பேச்சு:பெர்ள்

பெர்ள் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


Loop என்பதற்கு மடக்கி என்பதை விட வளையம், சுற்று, சுழற்சி என்னும் சொற்கள் பொருந்தும். For loop என்பதற்கு For வளையம். For சுற்று, For சுழற்சி என்பன பொருத்தமாக உள்ளதாக உணர்கிறேன்.--செல்வா 20:19, 26 ஆகஸ்ட் 2008 (UTC)


நன்றி. சுற்று அல்லது சுழற்சி நன்றே. --Natkeeran 20:21, 26 ஆகஸ்ட் 2008 (UTC)

இரு நிர்வாகிகளுக்கும் சிறுவனின் வணக்கம். சிறுவன் ஒரு கணினியறிவியல் மாணவன் என்பதால் நிரலாக்க மொழிகளைப் பற்றியும் சிற்றறிவு இருக்கிறது. இதில் for(),while() போன்றவற்றுக்கு 'சுற்றுகள்' என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நூல்களில் 'மடக்குகள்' எனும் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுகள் என்பவை மின்னணு சுற்றுகள் என்று பொருள்படவும் வாய்ப்புள்ளது (இவ்விடத்திலன்று; வேறெங்கேனும்). மேலும் இதற்கு "கண்ணிகள்" என்ற பதமும் பயன்படுத்தப் பட்டுள்ளது. எனவே எது சிறந்தது என்பதைத் தாங்கள் முடிவு செய்ய வேண்டும். நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தபோது சில தகவல்களுக்காக 'தமிழ் விக்கியை' நாடியுள்ளேன். அப்போது சில சொற்றொடர்கள் பாடநூலில் இருப்தைப் போலன்றி வேறு பெயர்களில் பயன்படுத்தப் பட்டிருந்தது. எனவே அனைவருக்கும் எளிது விளங்கு வண்ணம் சொற்களைக் கையாளும் முறையே, அவற்றின் பொருளுணர்த்தும் சொற்களைக் கையாளும் முறையை விடச் சிறந்ததென சிறுவன் சிந்திக்கிறேன். நிர்வாகிகளும் இதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்... மேலும் 'எழுத்துத் தொடர்' என்பதற்கு மாற்றாக 'சரம்' எனும் சொல்லையும், 'வகுப்பு' என்பதற்கு பதிலாக 'இனக்குழு' எனும் சொல்லையும் பரிந்துரைக்கிறேன். இவை யாவும் காரணப் பெயர்களேயன்றி இடுகுறியில்லை! சான்றுகள் : இங்கு

என்றும் உங்கள் அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 05:26, 20 நவம்பர் 2010 (UTC)Reply

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. மடக்கு என்ற சொல்லும் பொருத்தமே. அது நன்கு வழக்கத்தில் உள்ள சொல்தான். --Natkeeran 05:56, 20 நவம்பர் 2010 (UTC)Reply
ஐயன்மீர் எனவே அதைக் கட்டுரையில் மாற்றி எழுதலாமா? உங்கள் இசைவு தேவை.

--சூர்ய பிரகாசு.ச.அ. 06:07, 20 நவம்பர் 2010 (UTC)Reply

சொல்வா கூறியதாலேயே முதலில் மாற்றினே என்று நினைக்கிறேன். எனவே அவரின், பிறரின் கருத்துக்களைக் கேட்டு மாற்றலாம். அல்லது மாற்றி விட்டும் அவர்கள் கருத்துக்களைக் கேக்கலாம். --Natkeeran 06:09, 20 நவம்பர் 2010 (UTC)Reply


குறிப்புகள் தொகு

# Original hahs
my %hash = {}
# Hash reference
my $hash_ref = \%hash;
# Dereference
my %hahs = %{$hash_ref}
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெர்ள்&oldid=2111963" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பெர்ள்" page.