பேச்சு:தமிழ் - தாய்மொழி மாநாடு 2010 - பேர்கன்

@A-wiki-guest-user: இம்மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து கட்டுரையின் ஆரம்பப்பகுதியில் தெளிவாகத் தரப்பட்டுள்ளது.--Kanags (பேச்சு) 10:29, 6 மார்ச் 2019 (UTC)

ஆம். ஆனால் அதனை உறுதி செய்ய போதுமான சான்றுகள் இல்லை. அத்துடன் இதன் ஆசிரியர் ஒருவரே பங்குபற்றியதால் COI ஆக அமைய வாய்ப்புள்ளது. மேலும், யார் மாநாடு நடத்தியது. நடத்தியவர்கள்/நிறுவனம் குறிப்பிடத்தக்கதா எனவும் ஆராய வேண்டும். --A-wiki-guest-user (பேச்சு) 11:41, 6 மார்ச் 2019 (UTC)
  • உறுதி செய்யப் போதுமான சான்றுகளைக் கொடுக்கவில்லை என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். அதனைக் கொடுக்க நினைத்து, அப்போது மறந்துவிட்டது என நினைக்கின்றேன். இப்போது இந்த நிகழ்வு நடந்ததற்கான சான்றைக் கொடுத்துள்ளேன். இது நோர்வே அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு பக்கம். எனவே அநேகமானவை நோர்வேஜிய மொழியிலேயே இருக்கின்றது. மொழிபெயர்த்து, தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
  • &&அத்துடன் இதன் ஆசிரியர் ஒருவரே பங்குபற்றியதால் COI ஆக அமைய வாய்ப்புள்ளது.&& தமிழ்விக்கிப்பீடியாவை முன்னேற்ற தமிழ் ஆசிரியர்கள் எவ்வாறு உதவ முடியும் என்பது எடுத்துக்கூறப்பட்ட ஒரே காரணத்தால் மட்டுமே அங்கே பெயர் இணைக்கப்பட்டது. ஆனால் தற்போது அதனை நீக்கிவிட்டேன். இதனை இங்கே குறிப்பிடுவதனால் எந்த நன்மையும் எனக்கு ஏற்படப் போவதில்லை ː).
  • &&இந்த மாநாடானது பேர்கன் நகரசபையினரால், அரசாங்கத்தின் கல்விக்கான இயக்குநரகத்துடன் (Education Directorate) இணைந்து நடத்தப்பட்ட ஒரு மாநாடாகும்.&& என்பது கொடுக்கப்பட்டுள்ள நிலையில் யாரால் என்ற கேள்வி எதற்கு எனப் புரியவில்லை. தெளிவாகவே யாரால் நடாத்தப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், சான்று தேவை என்பதைக் குறிப்பிடலாமேயன்றி, யாரால் என்ற கேள்வி பொருத்தமற்றது. எனவே அந்தக் கேள்வியை நீக்கியுள்ளேன்.
  • அத்துடன் \பேர்கன் பல்கலைக் கழகத்தில் தனது முனைவர் படிப்பை மேற்கொண்டு வரும் விஜயசங்கர் அசோகன்\ என்றும், \மலேசியாவிலிருந்து விசேட அழைப்பின் பேரில் வந்து கலந்துகொண்ட முனைவர் மலர்\ என்றும் இருப்பதற்கு அருகில் யார் என்ற கேள்வியும் எதற்கு என்று புரியவில்லை. சான்று தேவை என்பதைக் குறிப்பிடலாமேயன்றி, யார் என்ற கேள்வி பொருத்தமற்றது. எனவே அவற்றையும் நீக்குகிறேன்.
  • &&நடத்தியவர்கள்/நிறுவனம் குறிப்பிடத்தக்கதா எனவும் ஆராய வேண்டும்&& இந்த நிகழ்வை நடத்தியவர்கள் நோர்வே அரசாங்கத்தின், பேர்கன் நகரசபையும், அரசாங்கத்தின் கல்விக்கான இயக்குநரகமும் என்று குறிப்பிட்ட பின்னர், இது நோர்வே அரசாங்கத்தின் அங்கம் என்பது புரிந்தும், நிறுவனம் குறிப்பிடத்தக்கதா என்ற கேள்வியை எப்படி எடுப்பதெனத் தெரியவில்லை. அவர்கள்தான் நடத்தினார்கள் என்பதற்குச் சான்றுகள் தரப்படவில்லை என்று கூறியிருந்தால் புரிந்து கொள்ளலாம். அதை விடுத்து, ஒரு அரசாங்க நிறுவனம் குறிப்பிடத்தக்கதா என்றால் என்ன சொல்வது? எதற்கும் ஆராய்ந்து பார்த்து குறிப்பிடத்தக்கதா எனக் கூறுங்கள்.
  • வேற்று நாடொன்றில் தமிழ் தாய்மொழி மாநாடு நடப்பது ஒரு முக்கியமான விடயம் என்று எண்ணியே இப்பக்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் இது குறிப்பிடத்தக்கது அல்ல என நினைக்கும் பட்சத்தில், பக்கத்தை நீக்க விரும்பினால், ஏனையோரின் கருத்தையும் அறிந்துவிட்டு நீக்குங்கள்.
@A-wiki-guest-user:

--கலை (பேச்சு) 22:30, 6 மார்ச் 2019 (UTC)

