பேச்சு:பயண இலக்கியம்

நீக்கலாமா? தொகு

பின்வரும் பகுதி இக்கட்டுரைக்குப் பொருத்தமற்று இருக்கிறது. இதனை நீக்கிவிடலாமா?

பயண இலக்கியத்தின் பொற்காலம்

19, 20 நூற்றாண்டுகளை பயண இலக்கியத்தின் பொற்காலம் என்று கூறலாம். கி.பி. 1988 முதல் 2008 வரையிலான காலப்பகுதியில் தமிழில் ஏறத்தாழ 600 புத்தகங்கள் வெளி வந்துள்ளன. ஜான் மர்டாக் என்பவர் தமிழில் வெளியான நூல்களை எல்லாம் பல்வேறு வகைப்படுத்திப் பட்டியலிட்டார்.[1] நூல்களை வகைப்படுத்தி பட்டியலிடும் முறைக்கு இவரே தந்தை எனலாம். பயண நூல் பட்டியலை வகைப்படுத்தி தொகுப்பதன் மூலம் பயண இலக்கியம் பற்றிய முழுமையான சித்திரிப்பை நம்மால் பெற இயலும்.

19 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய உலகில் மட்டுமின்றி இந்திய இலக்கிய உலகிலும் புதிய திசைகளைத் தேடிய நேரம். இந்திய விடுதலை இயக்கம் தமிழ் நாட்டில் காந்திய வழியில் போராடிய நேரம். ஜேம்ஸ் ஆகுஸ்டுஸ் ஹிக்கி வங்காளத்தில் புதிய அச்சு இயந்திரத்தை இந்தியருக்கு அறிமுகப்படுத்தினார். நவீன அச்சு இயந்திரத்தின் வரவால் புத்தகங்கள் கிடைப்பது எளிதானது. புத்தகங்களின் வரவால் மேலை, கீழை நாட்டு இலக்கியங்கள் பற்றிய அறிமுகம் கிடைத்தது. படித்த நடுதர வர்கம் என்று சமூகத்தில் ஒரு புதிய வகை மக்கள் தோன்றினார். கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு என்று ஒவ்வொரு துறையிலும் புதிய திசையை கண்டறிவது அவசியம் ஆனது. புதிய இலக்கிய வகை அறிமுகம் அனைத்து மொழிகளுக்கும் கிடைத்தது. --பொன்னிலவன் (பேச்சு) 09:21, 10 செப்டெம்பர் 2012 (UTC)Reply

ஆம், இரண்டாம் பகுதி தேவையற்றது. நீக்கலாம். முதற் பகுதியில் 1988 - 2008 பகுதியில் வெளியான 600 புத்தகங்களும் பயண இலக்கியங்களா எனத் தரப்படவில்லை. அவ்வாறாகவும் இருக்கலாம். இப்பகுதியைச் சீர் செய்யலாமா எனப் பார்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 09:47, 10 செப்டெம்பர் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பயண_இலக்கியம்&oldid=1208527" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பயண இலக்கியம்" page.