பேச்சு:கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்

தொடக்கம் தொகு

இது ஒரு காலக்கோடு ஆகும். தமிழின் தொடர்ச்சியைத் தொடுக்க ஒரு சிறு முயற்சி. ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் 25 அறிஞர்கள் என்று மேல் வரம்பு வைப்பது நல்லதா ??? --Natkeeran 02:38, 18 டிசம்பர் 2006 (UTC)

அப்படி செய்தால் பின்னர் 25 பேருக்கு மேல் வரும் போது யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற வாக்குவாதம் எழ வாய்ப்புண்டு. மேலும் தவியில் மேல் எல்லைகளை ஆக்க வேண்டாமே "ஆகயமே நமக்கு எல்லையாக இருக்கட்டும்". எல்லோரையும் இணைக்கலாம் அளவு கூடினால் அப்பகுதியை வேறு புதிய கட்டுரையாக நகர்த்திவிட்டு அதற்கான இணைப்புடன் ஒரு சிறிய விளக்கத்தை மட்டும் இங்கு வைக்கலாம்.--டெரன்ஸ் \பேச்சு 04:47, 18 டிசம்பர் 2006 (UTC)
அப்படியே செய்யலாம். --Natkeeran 01:18, 1 ஜனவரி 2007 (UTC)


பிறப்பின் திகதியை வைத்து நூற்றாண்டுக்குள் இடுவதை கொள்ளலாமா? --Natkeeran 01:16, 1 ஜனவரி 2007 (UTC)

தனிப்பட்ட ரீதியில், இந்தக் காலக்கோட்டின் ஒரு குறிக்கோள் என்ன வென்றால் 1400-1800 வரை தமிழ் அறிஞர்களை அடையாளம் காணுவதுதான். ஏன் என்றால் இந்தக் காலப்பகுதி வரலாறு அவ்வளவு தெளிவாக இல்லை. --Natkeeran 01:20, 1 ஜனவரி 2007 (UTC)

காலம் தற்போது அறியப்பாடத அறிஞர்கள் தொகு

தமிழ் அறிஞர்கள் தொகு

இக்கட்டுரை மொழி ஆராய்ச்சியாளர்கள், கவிஞர்கள் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது. கட்டுரையின் நோக்கமே இதுதான் எனில் அறிஞர் என்ற சொல் இருவரையும் குறிக்குமா எனப் பார்க்க வேண்டும். எனக்கு இதில் தெளிவு இல்லை. செல்வா உதவக்கூடும். --Sivakumar \பேச்சு 04:13, 13 ஆகஸ்ட் 2007 (UTC)

ஆமாம். சிவக்குமார். புலவர்கள், பண்டிதர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், ஆளுமைகள் என்று சற்று சிக்கலான குளப்பம். புலவர், பண்டிதர் என்பது ஆற்றல் நிரூபிக்கப்பட்டு, பரீட்சை எழுதி பெறப்பட்டது. மற்றயவை அப்படியல்ல. எல்லோரையும் பட்டியலிடுவதை விட, எனக்கு ஆர்வம் தொடர்ச்சியை நிரூபிப்பதுதான். குறிப்பாக ஒவ்வொரு நூற்றாண்டிலும் குறைந்தது 25 தமிழ் அறிஞர்களை அடையாளப்படுத்துவதுதான். --Natkeeran 22:37, 13 ஆகஸ்ட் 2007 (UTC)
நான் விடுப்பில் இருந்தேன். கவிஞர்கள்/பாவலர்கள், எழுத்தாளர்கள் (கதை, கட்டுரை, புத்தகங்கள், ஆய்வு நூல்கள்) முதலிய பிரிவுகளில் வகைப்படுத்தி பதிவு செய்யலாம். 18 ஆம் நூற்றாண்டுக்கும் முன் இருந்த தமிழ்றிஞர்கள், எழுத்தாளர்களை பதிவு செய்தல் முக்கியம்.--செல்வா 19:02, 4 செப்டெம்பர் 2007 (UTC)Reply

பெண் தமிழ் அறிஞர்கள் தொகு

சிறந்த பெண் தமிழ் அறிஞர்களாக அறியப்பட்டோர் விபரங்கள் அரிதாகவே கிடைக்கின்றன. கவனம் தந்து தகவல் சேர்த்தால் நன்று. --Natkeeran 22:37, 13 ஆகஸ்ட் 2007 (UTC)