நீங்களே பொருத்தமற்றது எனக் கருதி நீக்கினால் வேறு என்ன செய்வது. இவ்வாறான இடங்களில் ஏன் உரையாட முடியவில்லை? மாநாடுகள் பல அங்காங்கே நடைபெறுகின்றன. ஆனால், அவை இங்கு இடம்பெற வேண்டுமானால் குறிப்பிடத்தக்கதாக இருக்கவேண்டும். இக்கட்டுரைக்கு 2 ஆம் நிலைத்தரவை இணைக்க முடியுமா? --A-wiki-guest-user (பேச்சு) 07:47, 9 மார்ச் 2019 (UTC)
  • பொருத்தமற்றது என்று நான் சொன்னேனா? எங்கே சொல்லியிருக்கிறேன் என்று சுட்டிக்காட்ட முடியுமா? நீங்களும், ஏனையோரும் பொருத்தமற்றது எனக் கருதினால் நீக்குங்கள் என்றுதான் கூறியுள்ளேன். அந்த மாநாட்டை நான் ஏன் முக்கியமாகக் கருதுகிறேன் என்பதையும் மேலேயே குறிப்பிட்டுள்ளேன். வேற்று நாடொன்றில் தமிழ் தாய்மொழி மாநாடு நடப்பது ஒரு முக்கியமான விடயம் என்று எண்ணியே இப்பக்கம் உருவாக்கப்பட்டது.
  • இங்கே நடப்பது உரையாடல்தானே? 'இவ்வாறான இடங்களில் ஏன் உரையாட முடியவில்லை?' என்ற உங்கள் கேள்வியின் அர்த்தம்தான் என்ன?
@A-wiki-guest-user:
  • குறிப்பிடத்தக்கமை பற்றிய எனது அறிவு போதாமல் இருக்கலாம். எனவேதான் அதுபற்றி நன்கு அறிந்தவர்கள் கூறட்டும் என நினைக்கிறேன். மேலும் தமிழ் விக்கிப்பீடியா பற்றியும் இந்த மாநாட்டில் எடுத்துக் கூறப்பட்டதால், தமிழ்விக்கியில் இந்தப் பக்கம் குறிப்பிடத்தக்கமை என்ற நிலையைப் பெறும் என்பது எனது கருத்து.
@Kanags, Mayooranathan, Ravidreams, Natkeeran, Sundar, and செல்வா:
  • பல ஆண்டுக்கு முன்னால் நடந்த நிகழ்வு என்பதால், என்னால் இப்போது இரண்டாம் நிலைத்தரவைத் தேடி எடுக்க முடியுமா தெரியவில்லை. கிடைத்தால் இணைப்பேன். குறிப்பிட்ட நிகழ்வை நடத்தியவர்கள் ஒரு அரசாங்கத் தொடர்புடன் இருப்பதாலும், அவர்களது பக்கத்திலேயே அனைத்து விபரங்களும் இருப்பதனாலும், இரண்டாம் நிலைத்தரவு அவசியம்தானா என்பதும் புரியவில்லை.
--கலை (பேச்சு) 11:03, 9 மார்ச் 2019 (UTC)

மாநாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் முக்கியத்துவம் (குறிப்பிடத்தக்கமை) என்ன? //குறிப்பிடத்தக்கமை பற்றிய எனது அறிவு போதாமல் இருக்கலாம்..... மேலும் தமிழ் விக்கிப்பீடியா பற்றியும் இந்த மாநாட்டில் எடுத்துக் கூறப்பட்டதால், தமிழ்விக்கியில் இந்தப் பக்கம் குறிப்பிடத்தக்கமை என்ற நிலையைப் பெறும் என்பது எனது கருத்து// //இரண்டாம் நிலைத்தரவு அவசியம்தானா என்பதும் புரியவில்லை.// இதைப் பார்க்கும்போது என் சொல்வது. :) --A-wiki-guest-user (பேச்சு) 09:07, 26 மார்ச் 2019 (UTC)

@A-wiki-guest-user: இந்தக் கட்டுரை யாரை விளம்பரப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? உள்ளே இருந்த எனது பெயரையும் அகற்றிய பின்னர், எப்படி அது விளம்பரமாகும்? எமது மொழி பேசாத ஒரு நாட்டில், எமது மொழிக்கென ஒரு மாநாடு நடந்தது பெருமைக்குரிய விடயம் என்ற நோக்கில் மட்டுமே இந்தக் கட்டுரையை எழுதினேன். மற்றும்படி எந்த விளம்பரத்தையும் தேடி அல்ல. இது சரியான குற்றச்சாட்டு அல்ல. --கலை (பேச்சு) 11:31, 26 மார்ச் 2019 (UTC)
@Kanags, Mayooranathan, Natkeeran, Sundar, and செல்வா:--கலை (பேச்சு) 11:00, 26 மார்ச் 2019 (UTC)
  • இக்கட்டுரை இருக்கவேண்டும் என்பது என் கருத்து. //குறிப்பிட்ட நிகழ்வை நடத்தியவர்கள் ஒரு அரசாங்கத் தொடர்புடன் இருப்பதாலும், அவர்களது பக்கத்திலேயே அனைத்து விபரங்களும் இருப்பதனாலும், இரண்டாம் நிலைத்தரவு அவசியம்தானா என்பதும் புரியவில்லை.// ஆம் இரண்டாம்நிலைத் தரவு தேவையில்லை என்றுதான் நினைக்கின்றேன். எப்படிப்பட்ட இரண்டாம் நிலைத்தரவு வேண்டும் என்று @A-wiki-guest-user: நினைக்கின்றார்? ஏன் வேண்டும் என்று நினைக்கின்றார்? நம்பகத்தன்மை போதாமல் இருக்கின்றதா? எந்த விதத்தில் நம்பகத்தன்மை போதாமல் இருக்கின்றது என்று தெரிவித்தால் பயனுடையதாக இருக்கும். --செல்வா (பேச்சு) 19:11, 28 மார்ச் 2019 (UTC)



உங்கள் கருத்துக்கு நன்றி செல்வா! கட்டுரையை மேம்படுத்தியுள்ளேன். கட்டுரையின் குறிப்பிடத்தக்கமை பற்றி விரிவாகப் பார்க்க இன்று நேரம் கிடைத்தது. அதனால், அதனை இங்கு நிறுவுகின்றேன். A-wiki-guest-user

