பேச்சு:சிறுநீர்வழி

சிறுநீர்வழி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

கொஞ்சம் குழப்பமாக உள்ளது. ureter, urethra என்பவற்றில் எது சிறுநீர்க் குழாய் என அழைக்கப்படுகின்றது? எனக்கு ureter சிறுநீர்க் குழாய் என்றும், urethra சிறுநீர் வழி என்றும் படித்ததாய் நினைவுக்கு வருகின்றது. இருந்தாலும் முழுமையாகச் சொல்ல முடியவில்லை. இங்கே சிறுநீர் வடிகுழாய் என்பதற்கு urethra க்கு இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. சிறுநீர்க் குழாய் என்ற சொற்களுக்கும் உள்ளிணைப்பாக சிறுநீர் வடிகுழாய் என்ற இந்தக் கட்டுரை வழங்கப்பட்டுள்ளது. குழப்பத்தை யாராவது தீர்த்து வைய்யுங்கள்.--கலை (பேச்சு) 15:06, 1 நவம்பர் 2012 (UTC)Reply

இலங்கையில் பாடநூல்களில் Ureter - சிறுநீர்க்கான் என்றும், Urethra - சிறுநீர்வழி என்றும் இருப்பதாக அறிந்தேன். எனவே Ureter ஐ சிறுநீர்க்குழாய் அல்லது சிறுநீர்க்கான் என்றும், Urethra வை சிறுநீர்வழி என்றும் அழைப்பது சரியென நினைக்கின்றேன். மேலும், இங்கே சிறுநீர்க்குழாய் என்றிருந்தது சிறுநீர் வடிகுழாய் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. Urethra, Ureter இரண்டில் எந்த ஒன்றிலும் வடித்தல் செயல்முறை எதுவும் நடைபெறுவதில்லை ஆதலாலும், அவை சிறுநீரை கடத்துவதற்கு அல்லது காவிச்செல்லுவதற்கே உதவுவதாலும், அவற்றிற்கு சிறுநீர் வடிகுழாய் என்பது பொருத்தமற்றதாகவே தோன்றுகின்றது. கருத்துக்களை அறிந்து மாற்றங்களைச் செய்யலாம் என நினைக்கின்றேன்.--கலை (பேச்சு) 15:26, 14 நவம்பர் 2012 (UTC)Reply
கலை, எனது உயிரியல் அறிவு மிக மேலோட்டமானது. எனவே உங்களைப் போன்ற உயிரியல் திட்டப் பயனர்கள் சரியான தலைப்பிற்கு மாற்றி விடுங்கள். நான் உசாத்துணையாகக் கொள்ளும் விக்சனரியிலும் வேண்டிய மாற்றங்களைச் செய்து விடுங்கள்.--மணியன் (பேச்சு) 16:38, 14 நவம்பர் 2012 (UTC)Reply

கலை கூறியது போன்று, urethra என்பதற்கு (தமிழ் விக்சனரியில் கொடுக்கப்பட்டிருப்பது போல) சிறுநீர் வடிகுழாய் என்று குறித்தல் ஆகாது. எனது பரிந்துரை:

  • Ureter - சிறுநீர்க்குழாய் ,
  • Urethra - சிறுநீர்ப்பைக் குழாய் ((தமிழ் விக்சனரி) (அ) சிறுநீர்க்கால்வாய் (தமிழ்நாடு பாடப்புத்தகப்படி) (அ) சிறுநீர்வழி

Ureter-ஐ சிறுநீரக நாளம் என்று தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் உள்ளது. ஆனால் சிரை (vein) என்பதற்கு நாளம் என்றும் பயன்படுத்தப்படுவதால் அதைத் தவிர்க்கலாம். (Renal vein = சிறுநீரக நாளம் அல்லது சிறுநீரகச் சிரை) சிறுநீர்வழி என்றால் சிறுநீர் செல்வது என்று கருதினால் ureter, urethra இரண்டுமே சிறுநீர்வழிதான். --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 23:40, 14 நவம்பர் 2012 (UTC)Reply

