பேச்சு:நாரீனி (புரதம்)

Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்
நாரீனி (புரதம்) உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நாரினி அல்லது நாரீனி - ? --சிவகுமார் 16:58, 26 ஜூலை 2006 (UTC)

நார் உண்டாக்கத் துணை செய்வது. நாரினி. குறிலாக இருக்க வேண்டும்.--C.R.Selvakumar 17:44, 26 ஜூலை 2006 (UTC)செல்வா
நன்றி செல்வா! நாரை ஈனுவதால் நாரீனி என்று நினைத்தேன். இது எவ்வாறு குறிலாக மாறுகிறது என்பதை விளக்குவீர்களா? --சிவகுமார் 18:34, 26 ஜூலை 2006 (UTC)
பலே! நார்தனை ஈனுவதால் (நார் + ஈனி =) நாரீனி என்று சொல்லலாம். மிக நல்ல ஆக்கம். என்னுடைய ஆக்கம் சற்று இடக்கரான ஆக்கம். நார் + இனி (இனி என்றால் இதுமுதல், இதுதொடங்கி என்று பொருள்). மேலும் தமிழில் வினைச்சொற்கள் எளிதாக அமைகின்றது. காய் > காய்த்தல், கிளை > கிளைத்தல், துளிர் > துளிர்த்தல் (இவைகளில் காய், கிளை, துளிர் என்பதெல்லாம் வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் ஆகும். சேர் என்பது வினைச்சொல், ஆனால் அதே நேரம் சேர் என்பது களஞ்சியம் என்னும் பொருள் படும் பெயர்ச்சொல்லும் ஆகும்). நார், நாரி இரண்டும் பெயர்ச்சொல்தான், ஆனால் நார்த்தல், நாரித்தல் என்று (வினைச்சொல்லாகக்) கொண்டு நாரிப்பது நாரினி என்று கொண்டேன். இது இடக்கரான வழிதான். இன்னுமொரு துணைக்காட்டு: தமிழில் ஈர் என்றால் இரண்டு, ஈரம் என பல பொருட்கள் உண்டு, அதில் ஈரம் என்னும் பொருள் வழி வினைச்சொல் ஆகிய ஈர்த்தல் (=குளிர்தல்) > ஈரித்தல், ஈரிப்பு என்று குறிக்கப்படும் (இவை என் ஆக்கம் அல்ல) . வேற்றுமொழிச் சொல்லாகிய பயணம் என்பதைக்கூட தமிழில் பயணிக்க என்று வினைச்சொல்லாக ஆக்க முடியும். பொதுவாக வினைச்சொல்லில் இருந்துதான் பெயர்ச்சொல் வருவதாகும் (வினையடி தமிழில் சிறப்பு), ஆனால், தேவைக்கேற்ப பொருந்துமாறு பெயர்ர்சொல்லில் இருந்தும் வினைச்சொல் ஆக்கிக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் laser என்பது ஒரு எழுத்துச்சுருக்குப் பெயர் (முதல் எழுத்தோ, பிற எழுத்துக்களோ கொண்டு ஆக்கப்படும் சொல்), இதனை இன்று lasing என்று வினைச்சொல்லாகப் பயன் படுத்துகிறோம். இவ்வகை வழக்கு ஆங்கிலத்தில் மிக அண்மையில் எழுந்த ஒன்றெ. தமிழிலும் இப்படி ஆக்கலாம், ஆனால் அரிதாக பொருத்தமாகச் செய்ய வேண்டும், ஏனெனில் தமிழில் வினைச்சொற்கள் அதிகமாகவும் சிறப்பாகவும் உள்ளன, ஆகவே இம்முறை தேவையற்றது. நார் என்பதற்கு பதிலாக இழை என்று கொண்டால் இழை என்பது பெயர்ச்சொல்லு, வினைச்சொல்லும் இரண்டும் ஆகும். எனவே இழைனி, இழைவி என்று ஆக்கியிருக்கலாம். நாரீனி என்னும் சொல் எனக்குப் பிடித்துள்ளது அப்படியே மாற்றிக்கொளவ்தில் எனக்கு உடன்பாடே. மற்ற பயனர்கள் என்ன சொல்லுகிறார்கள் என அறிந்து கொண்டு செய்யலாம். --C.R.Selvakumar 19:55, 26 ஜூலை 2006 (UTC)செல்வா
Fibrinogen என்பதற்கு சிறப்பான கலைச்சொல் நாரீனி! , இதன்படி fibrin ஐ நாரி எனலாம். நாரீனிக்கு வழிமாற்றுகின்றேன்.--செந்தி//உரையாடுக// 18:59, 11 மே 2011 (UTC)Reply
நாரீனி நன்கு பொருந்தும் சொல்லாய்த் தெரிகிறது.--சஞ்சீவி சிவகுமார் 22:47, 11 மே 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாரீனி_(புரதம்)&oldid=773357" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நாரீனி (புரதம்)" page.