  1. கட்டுரைப் பொருள் குறிப்பிடத்தக்கதாக அல்லது அறிய வேண்டிய ஒன்றாக அமைய வேண்டும்.: தமிழ் மொழி அரசாங்க மொழியாக இல்லாத ஒரு நாட்டில், தமிழ் மொழிக்கென ஒரு மாநாடு நடந்தது தமிழர்கள் அறிய வேண்டிய விடயம்.
  2. ஓர் கட்டுரைப் பொருளின் குறிப்பிடத்தக்கத் தன்மை அதன் புகழ், பெருமை அல்லது பரவலான அறிமுகம் குறித்தது மட்டுமே அல்ல: எனவே இந்த விடயம் பரவலாக அறிந்திருக்கப்படாவிடினும் அதனால் பிரச்சனை இல்லை.
  3. இந்தக் கட்டுரை சொந்த ஆய்வல்ல என்பது கட்டுரையின் போக்கிலேயே புரிகின்றது.
  4. அத்துடன் ஒரு நாட்டு அரசாங்கத்தின் நகராட்சியும், நாட்டின் கல்வி இயக்குநரகமும் இணைந்து நடாத்திய ஒரு மாநாடு எனபதனால் மிகவும் நம்பகத்தன்மை கொண்ட தகவல்களாகும். சரிபார்ப்பதற்கான நம்பகத்தன்மை கொண்ட மூலங்கள் இணைக்கப்பட்டுள்ளன. செல்வா கூறியபடி, நம்பகத்தன்மை கொண்ட மூலங்களாக இருப்பதனால், அதாவது ஒரு நாட்டு அரசின் நகராட்சி அறிக்கையே கொடுக்கப்பட்டிருப்பதனால், இரண்டாம்நிலைத் தரவு அவசியமில்லை.
  5. கட்டுரையில் தற்போது கட்டுரையை ஆக்கிய என்னைப் பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடப்பட்டு இல்லாமையால், இது சுய விளம்பரம் அல்ல.

அடுத்து, கட்டுரையில் இணைக்கப்பட்ட வார்ப்புருக்கள்பற்றிப் பார்ப்போம்.

  1. A major contributor to this article appears to have a close connection with its subject: மாநாட்டுக்கும், அதை நடத்தியவர்களுக்கும் எனக்கும் எந்தவிதமான நெருங்கிய உறவும் இல்லை. தமிழர்களுக்கான ஒரு மாநாடு என்பதனால், அதில் தமிழ்விக்கிப்பீடியாவையும் அறிமுகம் செய்தால் புதிய பயனர்கள் கிடைக்கக்கூடும் என்பதனால், அதற்காக அழைக்கப்பட்டது தவிர வேறு எந்த ஒட்டு உறவும் இல்லை.
  2. இந்த கட்டுரை கொண்டுள்ள உள்ளடக்கம் விளம்பரத்தை போல் காணப்படுகிறது: எந்தப் பகுதி விளம்பரம்போல் உள்ளது? யாருக்கான, அல்லது எதற்கான விளம்பரம்?
  3. இந்தக் கட்டுரையில் தனிப்பட்ட கருத்து பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. விக்கிப்பீடியாக் கட்டுரை போல் எழுதப்பட வேண்டியிருப்பதால் தூய்மையாக்க தேவை இருக்கலாம்: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தக் கருத்து தனிப்பட்ட கருத்து?
  4. இதை விக்கிப்பீடியாக் கலைக்களஞ்சிய நடையில் மேம்படுத்த உதவுங்கள்: கலைக்களஞ்சிய நடையில் இல்லையெனக் கருதினால், எவரும் உதவலாம்.
  5. இந்தக் கட்டுரையில் ஒரு ரசிகரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரையாகத் தெரிகிறது: எந்தப் பகுதி பார்ப்பதற்கு இரசிகரின் கண்ணோட்டத்தில் இருப்பதுபோல் உள்ளது எனக் குறிப்பிட்டுக் கூறினால் மாற்றுவதற்கு உதவியாக இருக்கும்.
  6. This article reads like a news release: அப்படியானால் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வுக்குக் கட்டுரை எழுதக் கூடாதா?
  7. otherwise written in a promotional tone: எதற்கான அல்லது யாருக்கான promotional tone தெரிகின்றது என்பதைக் குறிப்பிட்டுக் காட்ட முடியுமா?
  8. இக்கட்டுரை ஒற்றை மூலத்தை மட்டும் சான்றுகளுக்கு சார்ந்துள்ளது. தற்போது இரண்டு மூலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  9. இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. இது தொடர்பில் செல்வா தனது கருத்தைக் கூறியுள்ளார். ஒரு அரசாங்கப் பக்கமே கொடுக்கப்பட்டு இருப்பதனால், மேலதிக மூலம் தேவையில்லை என்பது எனது கருத்தும்கூட.

--கலை (பேச்சு) 14:51, 31 மார்ச் 2019 (UTC)

நீங்கள் உங்கள் சொந்தக் கருத்துக்களில்தான் அதிகம் தங்கியிருப்பதாக மேலுள்ள மறுமொழிகள் காண்பிக்கின்றன. வாதிடுதலின் மூலம் சரியென காட்ட முயல்கிறீர்களா? விக்கிப்பீடியா விதிகள் உங்கள் கருத்துக்களுடன் எந்தளவிற்கு ஒத்துப்போகின்றன. ஒப்பிடலுக்கு en:WP:RS, en:WP:OR, en:WP:PSTS, en:WP:PRIMARY, en:WP:EVENT ஆகியவற்றைப் பாருங்கள். இதிலிலும் விளக்கம் இல்லாவிட்டால், நான் ஒரு பட்டியல் தயார் செய்கிறேன். --A-wiki-guest-user (பேச்சு) 07:58, 1 ஏப்ரல் 2019 (UTC)
நீங்கள் இணைத்துள்ள வார்ப்புரு ஏன் பொருத்தமற்றது என்பதை எடுத்துக் காட்டவும், குறிப்பிடத்தக்கமையை நிறுவும்படி நீங்கள் கேட்டதால் அதனை நிறுவுவதற்கான முயற்சியையும் எடுத்தேன். அதனால், ஒவ்வொன்றாக விளக்கமாகக் கொடுத்தேன். அவை எனது சொந்தக் கருத்து என நீங்கள் எண்ணினால், பொதுவாகச் சொல்லாமல் எது அப்படிப்பட்ட கருத்து எனக் கூறுங்கள். சரியெனக் காட்டும்படி கேட்டால் காட்டத்தானே வேண்டும். தவறென நீங்கள் கருதினால், ஏன் தவறு என ஒவ்வொன்றாகக் கூறுங்கள். செல்வா கேட்ட கேள்விகளுக்கோ, அல்லது நான் கேட்டிருக்கும் கேள்விகளுக்கோ எந்த நேரடியான பதிலையும் கூறாமல், மேலெழுந்தவாரியாகப் பதிலிடுவதால் எந்தப் பயனும் இல்லை. தமிழ் விக்கிப்பீடியாவின், குறிப்பிடத்தக்கமை பற்றிய பக்கத்தில் உள்ள ஒவ்வொன்றுடனும் ஒப்பிட்டு எனது பதிலைக் கொடுத்துள்ளேன். இதில் எவை தவறானவை எனக் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டினால், மேலதிக பட்டியலைப் பார்க்கலாம்.--கலை (பேச்சு) 10:26, 1 ஏப்ரல் 2019 (UTC)

தீர்வு தேவை தொகு

@A-wiki-guest-user: நீங்கள் கூறும் எவையும் சரியான முறையீடாக எனக்குத் தெரியவில்லை. @Kalaiarasy: தெளிவாகத் தன் மறுப்புக்கருத்துகளை முன்வைத்துள்ளார். முதற்கண் நீங்கள் சில அறிவிப்புகளை எந்தத்தயக்கமும் இல்லாமல் நீக்கலாம். நீக்க வேண்டுகின்றேன்.