காலக் கோட்டின் இன்றைய நிலை தொகு

  • தற்போது தமிழ் மொழியின் வரலாற்றில் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வுகளை தெளிவுபடுத்த உதவும் என்பது தெளிவாகின்றது.
  • தமிழ் மொழியின் வரலாறு தனிமனிதர்களின் வரலாறு இல்லை, அது ஒரு மனிதக்கூட்டத்தின் வரலாறு. 1500 களில் கிறிஸ்தவ பங்களிப்பு, 900 - 1300 சோழர்களின் காலம், அதற்கு முந்தைய பக்தி காலம், அதற்கு முந்தைய நீதி இலக்கிய காலம், சங்க காலம், 1800 கள், 1900 கள் என நபர்கள் ஊடாக தமிழ் மொழியின் குரலைக் கேட்க கூடியதாக உள்ளது.
  • பெண்களின் பங்களிப்பு ஏன் இங்கு இல்லை அல்லது ஒன்று இரண்டே என்பது மிக முக்கிய கேள்வியாக இருக்கின்றது.
  • தமிழக பாடப் புத்தகங்களில் சங்க காலத்துக்கும் தற்காலத்துக்கும் தொடர்பைச் சுட்டினாலும், தமிழின் இடைப்பட்ட வரலாற்றை, தொடர்ச்சியை அவ்வளவு தெளிவாக கோடிட்டு காட்டவில்லை என்றே தோன்றுகின்றது. இந்தக் காலக் கோட்டின் ஊடாக அந்தத் தொடர்ச்சியை பதிர்வு செய்ய உதவினால் நன்று.
  • குறைந்தது 25 நபர்களாவது ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் சேர்க்கப்படவேண்டு.
  • சிகப்பு இணைப்புகள் கட்டுரைகளாக ஆக்கப்படவேண்டும்.
  • இணைக்கப்பட்ட ஆளுமைகள் தகுந்தனவா என்பதும் மீள்பரிசீலிக்க வேண்டும்.

--Natkeeran 15:42, 7 அக்டோபர் 2007 (UTC)Reply

நற்கீரன், தமிழ் மின் நூலகத்தைப்] பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தமிழில் நூல்கள் ஆக்கியும் பிற வழிகளிலும் தமிழின் வளர்ச்சியில் பங்களித்த பிறநாட்டினர் பற்றி இப்பட்டியலில் உள்ளது.--செல்வா 18:16, 7 அக்டோபர் 2007 (UTC)Reply

இடைக்கால தமிழர் செவ்வியல் காலம் - சோழர் காலம் தொகு

  • காலம்: 800 தொடக்கம் முதல் - 1300 தொடக்கம் வரை. (850 - 1250: சோழரின் எழுச்சியும் வீழ்ச்சியும். மொத்தம் 400 ஆண்டுகள்)
  • சோழர் இலக்கியங்கள்
  • இக்காலப் பகுதி தமிழர் வரலாற்றில் ஒரு பொற்காலமாக, தமிழர் கலை வரலாற்றின் செவ்வியல் காலமாகவும் குறிப்பிடப்படுவதுண்டு. இந்தக் காலப்பகுதியில் தமிழ் சிறப்புற்ருந்திருக்க வேண்டும்!?!! இந்தக் காலப்பகுதியில் வாழ்ந்த தமிழ் அறிஞர்கள் பற்றிய தகவல்கள் தரும் நூற்கள்/ஆதாரங்கள் எவை? அந்த தகவல்களைச் சேர்த்தால் நன்று. --Natkeeran 17:46, 8 அக்டோபர் 2007 (UTC)Reply


தமிழின் தொடர்ச்சி - சில எண்ணங்கள் தொகு

இது ஒரு மாணவனின் பார்வையே...தகவல் சேகரிப்பின் இடையில் நின்று.

இதுவரை சேர்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழின் தொடர்ச்சி பற்றி சில எண்ணங்கள் இக்குறிப்பில் பகிரப்படுகின்றது.


