையோ மறைப்பது போல ஆகும்// நற்கீரன், நீங்கள் எந்தப் பக்கத்துக்கு நகர்த்தி உள்ளீர்கள் என்று தொடுப்பு தரலாம். இயன்ற அளவு அப்படி நகர்த்தாமல் இருப்பது நன்றி. ஆவணப்படுத்தல் காரணங்களுக்காக அவை இங்கு இருந்திருப்பதே நன்று--ரவி 17:32, 28 பெப்ரவரி 2009 (UTC)

விக்கிப்பீடியா பேச்சு:வாழ்க்கை வரலாறு எழுதல் கையேடு --Natkeeran 17:34, 28 பெப்ரவரி 2009 (UTC)
கதிரவன் ஏன் ஸ்பெசல் என்று கேட்டிருந்தார். ஆயிரம் பேர் பற்றி மண்ணாங்கட்டி கட்டுரை இருக்க இந்தக் கட்டுரையை தேர்ந்து கேப்பது ஏன்? அதன் நுண்அரசியல் என்ன? அவ் உரையாடல் அந்த நபர் பற்றி அமையாமல் பொதுவாக அமைய வேண்டும். இது பற்றி பல இடங்களில் அலசி ஆகிவிட்டது. மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகா... --Natkeeran 17:37, 28 பெப்ரவரி 2009 (UTC)
ஆயிரம் மண்ணாங்கட்டி கட்டுரைகள் (இது என் வார்த்தை அல்ல)இருப்பதனால் ஏன் ஆயிரத்தொன்றாவது மண்ணங்கட்டி இருக்கக் கூடாது என நர்கீறன் கருதுவது சரியில்லை. மேலும் “இதே துறைசார் நூல் ஒன்றும் விரைவில் வெளிவர இருக்கிறது.” என கட்டுரையில் ஜோசியம் கூறியுள்ளர். அதன் ஆதாரம் என்ன? விகி கட்டுரைகளுக்கு ஜோசியம் தேவைதானா?--217.28.2.87 00:11, 1 மார்ச் 2009 (UTC)

217.28.2.87 க்கு த.வி மீது மிகுந்த அக்கறை. அதனாலயே ஏகப்பட்ட கேள்விகள் கேட்கிறார். அவர் ஒரு பயனர் கணக்கு தொடங்கி த.விக்கு நிறைய கட்டுரைகள் ஏன் எழுத கூடாது? என்று கேட்பதில் நியாயம் இருந்தாலும் அவருக்கு குறை கண்டுபிடிப்பதில் உள்ள ஆர்வம் கட்டுரை எழுதுவதில் இல்லை என்று முடிவு செய்யாதீர்கள். ஒரு கட்டுரை எழுதும் போதே அதில் ஏகப்பட்ட தகவல்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார், அவர் எழுதினால் அப்படிதான் எழுதுவார் அதனாலயே எழுதாமல் இருக்கிறார் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

Return to "கதிரவன் கிருட்ணமூர்த்தி" page.