  1. A major contributor to this article appears to have a close connection with its subject. (மார்ச் 2019) (இதனை நீக்க வேண்டுகின்றேன்)
  2. இந்த கட்டுரை கொண்டுள்ள உள்ளடக்கம் விளம்பரத்தை போல் காணப்படுகிறது.. (மார்ச் 2019) (இதனை நீக்க வேண்டுகின்றேன்) (இதில் ஏதும் விளம்பரத்தன்மையில்லை. வரலாற்று நோக்கில் நிகழந்த ஒரு முக்கியமான மாநாடு. இந்த மாநாடு ஸ்கான்டினாவியாவில், முதன் முதலில் வெளிநாட்டினரின் தாய்மொழி ஒன்றிற்கான அரசாங்க அனுசரணையோடு நடந்த மாநாடாகும். )
  3. இந்தக் கட்டுரையில் தனிப்பட்ட கருத்து பிரதிபலிப்பதாகத் தெரிகிறது. விக்கிப்பீடியாக் கட்டுரை போல் எழுதப்பட வேண்டியிருப்பதால் (மார்ச் 2019) (இதனை நீக்க வேண்டுகின்றேன்) (அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எது தனிப்பட்ட கருத்து என்று கருதுகின்றீர்கள்?).
  4. இந்தக் கட்டுரையில் ஒரு ரசிகரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரையாகத் தெரிகிறது. (இதனை நீக்க வேண்டுகின்றேன்)(அப்படி இருப்பதாகத் தெரியவில்லையே! ஏன் அப்படிக் கருதுகின்றீர்கள்?)
  5. This article reads like a news release, or is otherwise written in a promotional tone. (மார்ச் 2019) (இதனை நீக்க வேண்டுகின்றேன்)(இதுவொரு வரலாற்று நிகழ்ச்சி என்பதால், முக்கியத்தும் கருதி பதிவு செய்யப்படுகின்றது. " is otherwise written in a promotional tone."இப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
  6. இக்கட்டுரை ஒற்றை மூலத்தை மட்டும் சான்றுகளுக்கு சார்ந்துள்ளது. . (மார்ச் 2019) - அந்த மூலம் நம்பகத்தன்மையுடையதாக இருந்தால் போதுமானதே.

எல்லா அறிவிப்புகளையும் நீக்கப் பரிந்துரைக்கின்றேன். இக்கட்டுரை இருக்க வேண்டிய ஒன்று. @Kanags, Mayooranathan, Ravidreams, Natkeeran, and Sundar:.

--செல்வா (பேச்சு) 17:17, 1 ஏப்ரல் 2019 (UTC)

  • குறிப்பிடத்தக்கமை கருதி கட்டுரையை வைத்திருக்கலாம். கட்டுரையில் சில திருத்தங்கள் வேண்டும். மாநாடு நோர்வே மொழியில் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை கட்டுரையின் முதல் வரியில் தரலாம். கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள காட்சியகப் படிமங்களை பொதுவகத்திற்கு நகர்த்தி விட்டு, வெளி இணைப்பாக பொதுவகத்திற்கு இணைப்புக் கொடுப்பது நல்லது.--Kanags (பேச்சு) 10:55, 7 ஏப்ரல் 2019 (UTC).
கருத்துக்கு நன்றி Kanags! நோர்வே மொழியில் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதைக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். படங்களைப் பொதுவகத்திற்கு நகர்த்தி, வெளி இணைப்புக் கொடுத்து உதவ முடியுமா? நன்றி.--கலை (பேச்சு) 14:27, 7 ஏப்ரல் 2019 (UTC)

I will highlight all issues ASAP --A-wiki-guest-user (பேச்சு) 13:18, 2 ஏப்ரல் 2019 (UTC)

@A-wiki-guest-user: அருள்கூர்ந்து நீங்கள் இங்கே தமிழில் எழுத வேண்டுகின்றேன். உங்கள் கருத்துகளை அறிவதற்காகக் காத்திருக்கின்றேன். ஆனால் ஒன்றைத் தெளிவாக்க விரும்புகின்றேன். இசுகாந்திநேவிய நாடுகளில் தமிழ் மொழிக்காக மாநாடு ஒன்றை நடத்துவது ஒரு 50 ஆண்டுகளுக்கு முன் கருதிப்பார்ப்பது கடினமான ஒன்று. நடந்திருக்கலாம் என்று கருத்துரைக்கலாம், ஆனால் வாய்ப்புக்கூறுகள் குறைவு (இதை நிறுவவெல்லாம் முடியாது). இந்த நிகழ்ச்சி 9-10 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒன்று. இது வரலாற்று நோக்கில் ஏன் முக்கியமான ஒன்று என்றால், தமிழ்மக்கள் உலகெலாம் சிதறிப் போய் தஞ்சம் அடைய நேர்ந்தது, மாபெரும் இனப்படுகொலை நிகழந்தது என்பதெல்லாம் மறுக்கவொண்ணாதது. அப்படிச் சிதறிப்போனவர்கள் தஞ்சம் அடைந்த நாட்டிலே தம் மொழியைக் காத்துப் போற்றும்விதமாகவும் கல்வி முதலான பிற காரணங்களுக்காகவும் ஒரு மாநாடு நடத்துவது என்பதும் அதற்கு அந்த நாட்டின் அரசு தரப்பிலேயே ஆதரவு தந்து நடத்துவது என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியத்துவம் என்பது அந்தந்த குழுமத்தின் கண்ணோட்டத்தைப் பொருத்தது. தமிழர்களைப்பொருத்த அளவிலே அவ்வளவாக அறியப்படாத அல்லது முக்கியம் என்று உணரப்படாத மிகமிகச்சிறிய நடிகர் அல்லது இசைக்கலைஞர் பற்றிய கட்டுரை ஒன்று இருக்கலாமா வேண்டாமா என்பது தமிழ்க்குமுகத்தின் கண்ணோட்டத்தைப் பொருத்ததே. எனவே குறிபிடத்தகுந்தமை என்பதை கருதி மதிக்கவேண்டியவர்கள் தமிழ் விக்கிப்பீடியர்களே. இப்படியான மாநாடு நடந்த நிகழ்ச்சி, வரலாற்று நோக்கில் பல்வேறு கோணங்களில் கருத்துகள் திரட்ட உதவியான ஒரு நிகழ்ச்சி. 9-10 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த மாநாட்டைப்பற்றிய கட்டுரையை நீங்கள் ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்க்கின்றீர்கள் என்பதும் ஏன் இவ்வளவு உரையாடல் நிகழவேண்டுமென்பதும் விளங்கவில்லை. --செல்வா (பேச்சு) 15:30, 2 ஏப்ரல் 2019 (UTC)