தமிழின் தொடர்ச்சி இலக்கிய நோக்கில் மட்டுமல்லாமல் இலக்கண நோக்கிலும் இருந்து வருகின்றது. ஐந்திலக்கணத்தின் (எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி) மரபு நூற்றாண்டுகள் கடந்து ஆயப்பட்டது இதற்கு நல்ல சான்று. உரையாசிரியர்கள் முன்னைய மூலங்களை சுட்டி, தங்களின் காலப்பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களைப் பிரதிபலித்து உரை எழுதியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கண நூலான வீரசெழியம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இங்கு வடமொழிச் சொற்கள் துணைகொண்டு தமிழ்மொழி இலக்கணம் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பாரதி ஐந்திலக்கணத்தையும் அவனுக்கே ஏற்ற முறையில் சொல் புதிது, பொருள் புதிது, முறை புதிது, நடை புதிது என்று குறித்தது மரபின் தொடர்ச்சியை சுட்டுகின்றது.


தமிழில் தொகுத்தல் முயற்சிகள் வரலாற்றின் பல கால கட்டங்களில் இடம்பெற்றிருப்பது தமிழின் தொடர்ச்சிக்கு இன்னுமொரு சான்று. பன்னிரு பாட்டியல், நம்பியாண்டவரின் தேவரத் திரட்டு போன்றவை இவற்றுக்கு எடுத்துக்காட்டுக்கள்.


ஒரு தொடக்க மாணவ நிலையில் இருந்து பார்க்கையில், கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள் பட்டியலை தமிழ், தமிழ்நாட்டு வரலாற்றுடன் உற்று நோக்குகையில் பல முரண்கள் எளிதில் புலப்படுகின்றன. 900 – 1200 காலம்; தமிழர் சோழப் பேரரசு என்று பறைசாற்றப்பட்ட காலப்பகுதில் தமிழின் இலக்கிய வளர்ச்சி இணையாக இருக்கவில்லையோ என்று தோன்றுகின்றது. கம்பராமாயணம் மற்றும் பெரியபுராணம் (பார்க்க: சோழர் இலக்கியங்கள்) தவிர இக்காலப் பகுதியில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி “தமிழர் செவ்வியல் காலம்" என்று குறிப்பிடத்தக்க இக்காலப்பகுதிக்கு இணையாக இல்லை. தமிழ் பக்தி இலக்கிய காலப்பகுதியை சோழர் காலப் பகுதியடன் சிலர் தவறாக இணைக்கின்றனர். தமிழ் பக்தி இலக்கிய காலப் பகுதி 600 – 900 வரை என்பதே (பார்க்க: தமிழ்ப் பக்தி இயக்கம்) பொருத்தம். எனவே சோழர் காலப்பகுதியில் ஏன் இந்த தேக்கம் என்ற இயல்பான கேள்வி எழுகின்றது.


திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற அரிதான சில படைப்புகள் 0 – 600 காலப்பகுதியில் படைக்கப் பெற்றாலும், அந்த காலப் பகுதி பற்றிய தகவல்களும் சற்று தெளிவற்றதாகவும் எதிரும் புதிருமாக அமைகின்றன. இக்காலப் பகுதி களப்பிரர், பல்லவர் காலமாகும். சமணம், பெளத்தம் போன்ற சமயங்கள் தமிழரிடையே சிறப்பு பெற்ற காலமாகும். எனவே என்னவோ தமிழின் நிலை பற்றி எதிரும் புதிருமான தகவல்கள் கிடைக்கின்றன. 200, 300 நூற்றாண்டுகளின் தமிழ் எப்படி வாழ்ந்து பற்றி தகவல்கள் அறிய ஆவல்.


1500 இருந்து 1800 வரை கிறிஸ்தவம், இஸ்லாம், மேற்கு ஆகிவற்றின் தொடர்பை தமிழில் உணரலாம். 1800 நூற்றாண்டு ஒரு மறுமலர்ச்சிக் காலப்பகுதி என்றும், 1900 நூற்றாண்டு ஒரு வளர்ச்சிக் காலப்பகுதி என்றும் கூறலாம்.


இங்கு சற்று தெளிவில்லாமல் இருப்பது 1300, 1400 நூற்றாண்டுகள். இக்காலப் பகுதியில் தமிழின் தொடர்ச்சி பற்றி மேலும் தகவல்கள் அறியப்பட்டு சேர்க்கப்பட வேண்டும்.

