கம்பளி யானை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கவரி யானை என்பது நல்லொதோர் சொல்லாக இருக்கும். கவரி என்பது முடி நிறைந்திருப்பதைக் குறிக்கும். இமயமலையில் வாழும் யாக் (yak) என்பது தமிழில் கவரிமான் என அழைக்கப்படுகின்றது. இது நரந்தை புல்லை உண்டும், பனிமலைப்பகுதியில் வாழ்வது என்று தெளிவான குறிப்புகள் உண்டு. கவரி வீசுதல் என்பதையும் கேள்விப்பட்டிருக்கலாம். கவரி என்பது முடியால் செய்த விசிரி அல்லது சாமரம். காற்று வீச அக்காலத்தில் கவரி வீசுவர். கவரி யானை என்பது பொருத்தமான பெயர். கம்பளிப் பூச்சி, கம்பளிப் புழு என்பது போல கம்பளி யானை என்றும் சொல்லலாம். கம்பளி என்பது கம்பளம் என்னும் ஆட்டின் பெயரில் இருந்து வந்தது என நினைக்கின்றேன். சிம்பு என்றால் மிக மெல்லிய சிராம்பு எனும் பொருள் இருந்தாலும், சிம்பு என்றால் நுண்ணிய் மயிர் (விலங்கின் உடம்பிலோ, தளிர் இலையிலோ உள்ள மயிர்) என்றும் பொருள். சிம்புளி என்றாலும் உடல்முடியைக் குறிக்கும். ஆனால் இங்கே கவரியானைக்குப் பொருந்துமா என்பது ஐயப்பாடே. --செல்வா 01:49, 4 பெப்ரவரி 2011 (UTC)

கட்டுரை ஒன்றிணைப்பு தொகு

இக்கட்டுரை மாமூத் என்ற கட்டுரையுடன் ஒன்றிணைக்கப்படவேண்டும். --Prash 03:29, 6 செப்டெம்பர் 2011 (UTC)Reply

இது en:Mammuthus primigenius என்ற குறிப்பிட்ட இனத்தைப் பற்றியது. மாமூத் கட்டுரை Mammuthus பேரினத்தில் வரும் அனைத்து இனங்கள் பற்றியான பொதுவான கட்டுரை. எனவே இரண்டையும் இணைக்கத் தேவையில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 04:13, 6 செப்டெம்பர் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கம்பளி_யானை&oldid=866677" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கம்பளி யானை" page.