ஆங்கிலத்தில் எழுதியதற்காக மன்னிக்கவும். பொதுவாக இக்கட்டுரையின் சிக்கல்களை ஒன்றின் பின் ஒன்றாக கேட்க விரும்புகிறேன்.

//ஆங்கிலத்தில் எழுதியதற்காக மன்னிக்கவும்.// நன்று (பொதுவாக இங்கே மன்னிப்பெல்லாம் கேட்பது வழக்கமன்று. கூட்டுழைப்பும் கூட்டாக்கமுமே முதன்மையானது). தமிழில் எழுதுவதற்கு நன்றி. --செல்வா (பேச்சு) 21:52, 11 ஏப்ரல் 2019 (UTC)
1. முதன் முதலில் வெளிநாட்டினரின் தாய்மொழி ஒன்றிற்கான அரசாங்க அனுசரணையோடு நடந்த மாநாடாகும். - இதில் உள்ள மேற்கோளில் நிகழ்ச்சி நிரல்தானே உள்ளது? --A-wiki-guest-user (பேச்சு) 08:38, 9 ஏப்ரல் 2019 (UTC)
நான் ஆரம்பத்தில் கொடுத்திருந்த இணைப்பு, இரண்டாவது இணைப்பு கொடுக்கும்வரை சரியாகத்தான் வேலை செய்தது. இப்போது என்ன நடந்தது எனத் தெரியவில்லை. நான் இப்போது இந்த நிகழ்வு நடந்ததற்கான சான்றைக் கொடுத்துள்ளேன். இது நோர்வே அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு பக்கம். எனவே அநேகமானவை நோர்வேஜிய மொழியிலேயே இருக்கின்றது. மொழிபெயர்த்து, தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். என்று எழுதியபோதும், அதற்குப் பின்னர் இரண்டாவது இணைப்பைச் சேர்த்தபோதும், முதல் இணைப்பைச் சரி பார்த்தேன். உண்மையாக அதனை அறிய வேண்டுமெனில், நீங்களும் அதனை அப்போதே மொழிபெயர்த்துப் பார்த்திருப்பீர்கள். அவ்வாறில்லாமல், இப்போது நிகழ்ச்சி நிரல்தானே உள்ளது என்று கூறுவது, வேண்டுமென்றே கூறுவதுபோல்தான் தெரிகின்றது. இருந்தாலும், தற்போது இணைப்பை மீண்டும் சரிசெய்துள்ளேன். அதில் இருக்கும் முதலாவது வசனம் நோர்வேஜிய மொழியில் "Den første Tema Morsmål Tamil konferanse for tamilske tospråklige lærere og assistenter i Norge og Sverige ble arrangert i Bergen den 24. september og 25. september av Bergen kommune og Utdanningsdirektoratet i samarbeid Tema Morsmål ." என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு "The first Theme Mother tongue Tamil conference for Tamil bilingual teachers and assistants in Norway and Sweden was arranged in Bergen on September 24 and September 25 by Bergen Municipality and the Education Directorate in collaboration with Theme Mother tongue." மேலும், இரண்டாவது நிகழ்ச்சி நிரலுக்கான இணைய இணைப்பு முகவரியைப் பார்த்தால் அது பேர்கன் நகராட்சிக்குரிய இணைய முகவரி என்பது புரியும். --கலை (பேச்சு) 14:23, 10 ஏப்ரல் 2019 (UTC)

@A-wiki-guest-user: இது குறிப்பிடத்தக்கமை இல்லாத கட்டுரை அல்ல. இது பற்றி மேலே பிற பயனர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்தமாதிரியான கட்டுரைகளில் பல்வேறு மூலங்களில் இருந்து மேற்கோள்களை எதிர்பார்க்க முடியாது. ஆங்கில விக்கிப்பீடியாவில் இருப்பதுபோல் தமிழ் விக்கிப்பீடியாவில் இறுக்கமாக விதிகளைக் கடைப்பிடிப்பது கடினம். குறைந்த அளவு பங்களிப்பாளர்களைக் கொண்ட தமிழ் விக்கிப்பீடியாவில், அளவுக்கு மீறித் தெரிந்த வார்ப்புருக்களையெல்லாம் இடுவது, பங்களிப்பவர்களுக்குச் சோர்வை உண்டாக்குமே அல்லாது வளர்ச்சிக்கு உதவாது. குறைகள் இருந்தால் அதைத் திருத்துவதற்கான கருத்துக்களை முன்வைக்கலாம் அல்லது குறைகளைக் கண்டவரே திருத்திவிடலாம். கட்டுரையில் எல்லாம் சரியாக இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவை இலகுவில் திருத்தக்கூடியவை. குறிப்பாக கட்டுரையின் செய்திக் கட்டுரைத் தொனியை மாற்றலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், அவ்வாறான பணிகளில் ஈடுபடுபவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டியது அவசியம். ---மயூரநாதன் (பேச்சு) 17:07, 10 ஏப்ரல் 2019 (UTC)

