பேச்சு:டாய்ட்ச் கருத்தியம்

செல்வா, இக்கட்டுரையின் தலைப்பில் ஏன் "டாய்ட்ச்" என்பதை முன்னிலைப்படுத்தினீர்கள் என அறியலாமா?--Kanags 21:19, 11 நவம்பர் 2007 (UTC)Reply

கனகு, பொதுவாக முதல்மொழியில், மூல மொழியில் எப்படி உள்ளதோ அதற்கு கூடிய மட்டிலும் ஒத்ததாக நம் மொழியிலும் பயிலுவது நல்லது என்னும் குறிக்கோளில் அப்படி செய்தேன். ஜெர்மன் மொழியில் ஜெ என்னும் ஒலியே கிடையாது. அவர்கள் தங்கள் மொழியை 'டாய்ட்ச் என்றே அழைக்கின்றனர். டாய்ட்ச் மொழிக்கும் டச்சு மொழிக்கும் உள்ள தொடர்பும் சுட்டும். எனவே ஜெர்மன் என்பதை விட டாய்ட்ச் என்று சொல்வதே பொருந்தும் என்பது என் நினைப்பு. ஆங்கிலத்தில் en:German idealism என்பது டாய்ட்ச் மொழியில் de:Deutscher Idealismus என்றே வழங்குகின்றது. இந்த டாய்ட்ச் கருத்தியத்தில் டாய்ட்ச் மொழி, டாய்ட்ச் மொழிச்சொற்களின் உட்பொருட்கள் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றது. இந்த டாய்ட்ச் கருத்தியம் புரிந்து கொள்வது பொதுவாக கடினமானது என்று பலரும் கருதுவதற்கு, டாய்ட்ச் மொழியில் இயல்பாய் உள்ள பல்பொருட்தன்மை எல்லாமும் ஆங்கிலத்தில் ஈடிணையாய் அமையாததும் ஒரு பெரும் காரணம். எனவே டாய்ட்ச் கருத்தியம் என்பதே மிகவும் பொருத்தமானது என்று நினைக்கிறேன். --செல்வா 22:05, 11 நவம்பர் 2007 (UTC)Reply
நன்றி செல்வா, அத்துடன் கருத்தியம் (idealism) என்பதைத் தனிக் கட்டுரையாக்கலாம். மெய்யியல் என்பது philosophy எனத் தெரிகிறது. பகுப்பு பேச்சு:தத்துவம் பக்கத்தில் உங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.--Kanags 22:48, 11 நவம்பர் 2007 (UTC)Reply
நன்றி கனகு. நீங்கள் வேண்டியபடி பகுப்பு பேச்சு:மெய்யியல் பக்கத்தில் கருத்தைத் தெரிவித்துள்ளேன். கருத்தியம் பற்றி கட்டுரை எழுத வேண்டும்தான். எழுத முயல்கிறேன்.--செல்வா 01:06, 13 நவம்பர் 2007 (UTC)Reply
நன்றி செல்வா.--Kanags 01:19, 13 நவம்பர் 2007 (UTC)Reply
Return to "டாய்ட்ச் கருத்தியம்" page.