பேச்சு:யோகான் ஐன்றிச் சூல்ட்சு

Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

Johann Heinrich Schulze என்பார் பெயரை யோகான் ஐன்றிச் சூல்ட்சு என்று எழுதினால் ஒலிப்பு இன்னும் சரியாக இருக்கும். இடாய்ட்சு மொழியில் ie என வந்தால் ஈ என்றும், ei என்று வந்தால் ஐ என்றும் சீராக ஒலிக்கும் (ஆங்கிலம் போல அல்லாமல்). Schulze என்பதும் சற்று நெடிலாக சூல்ட்சு என்று ஒலிக்கும். யோஃகான் அல்லது யோகான் என்பது சரியாக இருக்கும். --செல்வா 18:30, 14 நவம்பர் 2009 (UTC)Reply

மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மயூரநாதன் 18:40, 14 நவம்பர் 2009 (UTC)Reply



டொச்சில் Z வரும் போது ற் என்ற உச்சரிப்பும் சேர்ந்தே வரும். Schulze என்பதன் கிட்டிய உச்சரிப்பு சூல்ற்சே என்றே அமையும். ze என்று முடியும் போது ற்சே(ஏ) என்றே உச்சரிப்பு இருக்கும்.
--Chandravathanaa 20:32, 14 நவம்பர் 2009 (UTC)Reply

ஆமாம், சந்திரவதனா கூறுவது சரி. கடைசி எழுத்தும் ஒலிப்பு பெறும். சூல்ற்சே என்பது மிகச்சரியாக இருக்கும். Nazi எனப்தும் நாட்சி அல்லது நாற்சி என்பது சரியான ஒலிப்பாக இருக்கும். நாட்ஃசி என்றும் கூறலாம். இடாய்ட்சு மொழியில் வரும் z ஒலிப்பு tz, ts போன்ற ஒலிப்பு தரும். --செல்வா 22:40, 14 நவம்பர் 2009 (UTC)Reply
Return to "யோகான் ஐன்றிச் சூல்ட்சு" page.