பேச்சு:தொண்டைமான்

"சோழர் ஆட்சியில் தொண்டைமான்" என்ற தலைப்பின் கீழ் உள்ள பின்வரும் வரிகள், சாண்டில்யன் என்ற புனைகதையாசிரியர் எழுதிய "கடற்புறா"கதையின் பாகம்1 ன் சுருக்கமே தவிர, சரித்திரச்சான்று அற்றது.

"...ஜெயவர்மனின் ஸ்ரீவிஜய கொடுங்கோலாட்சிக்கு எதிராக, அவரின் சகோதரர் குணவர்மர் (காஞ்சனா தேவியின் அப்பா), சோழரின் உதவியை நாடுகிறார். வீரராஜேந்திர சோழ தேவர் கருணாகர பல்லவனை கலிங்கத்திற்கு அனுப்புகிறார். அத்துடன் சமாதான ஓலை ஒன்றையும் கொடுத்து தென் கலிங்க மன்னன் பீமனிடம் சேர்ப்பிக்க உத்தரவிடுகிறார். கருணாகர பல்லவன் கொண்டு வரும் ஓலையை சற்றும் மதிக்காமல் தூக்கியெரிகிறான். பல்லவனையும் அவனை சார்ந்தவர்களையும் சிறை செய்து மரண தண்டனை வழங்குகிறான். அபாயத்தில் இருந்து தப்பி செல்கிறார்கள். கலிங்கம் மற்றும் ஸ்ரீவிஜயத்தின் கொட்டத்தை அடக்க தீர்மானம் எடுக்கிறான் கருணாகர பல்லவன். முதலில் கலிங்கத்தின் கடல் ஆதிக்கத்தை உடைக்கிறான். பிறகு குணவர்மனை ஸ்ரீவிஜய பேரரசின் அரியனையில் ஏற்றுகிறான ஸ்ரீவிஜய வெற்றிக்குப் பிறகு வீர ராஜேந்திர சோழ தேவர், கருணாகரனை வண்டை மாநில சிற்றரசானாக்கி காஞ்சனா தேவியையும் மணம் முடித்து வைக்கிறார்."

1)தென்கலிங்கத்துக்கு கருணாகர பல்லவனிடம் வீர ராஜேந்திரர் சமாதான ஓலை அனுப்பியது. 2)பீமன் கருணாகர பல்லவனையும் அவனை சார்ந்தவர்களையும் சிறை செய்து மரண தண்டனை வழங்குவது 3)வீர ராஜேந்திரர் அரசராக இருந்த காலத்திலேயே கலிங்கத்தின் கடல் ஆதிக்கத்தை கருணாகர பல்லவன் உடைப்பது 4)ஸ்ரீவிஜய வெற்றிக்காக வீரராஜேந்திரர் கருணாகரனுக்கு வண்டை மண்ணின் அரசைத்தருவது

போன்ற வரிகள் முற்றிலும் கற்பனையானது. "கடற்புறா"கதையின் பாதிப்பில் எழுதப்பட்டிருப்பது. மேற்கூறியவற்றுக்கு எந்த சரித்திரச்சான்றும் இல்லை. கலிங்கத்துப் பரணியிலும் இக்கருத்துக்கள் கூறப்படவில்லை.

காஞ்சனாதேவி என்றகதாபாத்திரமும் முற்றிலும் கற்பனையே! அதுபோல "வண்டை"என்பது குறுநிலமாகத்தான் இலக்கியங்கள் காட்டுகின்றன. அது ஒரு மாநிலம் அல்ல. --விமலாதித்தன் 18:37, 1 ஆகஸ்ட் 2009 (UTC)

ஒரு மன்னர் இன்ன சாதியெய் சேர்ந்தவர் என எவ்வாறு சொல்லலாம். ஒரு மன்னருக்கு பல மனைவிகளும் அந்தபுரத்தில் பல பெண்களும் இருக்கலாம். அதனால் எல்லா சாதியரும் நாங்கள் மன்னர் வழி வந்தவர்கள் என சொல்ல உரிமை உண்டு என நினைக்கிறேன்.பல வரலாற்று ஆசிரியர்கள் சோழர்கள் முத்தரையர் குமுகத்தை சேர்ந்தவர்கள் என சொல்வதையும், வன்னியர்கள் நாங்கள் தான் மன்னர் என்பதையும் தமிழகம் கண்டுள்ளது. மேலும் நாடர்கள் நாங்கள் பாண்டியர்கள் என்றும், மள்ளர்கள் மூவேந்தனின் வாரிசுகள் நாங்கள் தான் என்பார்கள். மறையர்கள் களப்பிரர் என்ற கருத்தாக்கமும் உண்டு. அருந்ததியர் நாங்கள் அதியமானின் வழி வந்தவர்கள் என் சொல்வதையும் படித்துள்ளேன். விகியில் எழுதும் போது ஒரு மன்னரின் பெயருக்கு பின்னால் சாதி வேண்டாம் என்பது என் கருத்து. --Munaivar. MakizNan 19:15, 1 ஆகஸ்ட் 2009 (UTC)

கருணாகரத்தொண்டைமான் எனவும், கருணாகரப் பல்லவன் எனவும் குறிப்பிடப்படுவோர் ஒருவரே என்பது தெரிகிறது . கலிங்கப்போரில் படைத்தளபதியாய் சென்ற கருணாகரப்பல்லவன் அல்லது கருணாகரத்தொண்டைமான் பற்றிய செய்திகளைச் சேர்த்துள்ளேன். --Parvathisri 20:09, 8 அக்டோபர் 2011 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொண்டைமான்&oldid=894225" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தொண்டைமான்" page.