--Natkeeran 16:18, 22 டிசம்பர் 2007 (UTC)

குறிப்புகள் தொகு

  • Tamil - A historical and linguistic perspective [1]
  • TAMIL : ITS ASSETS AND CURRENT NEEDS - Dr. R. Jegannath [2]

--Natkeeran 17:21, 22 டிசம்பர் 2007 (UTC)

தமிழின் தொடர்ச்சி தொகு

தமிழின் தொடக்ககால இலக்கியங்களை நூற்றாண்டுகள் அடிப்படையில் துல்லியமாகக் கால வரிசைப் படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. சங்ககாலம் என்பது ஏறத்தாழ கி.பி 200 க்கு முற்பட்டதெனவும் சங்கம் மருவிய காலம் கி.பி. 200 - 600 வரையான காலப்பகுதி எனவும் பொதுவாகக் கருதப்படுகிறது. தொல்காப்பியக் காலம் முதல் இன்றுவரை சில காலப் பகுதிகளில் இலக்கிய வளர்ச்சி குன்றியிருந்தது போல் காணப்படினும் தமிழ் வளர்ந்துதான் வந்திருக்கிறது. சங்ககாலம் பெரும்பாலும் தன்னுணர்ச்சிப் பாடல்களையே அகம், புறம் போன்ற பிரிவுகளில் இலக்கியமாகத் தந்திருக்க கி.பி 200 க்குப் பிற்பட்ட நான்கு நூற்றாண்டுகளில் தோன்றிய இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க பண்பியல் வேறுபாடுகளைக் காண முடிகிறது. இக்காலப் பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தமிழ் இலக்கிய மிக முக்கியமான ஒரு வளர்ச்சிப் படியைச் சுட்டி நிற்பது கவனிக்கப்பட வேண்டியது. இவை தமிழில் எழுந்த முதற் காப்பியங்களாகக் கருதப்படுகின்றன. நிற்க, தமிழில் அற நூல்களின் வளர்ச்சியையும் இக் காலப்பகுதியில் காணமுடிகிறது. இக் காலப்பகுதியைச் சேர்ந்த கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளும், வேறு பல நூல்களும் இவ் வகையைச் சேர்ந்தவையே. இக் காலத்தில் தமிழ் இலக்கியத்தை வளம் படுத்தியவை சமண, பௌத்த சமய நூல்களாக இருக்க, பின்னர் வந்த பல்லவர்கால இலக்கியங்கள் சைவ வைணவ சமயங்களைச் சேர்ந்த பக்தி இலக்கியங்களாக உள்ளன. பிற சமயங்களுக்கு எதிராக இச் சமயங்கள் ஒரு தீர்க்கமான போராட்டத்தை நடத்திய காலமாதலால் பெருமளவிலான பக்தி இலக்கியங்கள் இக் காலப் பகுதியில் உருவானது புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒன்றுதான்.

பின் வந்த சோழர் காலமும் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சோடை போனதாகத் தெரியவில்லை. இக் காலம் பெருமளவு சமஸ்கிருதச் செல்வாக்குக்குத் தமிழிலக்கியத்துள் இடமளித்த ஒரு காலமாகவும் காணப்படுகிறது. ஐம்பெருங் காப்பியங்களில் இறுதியான மூன்றும், ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் இலக்கிய நூல்களும் இக் காலப்பகுதியைச் சேர்ந்தவையே. கம்பராமாயணமும், பெரியபுராணமும் இக் கால இலக்கியங்களில் தலையாயவை. இவை தவிரப் பரணி, கோவை, உலா முதலிய சிற்றிலக்கிய வடிவத்திலான நூல்களும் இக் காலப்பகுதியில் இயற்றப்பட்டன. பல உரை நூல்களும் இக் காலப்பகுதியில் எழுந்தன. நச்சினார்க்கினியர், சேனாவரையர் போன்ற உரையாசிரியர்களும் இக் காலப்பகுதியைச் சேர்ந்தவர்களே. தவிர பண்டைத் தமிழ் இலக்கண நூல்கள் மறு ஆய்வு செய்யப்பட்டுப் புதிய பல இலக்கண நூல்கள் எழுந்ததும் இக் காலத்திலேயே. நன்னூல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, நேமிநாதம், வீரசோழியம், தண்டியலங்காரம் முதலிய இலக்கண நூல்களும் இக் காலத்தவையே. தவிரப் பல நிகண்டுகளும் சோழர் காலத்தில் இயற்றப்பட்டவையே. திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு என்பவை இவற்றுள் அடங்குவன.

