பேச்சு:பெரும் பூநாரை

(செங்கால் நாரைக் கட்டுரை குறித்த பேச்சுகள் ) கட்டுரை அருமையாக உள்ளது. இருப்பினும், பூநாரை என்ற பெயரில் உள்ள கட்டுரையோடு இதை இணைக்கலாமே?--பரிதிமதி 16:52, 2 பெப்ரவரி 2012 (UTC)

பூநாரை வேறு செங்கால் நாரை வேறு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வெவ்வேறு பறவைகள் இவை--Parvathisri 17:10, 2 பெப்ரவரி 2012 (UTC)
ஆம். பூநாரை வேறு (Phoenicopterus roseus, P. minor) செங்கால் நாரை வேறு (Ciconia ciconia). தாங்கள் எழுதியிருப்பது பூநாரையைக் குறித்து அல்லவா? (காண்க. தமிழில் பறவைப் பெயர்கள் - டாக்டர். க. ரத்னம் - பக். 19, 20)--பரிதிமதி 17:44, 2 பெப்ரவரி 2012 (UTC)

சிவக்குமார் (கோவை) முன்பு இந்தக் கட்டுரையைப் பகிர்ந்தார்: பார்க்கவும் பேச்சு:பறவை : நான் பி.எல் சாமி அவர்களின் நூலையும் பார்க்கின்றேன் (இப்பொழுது கையருகே இல்லை). ஆங்கில விக்கியில் White Stork என்று ஒருபறவையின் படத்தைக் காட்டியுள்ளார்கள். பார்க்கவும்: இங்கே சிவந்த கால்களையும், சிவந்த அலகையும் கொண்ட கறுப்புப்பகுதியும் இறக்கையில் கொண்ட வெள்ளை நாரையைப் பார்க்கலாம். இதன் அறிவியல், உயிரினப் பெயர் பரிதிமதி மேலே சொன்ன, டாக்டர் க. ரத்னம் அவர்கள் நூலில் குறிப்பிட்டதாகக் கூறும்- Ciconia ciconia. தமிழ் இலக்கியத்தில் சொன்னவாறே வலசைச் செல்லும் பறவையும் கூட. இந்த சிவப்புக் கால்களையுடைய வெள்ளை நாரை. --செல்வா 18:07, 2 பெப்ரவரி 2012 (UTC)

