பேச்சு:வளர்ப்பூடகம்

வளர்ப்பூடகம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
வளர்ப்பூடகம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இந்தக் கட்டுரைக்கு ஆங்கில விக்கியிலிருந்து படங்களை எடுத்துப் போட்டேன். ஆனால் அதில் ஒரு படம் (தேர்ந்தெடுக்கப்படும் வளர்ப்பூடகம்) வரவில்லை. காரணம் என்ன? அது Wikimedia Commons இல் இல்லாமல் ஆங்கிலக் கட்டுரையில் மட்டுமே இருக்கிறதா? அப்படியானால் Wikimedia Commons இல் பதிவேற்றிவிட்டு, பின்னர் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவேற்றலாம் என நினைத்தேன். அங்கே பதிவேற்றுவதற்கு, Upload file க்குப்போய், It is from another wikimedia project க்குப் போக, "Commons DOES NOT ALLOW FAIR USE." என்று வருகிறது. அதன் அர்த்தம் என்ன?--கலை 22:10, 7 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கலை,உங்கள் முடிவு சரியானதே. Wikimedia Commonsஇல் இல்லாத படங்கள் பிற விக்கிகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றில் பாவிக்க முடியாது. காமன்சில் உள்ள படங்கள் முழு காப்புரிமை துறப்புடன் பொதுபரப்பில் இருப்பதால் அவற்றை அனைத்து விக்கிகள் மற்றுமன்றி பிற இடங்களிலும் பயன்படுத்துவதில் தடை எதுவும் இல்லை. மாறாக ஒரு விக்கியில் FAIR USE கொள்கைபடி அந்தக்கட்டுரைக்கு மட்டும் நியாயமான பயன்பாடாகக் கருதப்படும் படங்கள் தகுந்த காரணங்கள் மற்றும் காப்புரிமை விளக்கங்களுடன் இருக்கலாம். எனவே ஆங்கில விக்கிக்கு நியாயமான பயன்பாடு என்ற கட்டுப்பாட்டுடன் பதிவேற்றப்பட்ட படம் காமன்சில் தரவேற்ற முடியாது.அதனால் இப்படிமத்தின் original creator அனைத்து காப்புரிமைகளையும் துறந்து முழுமையான கட்டற்ற உரிமம் வழங்குவாரேயானாலன்றி காமன்சில் தரவேற்ற முடியாது.
உங்கள் பிரச்சினைக்கு முடிவாக ஆங்கில விக்கியில் உள்ள படத்தை உங்கள் கணினியில் தரவிரக்கி மீண்டும் தமிழ் விக்கியில் "நியாயமான பயன்பாடு" வார்ப்புரு இட்டு தரவேற்றலாம்.--மணியன் 23:19, 7 செப்டெம்பர் 2010 (UTC)Reply
கணினியில் ஏற்கனவே தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன். ஆனால் அந்த "நியாயமான பயன்பாடு" வார்ப்புரு இட்டுத் தரவேற்றம் செய்வதாயின், ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு மட்டுமே அதன் உரிமையாளர் அனுமதி அளித்திருந்தால், மீண்டும் அவரிடம் அனுமதி பெற வேண்டுமா?
//மாறாக ஒரு விக்கியில் FAIR USE கொள்கைபடி அந்தக்கட்டுரைக்கு மட்டும் நியாயமான பயன்பாடாகக் கருதப்படும் படங்கள் தகுந்த காரணங்கள் மற்றும் காப்புரிமை விளக்கங்களுடன் இருக்கலாம். எனவே ஆங்கில விக்கிக்கு நியாயமான பயன்பாடு என்ற கட்டுப்பாட்டுடன் பதிவேற்றப்பட்ட படம் காமன்சில் தரவேற்ற முடியாது.//
ஒரு படம் ஆங்கில விக்கிப்பீடியாவில், இந்த FAIR USE கொள்கைபடி சேர்க்கப்பட்டதா அல்லது காப்புரிமைத் துறப்படன் சேர்க்கப்பட்டதா என்பதை எப்படி அறிவது? காப்புரிமை துறப்பை அந்த படத்துக்குச் சொந்தக்காரரிடம் பெற்ற பின்னரும் அதனை ஒருவர் Wikimedia Commons இல் அல்லாமல், ஆங்கில விக்கிப்பீடியாவில் சேர்த்திருக்க முடியும்தானே? அப்படியாயின் அதனை நாம் தமிழ் விக்கிப்பீடியாவில் அல்லாமல், நேரடியாக Wikimedia Commons இல் சேர்க்கலாம்தானே?
இதுதான் அந்தப்படம். இந்தப் படம் எத்தகைய படம் என்பதை எதை வைத்து அறியலாம்? அதாவது காப்புரிமைத் துறப்புடன் இருந்தால் நேரடியாக Wikimedia Commons இல் பதிவேற்றலாம். ஆனால், அப்படி அதை அறிவது எனத் தெரியவில்லை.--கலை 14:53, 8 செப்டெம்பர் 2010 (UTC)Reply

அந்த படம் Wikimedia Commons இல் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் இங்கும் தெரிகிறது --குறும்பன் 16:30, 8 செப்டெம்பர் 2010 (UTC)Reply

நியாயமான பயன்பாடு என்று குறிப்பிடுவது அந்தப் படத்திற்கான காப்புரிமை பெற்றவரிடம் அனுமதி பெறாது, இந்தக் கட்டுரைக்கு தகுந்த விளக்கம் அளிக்க இது தேவையானது, வேறு மாற்று இல்லை, தரம் குறைந்த பிரிதிறன் கொண்ட படம் ஏற்றப்படுகிறது போன்ற காரணங்களைக் கூறி நிபந்தனை முறையில் தரவேற்றப்படுவது.ஒரு விக்கிப்பீடியாவிற்கு ஒருவர் அனுமதி வழங்கியிருந்தால் மற்ற விக்கிப்பீடியாக்களுக்கும் அவை செல்லுபடியாகும்.ஆங்கில விக்கியில் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறினால் போதும்.
Fair Use படங்கள் அனுமதி பெறாத படங்கள்.நீங்கள் குறிப்பிட்டுள்ள படம் படைப்பாளியின் Creative Commons Attribution-ShareAlike 2.5 அனுமதியுடன் தரவேற்றப்பட்டுள்ளது. ஆகவே இதனை தமிழ் விக்கியிலோ காமன்சிலோ தரவேற்ற எந்தத் தடையும் இல்லை.நேற்று நான் இந்தப் படத்தை காமன்சில் தரவேற்றியுள்ளேன்.அவர்களின் ஆய்விற்குப் பிறகு ிக்கட்டுரையில் தெரியும் என நினைக்கிறேன்.
Fair use கொள்கைப்படி தரவேற்றப்பட்டுள்ள ஓர் படத்திற்கான எடுத்துக்காட்டு

--மணியன் 16:36, 8 செப்டெம்பர் 2010 (UTC)Reply

விளக்கங்களுக்கும், படத்தை விக்கி காமன்சில் தரவேற்றியமைக்கும் நன்றிகள் மணியன். நீங்கள் கொடுத்திருந்த விளக்கங்களை விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளேன். --கலை 22:42, 9 செப்டெம்பர் 2010 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வளர்ப்பூடகம்&oldid=1530695" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வளர்ப்பூடகம்" page.