பேச்சு:வாதுமை

இதற்கு வாதுமை என்றும் சொல்லப்படுகிறதல்லவா?--பாஹிம் 01:41, 24 பெப்ரவரி 2012 (UTC)

ஆம் வாதுமை என்றும் அழைக்கப்படுகின்றது. Prunus amygdalus என்பதை வாதுமை என்று தமிழ்ப் பேரகராதி (தமிழ் லெக்ஃசிக்கன்) கூறுகின்றது. வாதுமையில் பார்சிவாதுமை (common almond), கசப்புவாதுமை என இரண்டு வகையைக் குறிக்கின்றது. இங்கே பார்க்கவும். கழக அகராதி "வாதுமை = ஒரு மரம்" என்று மட்டும் சொல்கின்றது. --செல்வா 01:50, 24 பெப்ரவரி 2012 (UTC)

கட்டுரையில் உள்ள படங்களின் எண்ணிக்கை குறித்த வழிகாட்டல் தேவை தொகு

தற்போது பல கட்டுரைகளில் நிறைய படங்களைச் சேர்த்து வருகிறோம். குறை வேக இணைய இணைப்பில் இருந்து விக்கிப்பீடியாவை அணுகுபவர்களுக்கும் தரவிறக்கம் அடிப்படையிலான கட்டணச் சேவையில் உள்ளோருக்கும் இது ஒரு இடையூறாக இருக்கலாம். தவிர, விக்கிப்பீடியா ஒரு காட்சியகமாகவும் மாறி விடக்கூடாது. வேண்டிய இடங்களில், விக்கிமீடியா காமன்சில் கூடுதல் படங்கள் உள்ளன என்ற வார்ப்புருவை இடலாம். இதனை முன்னிட்டு, குறுங்கட்டுரைகளில் ஆகக் கூடுதலாக ஐந்து படங்களும் முதற்பக்கக் கட்டுரைத் தரத்தில் உள்ள கட்டுரைகளுக்கு ஆகக் கூடுதலாக 20 படங்களாகவும் பரிந்துரைக்கிறேன். இந்த எண்ணிக்கையைப் பற்றி மற்றவர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். எத்தனை என்பதை விட ஏதாவது ஒரு தகுந்த எண்ணிக்கையில் மட்டுப்படுத்துவது நன்று. தவிர, ஒவ்வொரு படமும் ஏதேனும் ஒரு வகையில் கட்டுரையின் கருத்தை தனித்து விளக்குவதாக அமைவது நன்று. ஒரே மாதிரியான பல படங்களைத் தவிர்க்கலாம்.

பொறுப்புத் துறப்பு: இது எந்த ஒரு தனிப்பட்ட பயனரின் செயற்பாடுகளை முன்னிட்டும் கூறவில்லை. தமிழ் விக்கிப்பீடியா வளரும் நிலையிலேயே உள்ளதால் அவ்வப்போது இது போன்று தேவைப்படும் வழிகாட்டல்கள், பரிந்துரைகளைக் குறிப்பிட வேண்டி உள்ளது. நன்றி--இரவி 20:23, 24 பெப்ரவரி 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாதுமை&oldid=1039901" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வாதுமை" page.