எனினும் சோழர் காலத்தில் காணப்பட்ட பெருமளவிலான சமஸ்கிருதச் செல்வாக்குப் பல துறைகளில் தமிழின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது என்பதையும் காண முடியும். எடுத்துக் காட்டாக, தென்னகத்துக்குரிய சமய தத்துவமான சிவசித்தாந்தத்துக்குரிய நூல்கள் பலவும் தமிழிலன்றிச் சமஸ்கிருதத்திலேயே எழுதப்பட்டன. அக் காலத்துத் திராவிடக் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில் எழுந்த நூல்களான மயமதம், மானசாரம் முதலிய தென்னாட்டு நூல்களும் சமஸ்கிருதத்திலேயே எழுதப்பட்டன. Mayooranathan 18:27, 24 டிசம்பர் 2007 (UTC)

நன்றி மயூரநாதன். சைவ சிந்தாந்த நூற்கள் ஆக்கப்பட்ட காலம் சோழர் காலம் என்பதை நான் சற்று கவனிக்க தவறிவிட்டேன். மேலும் நீங்கள் சுட்டியபடி தொல்காப்பியத்துக்கு உரைநூற்கள் பல எழுந்த காலமும் இந்தக் காலம் தான். நிகண்டுக்கள் பற்றிய உங்கள் குறிப்பும் சரி. வடமொழியில் செல்வாக்கு பற்றிய உங்களுடைய கூற்று சரி என்றே எனக்கும் படுகின்றது.
இங்கு நான் சுட்ட முனைவது சோழர்களை தமிழின் (மொழி நோக்கில்) எழுச்சியின் சிகரமாக பொதுவாக கூறப்படுவது எவ்வளவு பொருந்தும் என்பதே. சமயத்தின் தாக்கமே இங்கு முக்கியம் பெறுகின்றது எனலாம்.
சங்கம் மருவிய கால நீதி நூற்களை ஆக்கியவர்களைப் பற்றிய தகவல்களை தேடி சேர்க்க வேண்டும். அங்கும் உங்கள் கூற்று சரியே. 1300, 1400, 1500 நூற்றாண்டுகள் நாயக்கர் காலமாகும். அக்காலப் பகுதி தமிழிற்கு (மொழி நோக்கில்) ஒரு வளர்முக காலமாக கருதமுடியாது என்று நினைக்கின்றேன். உங்கள் கருத்து அறிய ஆவல். நன்றி. --Natkeeran 22:48, 24 டிசம்பர் 2007 (UTC)

குறிப்புகள் தொகு

அடியார்க்கு நல்லார் தொகு

அடியார்க்கு நல்லார் - சிலப்பதிகாரம் உரையாசிரியர் என்பார் 1300இன் கீழும், 1400இன் கீழும் வருகிறார். காரணம் ஏதும் உண்டா?

சுட்டிக்காட்டியதற்கு நன்றி. கட்டுரையில் உள்ளபடி 12 ம் நூற்றாண்டுக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். --Natkeeran 21:02, 30 சூலை 2011 (UTC)Reply

வருணகுலாதித்தன் மடல் தொகு

பாடியவராக காளிமுத்தம்மை மற்றும் அம்மைச்சி இருவரும் குறிப்பிடப்படுகிறார்கள் (வெவ்வேறு நூற்றாண்டுகளில்). ஒரே பேரில் இரு வேறு நூல்கள் உள்ளனவா. அல்லது இரு புலவர்களும் ஒருவரா?--சோடாபாட்டில்உரையாடுக 19:07, 20 சனவரி 2012 (UTC)Reply

உசாத்துணைக்கு உதவக் கூடிய நூல்கள் தொகு

--Natkeeran (பேச்சு) 01:55, 5 ஏப்ரல் 2014 (UTC)

Return to "கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்" page.