பேச்சு:கைம்பெண் (இந்து சமயம்)

>>மொட்டை அடிக்கப்பட்டுகிறால், வெள்ளச் சாறி உடுத்தப்படுகிறார்

இந்த சடங்குகள் சாதிக்கு சாதி /இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன என்பதைக் குறிக்க வேண்டுமே. பல சாதிகளில் மொட்டையடிக்கும் வழக்கம் கிடையாது, மேலும் பலவற்றில் வெள்ளைக்கு பதில் காவி அல்லது வேறு வர்ணங்கள் திணிக்கப்படுகின்றன. மேலும் உணவிலும் பல சமூகங்களில் கட்டுப்பாடு உண்டு. --சோடாபாட்டில் 04:25, 1 நவம்பர் 2010 (UTC)Reply

இந்து சமயத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்றால் அதன் மூலநூல்களில் இவை பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்.ஒரு சமூக வழக்கத்தை அச்சமூகத்தினர் பின்பற்றும் சமயத்தின் தலையில் கட்டிவிடுவது அல்லது சமயம் சொல்லியிருப்பதாகக் காட்டி மற்றவர்கவர்களை இதற்கெல்லாம் கட்டுப்படச் செய்வது காலகாலமாக நடைபெறும் அநியாயம். சாதிக் கோட்பாடுகளும் இவ்வாறுதான் உள்வாங்கப்பட்டன.இது தவிர ஈழம் உட்பட பல இடங்களில் இக்கட்டுரையில் கூறப்பட்ட பல நடைமுறைகள் வழக்கொழிந்து விட்டன.--சஞ்சீவி சிவகுமார் 05:10, 1 நவம்பர் 2010 (UTC)Reply
Mary Pat Fisher. (2005). Women in Religion. Toronto: Priscilla McGeehon என்ற நூலில் இது பற்றி விபரங்கள் உள்ளன. அந்த நூலை நூலகத்திடம் இருந்து மீண்டும் பெற்று, சான்று சேக்கிறேன். மேலும், நீங்கள் சுட்டிய விபரங்களை உள்ளடக்கி கட்டுரையை மேம்படுத்தலாம். --Natkeeran 23:16, 1 நவம்பர் 2010 (UTC)Reply
Return to "கைம்பெண் (இந்து சமயம்)" page.