பேச்சு:யோசப் மைசிட்டர்

Joseph Meister என்னும் பெயரை யோசப் மைசிட்டர் என்று எழுத வேண்டும் என நினைக்கின்றேன். இடாய்ட்சு மொழியில் Meister என்றால் தேர்ந்தவர், முதுவர் (Master) என்று பொருள். அதனை மைச்˘ட்டர் (My.ster) என்பதுபோல ஒலிக்க வேண்டும். Joseph Meister என்பவர் இடாய்சு (மொழி) நாட்டினரா என அறியேன். ஆங்கிலத்திலும் மை˘ச்ட்டர் என்பது போல ஒலிப்பர். தலைப்பை மாற்றலாமா? --செல்வா 17:57, 6 ஜூலை 2009 (UTC)

இதன் உண்மையான ஒலிப்பு முறை எனக்கு என்னவென்று தெரியாது! ஆங்கில பெயரை தமிழில் ஒலிபெயர்த்தேன் அவ்வளவு தான் செல்வா, கண்டிப்பாக நீங்க சொன்னது போல் யோசப் மைசிட்டர் மாற்றிவிடுகிறேன் செல்வா. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி :)--கார்த்திக் 18:50, 6 ஜூலை 2009 (UTC)
கார்த்திக், இடாய்ட்சு மொழி (செருமன்) மிகவும் சீரான ஒலிப்பை உடைய ஒரு மொழி (ஆங்கிலம் போல் ஒலிப்பொழுக்கம் குன்றிய மொழியில்லை). ie என்று வந்தால் என்று ஒலிப்பு கொள்ளும். ei என்று வந்தால் என்று ஒலிப்பு கொள்ளும் (எல்லா இடத்திலும்). Einstein என்பதை இதனால்தான் ன்ச்˘ட்டைன் என்று ஒலிக்க வேண்டும். பரவலாக அறியப்பட்ட இடாய்ட்சு மொழி கிழமை (வார) இதழாகிய Der Spiegel (டெர் ச்^ப்பீகல், தமிழில் டெர் இசுப்பீகல், சொற்பொருள் ஆடி, கண்ணாடி) என்பதை ie என்று வருதால் பீ என்று நீட்டுதல் வேண்டும். ஆங்கிலத்தில் குழப்பம் ஏற்படும் receive என்பதையும், relieve என்பதையும் என்றே நீட்டுவோம். தலைப்பை மாற்றியதற்கு நன்றி கார்த்திக்.--செல்வா 21:36, 6 ஜூலை 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யோசப்_மைசிட்டர்&oldid=400936" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "யோசப் மைசிட்டர்" page.