பேச்சு:காய்சின வழுதி

இதற்கு மேல் இவனைப் பற்றிய வரலாற்றுச் செய்தி இல்லை. மேலும் விரிவாக்கின் அது கட்டுக்கதை ஆகிவிடும். எனவே இக் கட்டுரையின் மேல் இடப்பட்டுள்ள விக்கிக் குறியீட்டை நீக்க வேண்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 09:40, 16 திசம்பர் 2012 (UTC)Reply

காய்சின வழுதி பற்றிய முழுவதும் ஆராயும் வரை இந்த குறியீடுகள் இருக்கட்டுமே. இக்குறியீடுகள் இருப்பதனால் நீங்கள் ஐயம் கொள்ளவேண்டாம். மற்றவர்களை தங்களுடன் இணைந்து ஒரு கட்டுரைக்கு பணியாற்ற அழைப்பதே இந்த குறியீடுகள் வைக்கப்படுகின்றன. நன்றி - Vatsan34 (பேச்சு) 13:51, 12 மே 2013 (UTC)Reply

இந்தக் குறி இக் கட்டுரைக்கு இனித் தேவை இல்லை. மேலும் எழுதினால் அது புனைந்துரை, கட்டுக்கதை வேண்டுமா? --Sengai Podhuvan (பேச்சு) 06:36, 13 மே 2013 (UTC)Reply

//காய்சின வழுதி பற்றி ஆராயப்படும் வரை//

இதற்கு நீண்ட காலமாகும். முதலில் கடைச்சங்கத்தின் இறுதி பகுதியான கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து (250) எடுத்துக் கொண்டால் கி.மு. 9740 ஆம் ஆண்டு இவன் சங்கம் ஏறினான் எனக் கொள்ளனும். அப்போது மொழியே இல்லை என்ற பதில் தான் முதலில் வரும். இதை தொன்மவாகவே ஆய்வாளர் கருதுகின்றனர். இதற்கு மேலதிக சான்றுகளை சேர்ப்பது மிகக்கடினம். இவனைப் பற்றிய புதினம்/திரைப்படம் இனி எழுதப்/எடுக்கப்படுமாயின் அப்போதே இதற்கு உள்ளடக்கங்கள் கூட வாய்ப்பு உண்டாகும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:58, 14 மே 2013 (UTC)Reply

படிப்பவர் அனைவருக்கும் தென் மதுரை என்று படித்தால் குழப்பம் வரலாம். மாற்றியதற்கு நன்றி.

\\பாதுகாப்பாக இருக்கலாமே\\

புரியவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:36, 14 மே 2013 (UTC)Reply

  • வைகைக் கரையிலுள்ள மதுரையை யார் யார் தென்மதுரை என்கின்றனர் என்பதைக் காட்டுவதே தரப்பட்டுள்ள இணைப்புகள். வடமதுரை என்பது அவர்கள் பார்வையில் வடமாநித்திலுள்ள மதுரா. எனவே குழப்பம் இல்லாதிருக்க நீங்கள் தென்மதுரை எனக் குறிப்பிட்டிருந்ததைத் தென்மதுரை (குமரிக்கண்டம்) என மாற்றியுள்ளேன். அவ்வளவுதான். --Sengai Podhuvan (பேச்சு) 12:46, 14 மே 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காய்சின_வழுதி&oldid=1421717" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காய்சின வழுதி" page.