கட்டுரையின் தற்போதைய வடிவைப்பார்க்கையிலும் மேலேயுள்ள உரையாடலைப்பார்க்கையிலும் குறிப்பிடத்தக்கமைச்சிக்கல் இல்லையென்றே உணர்கிறேன். வேறு கொள்கைமீறல்கள் (நிறுவன விளம்பரம், தனிநபர்த்தாக்குதல், காப்புரிமைமீறல் போன்றன) இல்லாதவிடத்தில் நாம் பொதுவாகவே ஏற்புநிலைப்பாட்டையே கொள்ளலாம். கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சிக்கல்களில் சில இப்போதுள்ள நிலையில் இல்லையென்றே தோன்றுகிறது. {{COI}} {{advert}} {{fansite}} {{one source}} {{delete}} {{குறிப்பிடத்தக்கமை}} ஆகியவற்றை நீக்கிவிட்டு, {{refimprove}} சான்றுகளைச்சேர்ப்பதில் அனைவரும் ஈடுபடலாம். -- சுந்தர் \பேச்சு 04:27, 11 ஏப்ரல் 2019 (UTC)

  விருப்பம்
சில நிகழ்வுகளைப் பார்க்கும்போது இங்குள்ளவர்கள் பலர் கூட்டாக, ஒத்த கருத்துள்ளவர்களான இயங்குவதாகத் தெரிகின்றது. குறிப்பிடத்தக்கமை இல்லை என்பதற்காக எத்தனை கட்டுரைகள் இங்கு அழிக்கப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் கலை சில பயனர்களை பெயர் குறிப்பிட்டு அழைக்கவில்லை. தான் உருவாக்கிய கட்டுரை அழிக்கப்பட வேண்டாம் என்ற ஈகோவா அல்லது தங்கள் விருப்புக்குரிய பயனரின் கட்டுரையைக் காக்க வேண்டும் என்று சிரேஷ்ட உறுப்பினர்கள் முயல்கிறீர்களா? எனக்கு உங்கள் துப்புரவு மற்றும் பிற, பல, பொதுவிடயங்களில் ஆர்வமில்லை. இக்கட்டுரை குறிப்பிடத்தக்கதா இல்லையா என்றே கேட்கிறேன். இது பற்றி மட்டும் உரையாடுங்கள்.
//தான் உருவாக்கிய கட்டுரை அழிக்கப்பட வேண்டாம் என்ற ஈகோவா// @A-wiki-guest-user: அருள்கூர்ந்து இப்படியெல்லாம் தனிமாந்தர் குறித்த கருத்துகள் வேண்டாம். விக்கி நற்பண்புகளை மேற்கொள்ளவேண்டுகின்றேன். "இக்கட்டுரை குறிப்பிடத்தக்கதா இல்லையா என்றே கேட்கிறேன். இது பற்றி மட்டும் உரையாடுங்கள். " (சாய்வெழுத்து என் அழுத்தம்) என்று கூறும் நீங்கள் இங்கு கருத்திட்டவர்களைப் பற்றித் தேவையில்லாதவற்றைக் கற்பனையாகவும் சொல்லுகின்றீர்கள்.--செல்வா (பேச்சு) 21:52, 11 ஏப்ரல் 2019 (UTC)
முதன் முதலில் வெளிநாட்டினரின் தாய்மொழி ஒன்றிற்கான அரசாங்க அனுசரணையோடு நடந்த மாநாடாகும். என்பது "The first Theme Mother tongue Tamil conference for Tamil bilingual teachers and assistants in Norway and Sweden was arranged in Bergen on September 24 and September 25 by Bergen Municipality and the Education Directorate in collaboration with Theme Mother tongue." என்பதின் மொழிபெயர்ப்பா? --A-wiki-guest-user (பேச்சு) 06:18, 11 ஏப்ரல் 2019 (UTC)
முதன் முதலில் வெளிநாட்டினரின் தாய்மொழி ஒன்றிற்கான அரசாங்க அனுசரணையோடு நடந்த மாநாடாகும். - மீண்டும் குறிப்பிடுகிறேன் இதில் உள்ள மேற்கோளில் நிகழ்ச்சி நிரல்தான் உள்ளது. வசனத்திற்கு ஏற்ற மேற்கோள் இல்லை. இல்லாத ஒன்றிற்கு மேற்கோள் கொடுத்துள்ளீர்கள். --A-wiki-guest-user (பேச்சு) 09:15, 11 ஏப்ரல் 2019 (UTC)


