பேச்சு:தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானக் கோயில்கள்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic கோடியம்மன் கோயில்

தேவஸ்தானக் கோயில்கள் 88 தொகு

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள் என்ற தலைப்பில் தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர் 1997இல் பக்.230-235இல் வெளியான கட்டுரையில் பக்.230-232இல் 88 கோயில்கள் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. பெருவிழா மலரில் வெளியாகியுள்ள கட்டுரையின் அடிப்படையில் இந்த பட்டியல் துவங்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் இந்த 88 கோயில்களுள் பாடல் பெற்ற தலங்களாக சைவத்தில் தஞ்சை மாவட்டம் வட குரங்காடுதுறையிலுள்ள தயாநிதீஸ்வரர் கோயிலும், திருவிசநல்லூரிலுள்ள சிவயோகநாதசுவாமி கோயிலும் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றுள்ளவை என்றும், வைணவத்தில் தஞ்சை மாமணிக்கோயில்கள் எனப் போற்றப்படும் மேலசிங்கப்பெருமாள் கோயிலும், மணிகுண்ணப்பெருமாள் கோயிலும், நீலமேகப்பெருமாள் கோயிலும் திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாரால் பாடப்பெற்றவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. வேறு புதிய பட்டியலோ, மாறுபாடோ தெரிய வந்தால் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:24, 25 செப்டம்பர் 2016 (UTC)

முகவரி, இடம் தொகு

இப்பட்டியலில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் நேரில் சென்று விவரங்கள் திரட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. சில கோயில்களுக்கு நேரில் சென்று, புகைப்படங்களை எடுத்து விவரங்களைச் சேர்த்துள்ளேன். பல கோயில்களுக்கு முழுமையான முகவரி இல்லாமல் உள்ளன. சில கோயில்கள் ஒரே வகையிலான பெயரைக் கொண்டுள்ளன. முடிந்தவரை நேரில் சென்று உறுதி செய்து இப்பட்டியலை முழுமையாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:34, 25 செப்டம்பர் 2016 (UTC)

சோமசுந்தரம் பிள்ளை நூல் தொகு

ஜே.எஸ்.சோமசுந்தரம் பிள்ளை தன்னுடைய நூலில் (J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur)இந்த 88 கோயில்களின் பட்டியலைத் தந்துள்ளார்.என்னிடம் இப்போது உள்ளது தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் (1994) பதிப்பாகும். அடுத்த பயணத்தின்போது இப்பட்டியலும் ஒப்புநோக்கப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:09, 27 செப்டம்பர் 2016 (UTC)

கோடியம்மன் கோயில் தொகு

வரிசை எண்.26 மற்றும் 73 இரண்டும் கோடியம்மன் கோயில் என்ற நிலையில் உள்ளது. வ.எண்.26 உற்சவ கோடியம்மன் என்று குறிக்கப்பட்டுள்ளது. களப்பணி சென்றபோது கருந்தட்டாங்குடி அருகே காணப்பட்ட கோடியம்மன் வ.எண்.26இல் உள்ளதாகக் கொள்ளப்பட்டுள்ளது. வ.எண்.73இல் உள்ள கோடியம்மன் கோயில் எதுவென்று உறுதி செய்யப்பட்டபின்பு பதிவு சரிசெய்யப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:12, 31 திசம்பர் 2016 (UTC)Reply

19 ஜனவரி 2017 அன்று தஞ்சாவூர் உற்சவ கோடியம்மன் கோயில் சென்று விவரங்கள் திரட்டப்பட்டு, புதிய பதிவு உருவாக்கப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:01, 25 சனவரி 2017 (UTC)Reply

ஆனந்தவல்லியம்மன் தொகு

பட்டியலில் வ.எண்.64இல் அருள்மிகு ஆனந்தவல்லியம்மன் கோயில் என்றுள்ளது. மூலவர் பெயர் தஞ்சபுரீஸ்வரர் கோயில் என்ற நிலையில் அவ்வாறாக கருத்தில் கொள்ளப்பட்டு இணைப்பு தரப்பட்டுள்ளது. கூடுதல் விவரம் குறித்தோ, மாற்றம் குறித்தோ தெரியவந்தால் பதிவில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:02, 2 சனவரி 2017 (UTC)Reply

Return to "தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானக் கோயில்கள்" page.