பேச்சு:சுழற்றல் இணைப்பு

dial-up தமிழ்ச்சொல் என்ன?. இது போன்ற வழிகாட்டுக் குறிப்புகளை விக்கிநூல்கள் தளத்தில் தருவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். --Ravidreams 09:45, 22 நவம்பர் 2006 (UTC)Reply

ரவி அழைத்து இணைதல் பொருத்தமாக இருக்கக் கூடும் ஆனால் வழமையாக டயலப் அல்லது டயல்-அப் என்றவாறே பாவிக்கின்றார்கள். இதைப் பாவித்தால் கட்டுரை கூடுதலாக விளங்கும். செல்வா, கோபி அல்லது மயூரனிடம் இதைவிடச் சிறந்த நல்ல தமிழ்ச் சொற்களை இருக்குமென்றே நினைக்கின்றேன். விக்கிநூல்கள் கண்டிப்பாக கணினி நூல்கள் இடம்பெறவேண்டும். இந்தக் கட்டுரையை விக்கிநூல்களில் போடுவதைப் பற்றி முடிவெடுக்கவில்லை எனினும் விக்கிநூல்களில் குறிப்பாக சி நிரலாகம் பற்றி எழுதுவதாகவேயுள்ளேன்.--Umapathy 13:10, 22 நவம்பர் 2006 (UTC)Reply

dial என்ற சொல்லுக்கான தமிழ்ச்சொல் குறித்து இன்னும் உரையாட வேண்டி உள்ளது. டயல்-அப் குறித்த கட்டுரைகளை இங்கு எழுதாலம். ஆனால், விரிவான விளக்கப்படங்களுடன் கூடிய வழிகாட்டுதல்களை விக்கி நூல்களில் தருவதே பொருத்தமாக இருக்கும். லினக்சின் பல வழங்கல்கள், விண்டோஸ் அனைத்துக்கும் தனித்தனி வழிகாட்டுக் குறிப்புகளை தரலாம். கூகுளில் தேடினால், விக்கிநூல்களும் விக்கிபீடியா அளவுக்கு கவனம் ஈர்க்கத்தக்கதே--Ravidreams 19:01, 22 நவம்பர் 2006 (UTC)Reply

ஐயா அநியாயமாக மைக்ரோசொப்டின் பிரசார செயலாளராக பணியாற்றிக்கொண்டிருந்த ஒரு மனிதரை இப்படி மதம்மாற்றிவிட்டீர்களே! இனி சண்டைபிடிக்கவும் ஆளில்லாமல் போய்விடுமோ என்று கவலையாயிருக்கிறது. சும்மா லினக்ஸ் படங்களாக போட்டுத்தாக்கிறார் மனிதர். ;-) --மு.மயூரன் 19:30, 28 நவம்பர் 2006 (UTC)Reply
மதம் மாற்றிய பூசாரியே கருத்து சொல்லுற மாதிரி இருக்கே :)!--Ravidreams 20:00, 28 நவம்பர் 2006 (UTC)Reply
மயூரன், ரவி அலுவலகத்தில் வின்டோஸ் கணினியையே பாவிக்கின்றேன். வீட்டில் லினக்ஸ்ஸையே விரும்புகின்றேன் இதற்கு முக்கிய காரணம் வேகமாக இயங்குகின்றது. ஆனாலும் பெடோராவில் இயங்கும் SCIM எ-கலப்பை மென்பொருளைவிட சற்று வேகம் குறைவு போலவே தெரிகின்றது. லினக்ஸ் தொடர்பான பல கட்டுரை தமிழ் விக்கிபீடியாவில் இடம்பெறவேண்டும். இப்போது லினக்ஸ் தொடர்பான கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் போதாது. வின்டோஸ் பற்றிய கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவில் போதுமானதாக இல்லாவிட்டாலும் பல கட்டுரைகள் ஏற்கனவே இருக்கின்றன. நான் ஒன்றும் மதம் மாறவில்லை மைக்ரோசாப்ட்டே லினக்ஸ் தொடர்பான அலுவல்களுக்காக நாவல் (நொவல்) நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பார்க http://www.novell.com/linux/microsoft/ மைக்ரோசாப்டே லினக்ஸ்சுடன் ஒத்தியங்க முற்படும்போது நான் மாத்திரம் ஏன் வின்டோஸை மாத்திரம் வைத்திருக்கவேண்டும்?--Umapathy 02:56, 29 நவம்பர் 2006 (UTC)Reply


உமாபதி எல்லோரும் மயூரன் மாதிரி இலட்சியவாதிகளாக இருக்கமுடியுமா என்ன? அனேகர் மிதவாதிகளாகவே இருக்கின்றோம் :-) --Natkeeran 03:11, 29 நவம்பர் 2006 (UTC)Reply
எல்லாம் சும்மா வேடிக்கைக்குத் தான் உமாபதி. நானும் dual boot ஆள் தான் !--Ravidreams 09:36, 29 நவம்பர் 2006 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுழற்றல்_இணைப்பு&oldid=919172" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சுழற்றல் இணைப்பு" page.