A-wiki-guest-user!
  1. &&குறிப்பிடத்தக்கமை இல்லை என்பதற்காக எத்தனை கட்டுரைகள் இங்கு அழிக்கப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் கலை சில பயனர்களை பெயர் குறிப்பிட்டு அழைக்கவில்லை.&& என்று கூறியிருக்கிறீர்கள். குறிப்பிடத்தக்கமை இல்லை என்ற காரணத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ நீக்கப்பட்ட அத்தனை கட்டுரைகளையும் நான் பார்த்திருப்பேன் என்ற முடிவுக்கு எவ்வாறு நீங்களாகவே வருகின்றீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இந்தக் கட்டுரை எனது கவனிப்புப் பட்டியலில் உள்ளது. வழக்கமாக விக்கியினுள் வந்ததும் நான் கவனிப்புப் பட்டியலைத்தான் பார்ப்பேன். அதில் ஏதாவது இருந்தால் செய்துவிட்டு, நேரமிருப்பின் அண்மைய மாற்றங்களுக்குப் போவேன். அல்லது அதனையும் பார்க்காமல் நான் செய்ய எண்ணியிருக்கும் ஏதாவது ஒரு வேலையைச் செய்வேன். ஒருவர் எது எதைப் பார்க்கவேண்டும், எதனையெல்லாம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் விக்கியில் இல்லையே. விக்கியில் நாம் விரும்பும் வேலைகளை, நமக்குக் கிடைக்கும் நேரத்தைப் பொறுத்துச் செய்யலாம்தானே. என்னைப் போலவே மற்றவர்களும் இந்தக் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தைப் பார்க்காமல் போவதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்பது எனக்குத் தெரியும். எனவே ஒரு முடிவுக்கு வருவதும் கடினம். அதனால், சிலரையாவது அழைத்துக் கேட்கலாமே என்று அழைத்தேன். இதில் என்ன தவறு உள்ளதெனப் புரியவில்லை.
  2. எனது கவனிப்புப் பட்டியலில் இந்தக் கட்டுரை இருந்ததால், எனது பார்வைக்கு வந்தது. இந்தக் கட்டுரை தேவையான ஒன்று என நான் கருதுவதால், அதுபற்றி உரையாடவேண்டி வந்தது. இதில் எங்கிருந்து ஈகோ வருகிறது என்பது எனக்குப் புரியவில்லை. எனது கட்டுரை மட்டுமல்ல, நீக்கல் வார்ப்புரு இணைக்கப்பட்ட, மற்றவர்களால் எழுதப்பட்ட பல கட்டுரைகளை நான் விரிவாக்கம் செய்தோ, உரை திருத்தியோ, வேண்டிய மேற்கோள்களைத் தேடி எடுத்து இணைத்தோ மேம்படுத்தி நீக்கல் வார்ப்புருவை நீக்கியிருக்கிறேன். நான் விக்கியில் வேலை செய்யும் விதம் அப்படித்தான். எனவே ஈகோ என்றெல்லாம் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்துவிட்டு உரையாடினீர்கள் என்றால் நல்லது.
  3. எனது பார்வையில் ஏன் இந்தக் கட்டுரை குறிப்பிடத்தக்கதாக நான் கருதுகிறேன் என்பதனை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஏற்கனவே மேலே நான் கூறியபடி, நான் நினைப்பது ஒருவேளை தவறாக இருந்தாலும், ஏனையவர்களுக்கும் அவ்வாறு தோன்றுகிறதா என்று அறிவதற்காக பெயர் குறிப்பிட்டு அழைத்தேன். விடயம் அறிந்தவர்களை அழைப்பதில் என்ன தவறு எனப் புரியவில்லை. ஏனையோரும் குறிப்பிடத்தக்கமை சிக்கல் இல்லையென்றே குறிப்பிட்டுள்ளார்கள். செல்வா மிக விரிவாகவே ஏன் இந்தக் கட்டுரை குறிப்பிடத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.
  4. நீங்கள் கேட்ட விடயங்களுக்கேற்ப கட்டுரையில் திருத்தங்கள் செய்தேன். எந்த மாற்றத்தையும் வளர்முகமாக எடுக்கத் தயாரகவே இருந்தேன். அதனால்தான், மேலே கலைக்களஞ்சிய நடையில் இல்லையெனக் கருதினால், எவரும் உதவலாம். என்றும் குறிப்பிட்டிருந்தேன். எவரும் கட்டுரையை உரை திருத்தலாம்தானே. துப்பரவு வார்ப்புருக்கள் இணைக்கப்பட்ட பல கட்டுரைகளை உரைதிருத்தி துப்பரவு வார்ப்புருக்களை நீக்கியிருக்கிறேன். வார்ப்புருக்களை மட்டும் இணைத்துக் கொண்டிராமல், அவற்றைத் திருத்த முடிந்தால் திருத்தி, அவற்றை ஏற்கத்தக்க கட்டுரையாக மாற்றுவதே எனது விருப்பம். அதனால் அவ்வாறான வேலைகளை நான் விக்கியில் செய்வது வழக்கம். ஆனால், இவ்வாறு நடந்த நிகழ்வுபற்றிய ஒரு கட்டுரையை எவ்வாறான சொற்றொடர்களால் எழுதலாம் என்பது எனக்குச் சரியாகப் புரியாததனால், மற்றவர்களிடம் உதவி கேட்கின்றேன்.
  5. &&குறைகள் இருந்தால் அதைத் திருத்துவதற்கான கருத்துக்களை முன்வைக்கலாம் அல்லது குறைகளைக் கண்டவரே திருத்திவிடலாம். கட்டுரையில் எல்லாம் சரியாக இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவை இலகுவில் திருத்தக்கூடியவை. குறிப்பாக கட்டுரையின் செய்திக் கட்டுரைத் தொனியை மாற்றலாம்.&& என்று மயூரநாதன் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு வளர்முகமான கருத்து. குறைகளை காண்பவரேகூடத் திருத்தலாம். நன்றி மயூரநாதன்.
  6. இங்கே கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளிப்பதன் மூலம் உரையாடலை நகர்த்திச் சென்று ஏன் இந்தக் கட்டுரை குறிப்பிடத்தக்கது என்பதைக் காட்டுவதே எனது நோக்கம். அதனை எனது சொந்தக் கருத்து என்கிறீர்கள்.
  7. மொழிபெயர்ப்புத் தவறெனக் கருதினால், நீங்களேகூட அதனைத் திருத்தியிருக்கலாம். மாநாட்டில் முதன் முதலில் வெளிநாட்டினரின் தாய்மொழி ஒன்றிற்கான அரசாங்க அனுசரணையோடு நடந்த மாநாடு என்றே கூறினார்கள் என்பதனால் அவ்வாறே எழுதிவிட்டேன். தற்போது இணைப்பில் உள்ளவாறு அதனைத் திருத்தியுள்ளேன்.
  8. கட்டுரை குறிப்பிடத்தக்கதா என நிறுவ வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டபடியால், குறிப்பிடத்தக்கமை பக்கத்தைப் பார்த்து, அதிலுள்ள ஒவ்வொன்றுக்கும் பதிலும் எழுதினேன். அதற்கு நீங்கள் வாதிடுதலின் மூலம் சரியென காட்ட முயல்கிறீர்களா? என்று கேட்கிறீர்கள். நிறுவும்படி கேட்டதை நிறுவ முயன்றால், அதனை வாதிடல், ஈகோ என்றால், இங்கே வேறு எப்படி உரையாடுவது? மற்றவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறினால், தங்கள் விருப்புக்குரிய பயனரின் கட்டுரையைக் காக்க வேண்டும் என்று சிரேஷ்ட உறுப்பினர்கள் முயல்கிறார்கள் என்கிறீர்கள். இங்கே விருப்பப் பயனர், விருப்பமில்லாப் பயனர் என்றெல்லாம் எவரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் ஒரு பொது நோக்கில்தான் இயங்குகின்றார்கள். தயவுசெய்து பயனர்கள் மேல் குற்றம்சாட்டுவதைத் தவிர்த்துவிட்டு, கட்டுரையிலுள்ள குறைகளை நீக்குவதுபற்றி உரையாடுங்கள்.
நாம் அனைவரும் ஒரு பொது நோக்கில்தான் இந்த விக்கிப் பணியில் ஈடுபடுகிறோம். இதில் தேவையில்லாமல், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிராமல், விக்கியின் வளர்ச்சிக்கு எம்மாலானதைச் செய்வோமே. முதலில் இருந்து மீண்டும் ஒருமுறை இந்தப் பேச்சுப் பக்கத்திலுள்ள அனைத்தையும் வாசித்துப் பார்த்தால் புரியும் என நினைக்கிறேன்.
--கலை (பேச்சு) 19:13, 11 ஏப்ரல் 2019 (UTC)
  • @A-wiki-guest-user and A-wiki-guest-user: சுந்தர் சொன்னது போல, "சில இப்போதுள்ள நிலையில் இல்லையென்றே தோன்றுகிறது.

