பேச்சு:வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்

Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by உமாபதி

கட்டுரையின் ஒருபகுதியை நீக்கிவிட்டு இங்கே போடுகின்றேன்.

இதனால் 1987 இற்கு முற்பட்டகாலப்பகுகியில் சிறிலங்கா இராணுவம் அவர்களின் முகாம்களுக்குள்ளேயே தமிழர் இயக்கங்களினால் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். தொண்டமானாறு, வல்வெட்டித்துறை இராணுவமுகாம்களினுடாக முன்னேறிய ஸ்ரீலங்கா இராணுவத்தினர் வடராட்சிப்பிரதேசத்தையே ஆக்கிரமித்தனர். --Umapathy 01:11, 15 மார்ச் 2007 (UTC) கீழே சிறீதரின் கருத்துப்படி நீக்கப்பட்ட பகுதி மீளவும் சேர்க்கப்பட்டுள்ளது. --Umapathy 12:45, 26 மே 2007 (UTC)Reply

எதற்காக வடமராட்சி (ஆப்பரேஷன் லிபரேஷன்) எனபது சேர்க்கப்பட்டுள்ளது. இராணுவநடவடிக்கையின் பெயரில் வடமராட்சி இல்லையென்றே நினைக்கின்றேன். தலைப்பு ஆப்பரேசன் லிபரேசன் அல்லது ஒப்பரேசன் லிபரேசன் என்றவாறு அமைவதே பொருத்தமென நினைக்கின்றேன். --Umapathy 13:50, 25 மே 2007 (UTC)Reply

அவசியமில்லை என்றாலும் தலைப்பில் வடமராட்சி என்றிருப்பதில் தவறில்லை. வரலாற்றுக் கட்டுரைகளில் இப்படி மேலதிக தகவல் இடுவது நல்லது. மற்றும் கட்டுரையில் (மேலே) நீங்கள் நீக்கியுள்ள உள்ள குறிப்பு இருப்பது அவசியம் என்றே கருதுகிறேன். அதுதான் உண்மையும் கூட. ஆதாரம் தேவை என்ற குறிப்புடன் மீண்டும் கட்டுரையில் இணைக்கலாம் என்பது என் கருத்து.--Kanags 23:41, 25 மே 2007 (UTC)Reply


"இந்நடவடிக்கையின் போது ஜூன் 4 1987 அன்று இந்திய வான்படை இலங்கையின் இறைமைகுட்பட்ட வான்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து யாழ்ப்பாண மக்களுக்கு உணவுப் பொருட்கள் வீசியது (பூமாலை நடவடிக்கை). " என்பது இந்திய அரசின் மனிதாபிமாப்பணியை இழிவுபடுத்துவதாக உள்ளது. இச்சொற்றொடர் கண்டிப்பாக மாற்றபடவேண்டும். --உமாபதி \பேச்சு 07:26, 9 அக்டோபர் 2008 (UTC)Reply

இலங்கையின் இறைமையை இந்தியா மீறியது என்ற உண்மைய அவ்வாறே குறிப்பது தான் பொருந்தும்.பூமாலை நடவடிக்கை மனிதாபிமான நடவடிக்கையா? அல்லது இலங்கை அரசை மிரட்டுவதற்காக செய்யப்பட்டாத என்பது இங்கே தேயில்லை.பூமாலை நடவடிக்கை கட்டுரையில் இதை எழுதலாம். ஈழப்போர் தொடர்பான விடயங்களை உணர்ச்சிவசப்படாது பார்க்கவேண்டும்.--Terrance \பேச்சு 07:45, 9 அக்டோபர் 2008 (UTC)Reply
டெரன்ஸ், பக்கத்துவீட்டில் நெருப்பு எரிந்தால் நீங்கள் பாத்துக் கொண்டு சும்மா இருப்பீர்களா?. இந்த யுத்த விளைவுகளை சிறுவனாக இருந்தபோது அவதானித்தவற்றையே எழுதியுள்ளேன். குரும்பசிட்டியில் எனது அம்மாவின் வீடு உட்பட அநேகமாக எல்லாவீடுகளுமே தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. மற்றவர்களின் காணிகளுள் காணி உரிமையாளர்களின் அனுமதியின்றி அல்லது உயர் நீதிமன்றத் தீர்ப்போ இல்லாமல் புல்டோசர்கள் மூலம் உள்நுளைத்து வீடுகளைத் தரைமட்டமாக்குவது அத்துமீறல் இல்லையா?. இலங்கை அரசாங்கத்திற்கு வான்பரப்பில் இறைமை இருந்தால் தமிழர்களுக்கு காணிக்கு உரித்துடையவர்களுக்கு இறைமையே கிடையாதா?. ஜெனீவா உடன்படிக்கை எல்லாம் என்னத்திற்கு இருக்கின்றது. --உமாபதி \பேச்சு 18:14, 10 அக்டோபர் 2008 (UTC)Reply
"இந்நடவடிக்கையின் போது ஜூன் 4 1987 அன்று இந்திய வான்படை இலங்கை அரசின் அனுமதியின்றி இலங்கையின் வான்பரப்பில் உள்நுழைந்து யாழ்ப்பாண மக்களுக்கு உணவுப் பொருட்கள் வீசியது (பூமாலை நடவடிக்கை). என எழுதலாம்.--Kanags \பேச்சு 07:48, 9 அக்டோபர் 2008 (UTC)Reply


அனேக இடங்களில் இது ஒப்பரேசன் லிபரேசன் என்றே எழுதப்படுகிறது. மாற்றவா. --Natkeeran 12:09, 9 அக்டோபர் 2008 (UTC)Reply
Return to "வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்" page.