  • தமிழ்ப் பேரகரமுதலி (Tamil Lexicon) "செங்கானாரை" என்பது Tantalus leucocephalu என்கிறது. இது இன்று ஆங்கிலத்தில் Painted Stork எனப்படும் பறவை (இதன் பெயர்கள் Tantalus leucocephalus, Ibis leucocephalus, Pseudotantalus leucocephalus என்கிறது ஆங்கில விக்கி). ஆனால் இந்தப் பறவை வலசை போவதல்ல. வேடந்தாங்கல் பக்கத்திலும் இதனைச் செங்கால் நாரை என்று குறித்திருக்கின்றது. இக் கருத்துகளையும் நினைவில் கொள்க.--செல்வா 18:44, 2 பெப்ரவரி 2012 (UTC)
செங்கால் நாரை என்பது ஆங்கிலத்தில் White Stork என்றும், அறிவியலில் Ciconia ciconia என்று கூறப்படுவதுதான் என்பது பி. எல். சாமி அவருடைய சங்க இயக்கியத்தில் புள்ளின விளக்கம் என்னும் நூலின் 9 ஆவது அத்தியாயத்தில் இருந்து தெளிவாகின்றது (தலைப்பே செங்கால் நாரை (White Stork) என்பதே). அதில் அவர் எவ்வாறு சென்னைப் பல்கலைக்கழக அகராதி தவறாகக் குறித்துள்ளது என்பதனையும் எடுத்துரைக்கின்றார். சத்தி முற்றப் புலவர் பாடலில் வரும் "செங்கால் நாராய் செங்கால் நாராய்" என்னும் பாட்டில் வரும் "பழம்படு பனையின் கிழங்குபிளந்தன்ன" என்பதனைச் சுட்டிக்காட்டி, இந்து நாளிதழில் மா.கிருஷ்ணன் என்பார் எவ்வாறு பனங்கிழங்கையும், இந்த நாரையின் அலகின் படத்தையும் அடுத்தடுத்தாற்ப்போல் வைத்துக் காட்டி ஒற்றுமையை உணரும்படிச் செய்தார் என்றும் கூறி உறுதி செய்கிறார். இது வலசை போவதையும் குறிப்பிட்டுச் சொல்கிறார் (ஆனால் சத்திமுற்றப்புலவர் குமரியில் இருந்து காவிரியின் வடகரை வரை போவது போதுமான அளவு வலசையா என்பது என் ஐயம், ஆனால் இதனால் இந்த அடையாளம் சரியானதன்று என்று சொல்லவரவில்லை). எனவே கட்டாயம் White Stork என்னும் "Ciconia ciconia ciconia" தான் செங்கால் நாரை என்பது உறுதியாகின்றது. இரை தின்று செங்கால் நாரை பறப்பதைப் பற்றி பெருங்கதையின் வரும் வரிகள், "இருங்கண் விசும்பக மிறகுறப் பரப்பில்" என்று தொடங்கி "செங்கால் நாரை செல்வன காண்மின்" என்று வருவதையும் சுட்டிக்ககட்டுகிறார். பறவை நூலார், இதனை "நாரை இனப் பறவை என்று கருதுவதில்லை" என்றும் குறிப்பிடுகின்றார் பி. எல். சாமி (பக்,86-88).--செல்வா 23:46, 2 பெப்ரவரி 2012 (UTC)
தெளிவு அளித்தமைக்கு மிக்க நன்றி. இங்கேயும் [1] < இந்து.காம் - புலித்தடங்களில் இயற்கைப் புதையல்கள் புத்தக மதிப்புரையில் >, இங்கேயும் [2] <Birds in our life என்ற ஆஷிஷ் கோத்தாரியின் புத்தக மதிப்புரையில்> தியோடர் பாஸ்கரன் அவ்விதமே கூறுகிறார்.
உங்களுக்கும், நீங்கள் தந்த இணைப்புகளுக்கும் சுட்டிக்கும் மிக்க நன்றி, பரிதிமதி.--செல்வா 16:26, 3 பெப்ரவரி 2012 (UTC)
சலீம் அலி அவர்களின் பறவைகள் உலகம் நூலில் பக்கம் 33-ல் இது பற்றிய செய்தி இங்கே காணவும். [[3]]--Parvathisri 17:23, 3 பெப்ரவரி 2012 (UTC)
