பேச்சு:கன்வர்ட்டிபிள் மார்க்கு

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இதனை கன்வர்ட்டிபிள் மார்க் என்று மட்டும் குறித்தால் போதுமே? பல மொழிகளில் அப்படிக் குறிக்கிறார்களே? எ.கா: போலந்து (Marco conversível), நோர்வே (Konvertibilna mark), உக்ரைன் (Конвертована марка), சுவிட்சர்லாந்து (Konvertibilna marka). இன்னும் சிலர் பொசினியா என்னும் பெயரை மட்டும் கொண்டுள்ளனர், எ.கா: அங்கேரி (Bosnyák konvertibilis márka), உருசியா (Боснийская конвертируемая марка). எனவே கீழ்க்காணும் மூன்றில் ஒன்றைப் பரிந்துரைக்கின்றேன்:

  1. கன்வர்ட்டிபிள் மார்க்கு (மற்றவர்கள் மார்க்கா என்னும்பொழுது நாம் மார்க்கு எனலாமே :) )
  2. பொசினியா கன்வர்ட்டிபிள் மார்க்கு
  3. பொசினியா எர்ச்செகோவினா கன்வர்ட்டிபிள் மார்க்கு

(ஆங்கில விக்க்கியில் கொடுத்துள்ளபடி, பொசினினியா (/பாசினியா), குரோவேசியா, செர்பியா மொழியிலேயே (இலத்தீன் எழுத்துகளில் konvertibilna marka என்றும், சிரிலிக் எழுத்தில் конвертибилна марка (கொன்வெர்(ட்)டிபில்னா மார்க்கா) என்றும்தான் எழுதியுள்ளனர்: மூலம்: The Bosnia and Herzegovina convertible mark (Bosnian, Croatian and Serbian Latin: konvertibilna marka, Serbian Cyrillic: конвертибилна марка)

ஆகவே நாம் எளிமையாக மேலே குறிப்பிட்டுள்ள மூன்று தேர்வுகளில் ஒன்றைத் தலைப்பாக ஏற்றுக் கொள்ளலாமா?

--செல்வா 17:53, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கன்வர்ட்டிபிள் மார்க்கு என்ற தலைப்பிற்கு மாற்றி விட்டேன். ஒன்றுக்கும் மேற்பட்ட மார்க்குகள் புழக்கத்திலிருந்த போது வைத்த பெயெரென்பதால் நாடு பெயர் கொண்டு வேறுபடுத்திக் காட்டியுள்ளனர் என்று நினைக்கிறேன். இப்போது டாய்ச்சு மார்க் யூரோ வைற்றுக்குள் போய் விட்டதால் ஒரே ஒரு மார்க்கு மட்டும் உள்ளது. இதனால் நாம் நாட்டுப் பெயரைத் தூக்கி விடலாம் :-) --சோடாபாட்டில் 18:10, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply
மிக்க நன்றி சோடாபாட்டில்! உங்கள் விரைவு வியப்பூட்டுகின்றது! அதாவது கூடியம்மட்டிலும் எளிமையாக இருந்தால் சொல்வதற்கும், எழுதுவதற்கும் நன்றாக இருக்குமே என்பதுதான். மேலும், கன்வர்ட்டிபிள் என்னும் முன்னொட்டு இருப்தால் அது முன்பிருந்த இடாய்ச்ச மார்க்கில் இருந்த்து வேறுபடுத்திக்காட்டும் (யூரோவில் உள்வாங்கப்படாமல் இருந்தாலும்). பல நாட்டுக் காசாக அச்சடிக்கின்றீர்கள் போலத் தெரிகின்றது :) (அதாவது விக்கிக்காக தட்டச்சு செய்கின்றீர்கள் என்கிறேன் :)). --செல்வா 18:17, 13 செப்டெம்பர் 2010 (UTC)Reply
Return to "கன்வர்ட்டிபிள் மார்க்கு" page.