பேச்சு:பலத்தீன் நாடு

தமிழில் பாலஸ்தீனம் அல்லது பாலத்தீனம் என்று தானே பயன்பாட்டில் உள்ளது? ஏனைய மொழிகளுக்கேற்ப தமிழ் வளைந்து கொடுக்க வேண்டுமா? மீண்டும் பாலத்தீன நாடு என மாற்றப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 20:43, 9 நவம்பர் 2011 (UTC)Reply

பாலஸ்தீனம் என்ற சொல் எங்கிருந்து வந்தது? ஒரு சிலர் பாலத்தீனம் என்று பயன்படுத்தினாலும் பலஸ்தீன் என்று பயன்படுத்தும் ஏராளமான தமிழ் நூல்கள் இருப்பதை நீங்கள் காணவில்லையா?--பாஹிம் 20:50, 9 நவம்பர் 2011 (UTC)Reply

கனக்ஸ். இது வளைந்து கொடுத்தல் இல்லை - சரி செய்தல். “பாலஸ்தீனம்” என்பது தமிழ் exonym அல்ல. அன்னிய மொழிச் சொற்களின் ஆங்கில எழுத்துப்பெயர்ப்பினை நமது ஊடகங்கள் தவறாக உச்சரிப்பதால் எழுந்த பிழை. ஒலி/ஒளி உச்சரிப்பு உதவி இல்லாத காலத்து அச்சு ஊடகங்களில் எழுத்துப்பெயர்ப்பினை மட்டும் கண்டு (அல்லது ஆங்கிலோ அமெரிக்க ஊடகங்களின் உச்சரிப்பை மட்டும் கண்டு) நாம் உச்சரித்தனால் இது போல எக்கச்சக்கமான பிழைகள் ஏற்பட்டுள்ளன. பொதுப்பயன்பாடு தவறேனில் திருத்தத் தானே வேண்டும். அடைப்புகளில் அவற்றைக் குறிப்பிடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 20:52, 9 நவம்பர் 2011 (UTC)Reply

இக்கட்டுரை நாடு பற்றிய அரசாங்கம், மக்கள், போக்குவரத்து, மொழி, பண்பாடு என்றில்லாமல் வரலாறு மட்டுமே கொண்டுள்ளது. இக்கட்டுரையை பலத்தீன் வரலாறு என தலைப்பை மாற்றலாம்.பலத்தீன் நாடு பற்றிய வேறு கட்டுரை தொடங்கலாம். --ஜுபைர் அக்மல் 17:38, 25 திசம்பர் 2016 (UTC)Reply

ஜுபைர் அக்மல்: நீங்கள் சொல்வது சரியே. இக்கட்டுரையில் குறிப்பாக இந்த மாற்றத்தைக் கவனிக்க வேண்டும். எவ்வித மேற்கோள்களும் இல்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது. கட்டுரையின் தலைப்பை மாற்றாமல் கட்டுரையில் நீங்கள் மேலே குறிப்பிட்ட தேவையான தகவல்களை (மேற்கோள்களுடன்) சேருங்கள். மீதிப் பகுதியைப் பற்றிப் பின்னர் முடிவெடுக்கலாம். @AntanO: கவனிக்க.--Kanags \உரையாடுக 00:04, 26 திசம்பர் 2016 (UTC)Reply

பலஸ்தீன நாடு (State of Palestine, அரபு:دولة فلسطين, dawlat filastin, எபிரேய மொழி: מדינת פלסטין, medinat phalastin ) என்பது இஸ்ரேல் நாட்டால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பலஸ்தீன மக்களுக்காக உருவாக்கப்பட இருக்கும் நாட்டுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். இது ஒரு சுதந்திரமான நாடு அல்ல

கேள்வி : பலஸ்தீன நாட்டின் பல பகுதிகள் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, ஆகையால் இஸ்ரேல் நாட்டால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பலஸ்தீன மக்களுக்காக உருவாக்கப்பட இருக்கும் நாட்டுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் என்பது எப்படி சரியாகும், பலஸ்தீன் ஒரு சுதந்திர நாடு விளக்கம் தேவை

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பலத்தீன்_நாடு&oldid=3934207" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பலத்தீன் நாடு" page.