பார்வதி, நல்ல சுட்டு தந்திருக்கின்றீர்கள். சலீம் அலி சிறந்த புள்ளறிஞர் (பறவை அறிஞர்) என்பதில் யாருக்கும் மறுப்பு இருக்க இயலாது, ஆனால் அவருடைய நூலில் கூறிய பறவைகளுக்குத் தமிழ்ப்பெயர்கள்களைப் பேராசிரியர் எ.வி. இராசேந்திரன் சூட்டி இருப்பதில் குழப்பம் இருக்கலாம். கோணவாயன் என்று பொதுவாகக் கூறப்படும் பூநாரையின் அலகு கட்டாயம் பழம்படு பனையின் கிழங்குபிளந்தன்ன என்று கூறத்தகுந்ததன்று! நான் பூநாரையின் வகைகளை தான்சானியாவில் நேரில் கண்டிருக்கின்றேன், அவற்றைச் செங்கால் நாரை என்பது பொருந்தாது. பேராசிரியர் எம்.வி.இராசேந்திரன் அவர்களின் "தமிழாக்கத்தில்" "பனங் கிழங்கு பிளந்தன்ன" என்றுவேறு குறிப்பிட்டுச் சுட்டுகின்றார் (இப்படி சலீம் அலி எழுதியிருப்பாரா, அவருடைய எழுத்தின் நேரடித் "தமிழாக்கமா" இச்சொற்றொடர் என்பதில் எனக்கு ஐயம் உள்ளது. "தமிழாக்கம்" செய்த பேராசிரியரின் தவறான அடையாளப்படுத்தலாக இது இருக்கலாம் என்று நினைக்கின்றேன் (சென்னைப் பல்கலைக்கழக அகராதியும் பிழை செய்துள்ளது). ஃவிளாமிங்கோ (Flamingo) என்னும் பறவையின் அலகு மிகச் சிறப்பாகக் குறிப்பிடும்படி, கோணவாயன் எனலாம். கோணவாயனின் அலகைப் பனங்கிழங்கு பிளந்ததற்கு ஒப்பாகவோ, கால்களைச் சிறப்பாக செங்கால் நாரை என்று கூறவோ இயலாது (சிறிதளவு இளஞ்செந்நிறம் இருக்கும், உண்மை, ஆனால் செங்கால் நாரை என்று கூறும் அளவுக்குச் சிறபான சிவப்பு அல்ல). செங்கால் நாரை ஆகாது). ஏறத்தாழ இதே போன்ற காட்சியை, ஆயிரக்கணக்கான பூநாரைகள் கூடி நிற்கும் காட்சியை, நான் தான்சானியாவில் இங்கொரோங்கொரோ பெரும்பள்ளம் என்னும் இடத்தில் கண்டிருக்கின்றேன் (2009 இல்). நான் பார்த்த பறவைகள் எல்லாவற்றுக்கும் அலகு கோணலாகவும், கறுப்பு நிறம் உடையதாகவும் இருந்தன. செக்கச் சிவந்த அலகோ, பனங்கிழங்கு போல் கூர்மையாக நேராக நீண்டதோ அன்று. சில ஃவிளாமிங்கோ வகைகளின் கால்கள் கறுப்பாகக் கூட் இருக்கும். பேராசிரியர் எம்.வி. இராசேந்திரன் தவறுதலாக அடையாளம் கண்டிருக்கின்றார் என்பதே என் கருத்து. (என் கருத்துத் தவறாக இருந்தால் திருத்திக்கொள்கின்றேன்). --செல்வா 20:10, 3 பெப்ரவரி 2012 (UTC)
ஆம் நானும் இணைப்பை இணைத்தபின் இவ்வாறு இருக்குமோ என ஐயப்பட்டேன். பரிதிமதி கூறியது போல் இக்கட்டுரையை பூநாரையுடன் இணக்கலாம். மிகச் சரியாக விளக்கம் தந்தீர்கள் நான் இந்நூலில் இருந்தே சில பறவைகள் பற்றிய கட்டுரைகளைத் தொகுக்கலாம் என நினைத்தேன். பறவைகள் பற்றிய சரியான பெயர்கள் எவ்வாறு அறிவது? எந்த நூல் உதவியாக இருக்கும்?--Parvathisri 20:21, 3 பெப்ரவரி 2012 (UTC)
இக்கட்டுரையில் உள்ள சில விவரங்களைப் பூ நாரையுடன் இணைத்து விடுகிறேன். பின்னர் நீக்கி விடலாமா?
ஆம் அப்படியே செய்யலாம்! மேலே குறிப்பிட்ட நூல்கள், கட்டுரைகள் நல்ல உசாத்துணையாக இருக்கும் என நினைக்கின்றேன். மேலும் தெரிந்தால் பகிர்கின்றேன். --செல்வா 20:55, 3 பெப்ரவரி 2012 (UTC)

பெயர் தொகு

இதற்கு பெரும் பூநாரை அல்லது பெரிய பூநாரை எனப் பெயர் மாற்ற வேண்டும். Flamingo = பூநாரை, Greater Flamingo = பெரும் பூநாரை --Anton (பேச்சு) 05:26, 9 மே 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெரும்_பூநாரை&oldid=1490973" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பெரும் பூநாரை" page.