பேச்சு:ரிவர்டேல் பூங்கா

ரொரன்றோ - டொரான்டோ தொகு

இது குறித்து நாம் முன்பே உரையாடியிருக்கிறோம். எனினும் மீண்டும் இதனை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வருகிறேன். T என்பதற்கு ரகரத்தை பயன்படுத்தினால் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் Roranro என்றே சொல்வர். மேலும் இதிலேயே ரிவர்டேல் என்றிருப்பதை இலங்கை வழக்கில் Tiverdale என்று சொல்வார்களா அல்லது Riverdale என்றா? எவ்வாறு நாம் பிரித்தறிவது?--சிவக்குமார் \பேச்சு 06:02, 17 மே 2009 (UTC)Reply

இங்கு Riverdale ரிவர்டேல் என்பது தமிழகத்து வழக்கு. ஈழ வழக்கு றிவர்டேல். Toronto டொரான்டோ தமிழகத்து வழக்கு, ரொறன்ரோ ஈழத்து வழக்கு. இங்கு இரண்டும் குழம்பி விட்டது. எனினும் பெரும்பான்மை வழக்கை இங்கு பயன்படுத்துவது நல்லது. ரிவர்டேல் என்றிருக்கலாம். டொரான்டோ என்பதை முதன்மைப்படுத்துவதில் எனக்கு உடன்பாடே.--Kanags \பேச்சு 07:44, 17 மே 2009 (UTC)Reply


டொராண்டோ என்பதை முதன்மைப்படுத்துவதில் எனக்கு உடன் பாடு இல்லை. இங்கு வெளிவரும் அனைத்து ஊடகங்களிலும் இது ரொறன்றோ என்றே எழுதப்படுகிறது. எனவே உள்ளூர் வழக்கத்துக்கு முக்கியத்துவம் தருவது நன்று. --Natkeeran 14:03, 17 மே 2009 (UTC)Reply
ஆம் அப்படியே நற்கீரன் சொல்வதுபோற் செய்யலாம். எனக்கும் சிறுவயது முதல் ரொறன்றோ என்றவாறுதான் கேள்விப்பட்டுள்ளேன். --உமாபதி \பேச்சு 15:19, 17 மே 2009 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ரிவர்டேல்_பூங்கா&oldid=380386" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ரிவர்டேல் பூங்கா" page.