{{COI}} {{advert}} {{fansite}} {{one source}} {{delete}} {{குறிப்பிடத்தக்கமை}} ஆகியவற்றை நீக்கிவிட்டு, {{refimprove}} சான்றுகளைச்சேர்ப்பதில் அனைவரும் ஈடுபடலாம்." -- ஆகவே இவற்றை நீக்கலாமா? --செல்வா (பேச்சு) 21:52, 11 ஏப்ரல் 2019 (UTC)

  விருப்பம் ---மயூரநாதன் (பேச்சு) 02:08, 12 ஏப்ரல் 2019 (UTC)
நான் தனி ஒரு ஆளாக உரையாடிக் கொண்டிருக்க, நீங்களாக முடிவெடுத்து வார்ப்புருக்களை நீக்கியுள்ளீர்கள். வார்ப்புருக்கள் நீக்கப்பட முன், குறித்த சிக்கல் முடிந்ததா எனக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் அல்லவா? உரையாடலின் பாதியில் இவ்வாறு நடந்து கொள்வது எப்படி ஜனநாயகமாக இருக்கலாம்? உங்கள் பலரின் இந்த அதிகாரப் போக்கு மற்றைய பயனர்களை இங்கு வரவிடாமல் தடுக்கிறது. இதனால்தான் பிறர் உங்களை வன் சொல்லால் திட்ட வைக்கிறது. இதுவரைக்கும் கருத்துடன் தொடர்புபடாமல் சுற்றி வளைத்து, அதிகமாகப் பேசுகிறீர்கள். கலை, உங்கள் கட்டுரையை உங்கள் சகா காப்பாற்றிவிட்டார். இதுபோல் 1000 கட்டுரைகள் எழுதுங்கள். மற்றவர்களின் கருத்துக்கு தமிழ் விக்கிப்பீடியா கட்டுரையை பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள் ஆரோக்கியமாக உரையாடுவோம். --A-wiki-guest-user (பேச்சு) 07:31, 12 ஏப்ரல் 2019 (UTC)
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு/ சொன்ன குறைகளுக்கு நேரடியாக, விபரமாகப் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், கட்டுரையில் சில திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேரடியான பதிலைத் தராத நீங்கள், மற்றவர்களைச் சுற்றி வளைத்துப் பேசுவதாகச் சொல்வது வேடிக்கையாக உள்ளது. உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளை மீண்டும் பார்த்தால் தெரியும்.
//கலை, உங்கள் கட்டுரையை உங்கள் சகா காப்பாற்றிவிட்டார். இதுபோல் 1000 கட்டுரைகள் எழுதுங்கள்// என்று எழுதுவதில் இருந்தே, நீங்கள் சில முன்முடிவுகளுடனேயே உங்கள் கருத்துக்களைச் சொல்கிறீர்கள் என்பதும், ஆரோக்கியமான உரையாடலுக்குத் தயாரில்லை என்பதும் புரிகிறது. கருத்துக்களுக்குப் பதிலளிக்காமல், மீண்டும் மீண்டும் பயனர்களைக் குறைகூறுவதிலேயே கவனம் செலுத்துவதால், உங்களுடன் உரையாடிப் பலனில்லை. எனவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
--கலை (பேச்சு) 21:32, 12 ஏப்ரல் 2019 (UTC)

படிமங்கள் தொகு

இக்கட்டுரையில் உள்ள படிமங்கள் அனைத்தும் பொதுவகத்திற்கு நகர்த்தப்பட்ட பின்னர் அவை இக்கட்டுரையில் (ஒன்றிரண்டைத் தவிர) காட்சிப்படுத்தப்பட மாட்டாது.--Kanags (பேச்சு) 09:36, 11 ஏப்ரல் 2019 (UTC)

நன்றி Kanags! ஒருவேளை படங்களைத்தான் A-wiki-guest-user விளம்பரம் எனக் கூறுகின்றாரா எனத் தெரியவில்லை. எந்தப் பகுதி விளம்பரம் போல் தெரிகின்றது எனக் கேட்டதற்கு அவரிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. இருந்தாலும், படங்களைத்தான் விளம்பரம் என்று குறிப்பிட்டால், அவற்றைத் தவிர்க்கலாம் என நினைக்கிறேன். எனவே படம் எதனையும் போடாமலே விடலாம். வேறு எந்தக் கட்டுரைக்கும், அந்தப் படங்கள் பயன்படாது என்பதனால், பொதுவகத்திலிருந்தும் அவற்றை நீக்கிவிடலாமா அல்லது அது இருக்கட்டுமா?. --கலை (பேச்சு) 18:37, 11 ஏப்ரல் 2019 (UTC)

அப்படியில்லை, இப்போதுள்ளது போலவே இருக்கலாம். படங்களை நீக்கத் தேவையில்லை. கட்டுரையில் அனைத்துப் படங்களையும் காட்சிப்படுத்துவது சிறந்ததாகப் படவில்லை. அதனாலேயே பொதுவகத்திற்கு மாற்றினேன். அதுவே பொதுவான விக்கி நடைமுறை.--Kanags (பேச்சு) 08:00, 12 ஏப்ரல் 2019 (UTC)
Return to "தமிழ் - தாய்மொழி மாநாடு 2010 - பேர்கன்" page.