பேச்சு:மக்னீசியம் சல்பேட்டு

@Ravidreams:, விக்கிப் பயிற்சி பெற்ற ஆசிரியரின் இத்தொகுப்பு ஏன் இவ்வாறு உள்ளது. இவர்கள் தமிழில் எழுதுவதற்கு வேறு விசைப்பலகைகள் பயன்படுத்துகிறார்களா? இக்கட்டுரையத் திருத்துவது பெரும்பாடாக உள்ளது. கவனியுங்கள். @TNSE Mahalingam VNR:.--Kanags \உரையாடுக 02:18, 18 சூன் 2017 (UTC)Reply

மகாலிங்கம், கட்டுரையைத் திருத்தியமைக்கு நன்றி. ஆனால் எவ்வாறு இது நேர்ந்தது என்பதை அறியுங்கள்.--Kanags \உரையாடுக 02:40, 18 சூன் 2017 (UTC)Reply

Kanags தவறு ஏற்பட்டமைக்கு வருந்துகிறேன். நான் மொழிபெயர்ப்புக் கருவிகளைப் பயன்படுத்தும் போது அவற்றை சரிவரப் பயன்படுத்தத் தெரியவில்லை. இந்தக் கட்டுரையை உரிய வடிவத்திற்கு நானே கொண்டு வந்து விடுகிறேன். கட்டுரையைத் தொடர்ந்து எழுத இருக்கிறேன். --மகாலிங்கம் (பேச்சு) 03:15, 18 சூன் 2017 (UTC)Reply

Kanags தகவல் பெட்டியில் நீங்கள் செய்தது போல் மாற்றம் எவ்வாறு செய்வது என்பது எனக்குத் தெரியவில்லை. மாநில அளவில் எனக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் கிடைத்த நேரடிப்பயிற்சியையும் தாண்டி, பார்வதி ஸ்ரீ, தகவல் உழவன் போன்ற விக்கிப்பீடியர்கள் மூலம் அலைபேசி வாயிலாகக் கிடைத்த பயிற்சிகளைக் கொண்டும், சுயமாக முயன்று தவறி கற்றுக்கொண்டவற்றை வைத்தும் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். தாங்கள் தற்போது Chembox இல் செய்த மாற்றம் போன்று எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விவரத்தை இக்கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் சொன்னால் அதைக் கற்றுக்கொள்ளலாம்.--மகாலிங்கம் (பேச்சு) 07:17, 18 சூன் 2017 (UTC)Reply

தகவல்பெட்டியை ஆங்கிலப் பக்கத்தில் இருந்து மாற்றம் எதுவுமில்லாமல் எடுத்து உங்கள் மணல்தொட்டியில் ஒட்டிப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 08:14, 18 சூன் 2017 (UTC)Reply
@Kanags:, இத்தொகுப்பில் என்ன சிக்கல் என்று புரியவில்லை. விளக்க வேண்டுகிறேன். பொதுவாக, பல புதியவர்களின் கட்டுரைகளில் ஒருங்குறிச் சிக்கலின் காரணாக கொம்பு, கொக்கி, புள்ளி முதலியவை பிய்ந்துள்ளதைக் காண முடிகிறது. இவர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஏதாவது மென்பொருளை அல்லது முறையைப் பயன்படுத்துகிறார்களா என்று கண்டறிய வேண்டும். @TNSE Mahalingam VNR: சொல்லியபடி, பல ஆசிரியர்களும் தங்கள் சொந்த ஆர்வத்தின் பேரில், இன்னும் பல பயனர்களின் உதவி பெற்றே ஒவ்வொரு நாளும் பங்களிக்கிறார்கள். தொடர்ந்து விக்கி முறைகளை ஆர்வத்துடன் கற்று வருகிறார்கள். 3 நாள் பயிற்சி என்பதை ஒரு எளிய அறிமுகமாகவே பார்க்க இயலும். அதற்குப் பிறகும் நாம் அவர்களை ஒரு வழமையான பயனராகவே நோக்கி வழிகாட்டி உதவுவதற்கான தேவை உள்ளது. நன்றி. --இரவி (பேச்சு) 13:15, 18 சூன் 2017 (UTC)Reply

Kanags அவர்களே! இந்தக் கட்டுரையில் Clean up வார்ப்புரு நீக்கப்பட என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்? தெரிவிக்க வேண்டுகிறேன்.--மகாலிங்கம் (பேச்சு) 12:49, 21 சூன் 2017 (UTC)Reply

இக்கட்டுரை என்னுடைய கவனிப்புப் பட்டியலில் உள்ளது. வார்ப்புருவை நீக்குகிறேன்.--Kanags \உரையாடுக 12:52, 21 சூன் 2017 (UTC)Reply
Return to "மக்னீசியம் சல்பேட்டு" page.