நன்றி செந்தி! மாற்றி விடுகின்றேன்.--கலை
Urethra சிறுநீரை உடலில் இருந்து வெளியேற்றும் வழி என்ற அர்த்தத்தில் சிறுநீர்வழி என அழைக்கப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகின்றது. ஏனெனில் சிறுநீர் செல்லும் பாதை என்றால் ureter, urethra இரண்டிலுமே சிறுநீர் செல்வதுடன், இரண்டுமே குழாய் வடிவில்தான் இருக்கின்றது. அப்படியானால் சிறுநீர்க்குழாய் என்பதும் இரண்டுக்கும் பொருந்துவதாகத் தோன்றுகின்றது. எனவே அதனை சிறுநீர்வழி என அழைப்பதே பொருத்தமாக இருக்குமா? எனக்கு வேறொரு கேள்வியும் உண்டு. குழாய் என்பது மூடிய நிலையில் உள்ளது என்பது புரிகின்றது. கால்வாய், கான் என்பன திறந்த நிலையிலுள்ள வாய்க்கால் போன்ற அமைப்பைக் குறிக்குமா? சரியாகத் தெரியவில்லை. அப்படி இருக்குமானால், கால்வாய் அல்லது கான் என்ற சொற்கள் இங்கே பொருத்தமில்லாமல் இருக்குமெனத் தோன்றுகின்றது. ஆனால் இலங்கை பாடநூல்களில் உடலில் உள்ள இவ்வாறான பல குழாய் அமைப்புக்களைக் குறிக்க கான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நினைவுக்கு வருகின்றது. இதுபற்றிய கருத்தையும் அறிய விரும்புகின்றேன்.--கலை

Nephron, Glomerulus, Renal Pelvis (சிறுநீரக இடுப்பு?), Cortex (மேற்பட்டை?), Medulla போன்ற சொற்களுக்கான தமிழ்ச் சொல்லையும் யாராவது தன்ந்துதவ முடியுமா?--கலை

ஆம், சிறுநீர்க்குழாய் மற்றும் சிறுநீர்வழி இரண்டுமே பொருத்தமற்றவைதாம்.
  • urethra: "canal through which urine is discharged from the bladder," 1630s, from L.L. urethra, from Gk. ourethra "the passage for urine," coined by Hippocrates from ourein "to urinate," from ouron (see urine). (சிறுநீர்ப்பைக் குழாய்)

http://ta.wiktionary.org/s/hnc

   நாளம் - அளவில் சிறியது
   குழல் - அளவில் நடுத்தரமானது
   குழாய் - அளவில் பெரியது

ureter's diameter is about 4 mm, எனவே அதை சிறுநீரகக்குழல் என்றும் விட்டம் 6mm உள்ள urethraவை சிறுநீர்ப்பைக் குழாய் என்றும் அழைக்கலாம். urethra சிறுநீரை உடலில் இருந்து அகற்ற உதவுவதால் சிறுநீர்வழி என்று அழைப்பதில் பிழையில்லை என்று தோன்றுகின்றது. canal= திறந்த நிலையிலுள்ள வாய்க்கால், கால்வாய் கான் = வாய்க்கால்; எனவே உடற்கூறியலில் கான் எனும் சொல் பயன்படுத்தலாம், ஆனால் "Femoral canal" போன்று ஆங்கிலத்தில் "canal" என்று குறிப்பிடும் இடங்களில் "கால்வாய்" பயன்படுத்தல் சிறந்தது. இங்கு canal ஊடாக நரம்பு, நாடி போன்றவை செல்கின்றன. "Inguinal canal" எடுத்துக்கொண்டால் "spermatic cord " செல்கின்றது. சில சந்தர்ப்பங்களில் canalஐ (எ.கா: adductor canal) உருவாக்க வேறு பல அமைப்புகள் தேவைப்படுகின்றன. (எலும்பு, தசை....). மேலும், "duct" எனும் அமைப்பும் "கான்" என்று அழைக்கப்பட்டுள்ளது. (bile duct = பித்தக்கான்) இதை இவ்வாறே கையாளல் நன்று.

  • Nephron = சிறுநீரகத்தி
  • Glomerulus = கலன்கோளம்
  • Renal Pelvis = நேரடி மொழிபெயர்ப்பு "சிறுநீரக இடுப்பு". pelvis என்றால் basin என்று அர்த்தம் என்று பார்த்தேன், அதன் படி "சிறுநீரகக் கிண்ணம்" எனலாமா?
  • Cortex= மேற்பட்டை
  • medulla = மையவிழையம்
--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:12, 19 நவம்பர் 2012 (UTC)Reply
நன்றி செந்தி.--கலை (பேச்சு) 22:46, 19 நவம்பர் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிறுநீர்வழி&oldid=1261752" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சிறுநீர்வழி" page.