பேச்சு:வான் டர் வால்சின் சமன்பாடு

விக்கித்தரவைச் சரிபார்த்து உதவுங்கள். தரவில் இணைத்தபின் பிறமொழி விக்கிகளில் தமிழிணைப்பு இருக்கின்றது, ஆனால் தமிழில் பிறமொழி இணைப்புகள் தெரியவில்லை. மேலும் பக்கத்தின் தலைப்பையும் சரிபார்க்கவும் - வான் டெர் வால்ஸ் சமன்பாடு / வான் டெர் வால்சு சமன்பாடு? - ʋɐɾɯɳபேச்சு 08:12, 22 மே 2016 (UTC)Reply

விக்கித்தரவு சரியாகவே இணைத்துள்ளீர்கள். சில வேளைகளில் இவ்வாறான பிரச்சினை வருவதுண்டு. ஓரிரு நாட்களில் இது சரியாகிவிடும். தமிழில் தலைப்பு வான் டர் வால்சு சமன்பாடு என்பதை விட வான் டர் வால்சின் சமன்பாடு என இருப்பதே சரியாக இருக்கும்.--Kanags \உரையாடுக 08:29, 22 மே 2016 (UTC)Reply
நன்றி! கட்டுரையில் வான் டர் வால்சின் சமன்பாடு என்றிருப்பினும், van der Waals என்பது டச்சு நாட்டில் வழங்கப்படும் குடும்பப்பெயர், பெரும்பாலும் ஆங்கிலத்தில் வழங்கப்படும் van der Waal's ('s - உடைய/இன்) என்று தவறாகப் பொருள்கொள்ளப்படுகின்றது என்றெண்ணுகின்றேன். எனினும் விக்கி நடைமுறை மற்றும் பொதுவழக்கிற்கேற்ப எவ்வாறு மாற்றலாம் என்ற குழப்பத்தினால் தடங்கியுள்ளேன் :-) - ʋɐɾɯɳபேச்சு 10:50, 22 மே 2016 (UTC)Reply
சமன்பாடு வான் டர் வால்சு என்பவரது. தமிழில் வான் டர் வால்சின் சமன்பாடு (வான் டர் வால்சுவின் என்பதோ அல்லது வான் டர் வால்சுச் சமன்பாடு என்பது தவறு) என்றே இருக்க வேண்டும். வான் டர் வால்சு சமன்பாடு என வரமாட்டாது. ஆங்கிலத்தில் Van der Waals' Equation எனத் தலைப்பிட வேண்டும். ஆனால் அவர்கள் அதனை Van der Waals Equation எனச் சுருக்கமாக எழுதுகிறார்கள்.--Kanags \உரையாடுக 11:26, 22 மே 2016 (UTC)Reply

இது வான் டர் வால்ஸ் என்பவரின் சமன்பாடு என்ற பொருளில் தரப்படவில்லை. இச்சமன்பாட்டின் பெயரே வான் டர் வால்சு என்பதாகும். எனவேதான் இது வான் டர் வால்சுச் சமன்பாடு என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 10:57, 22 மே 2016 (UTC)Reply

உங்கள் அனுமானம் தவறு. இது வான் டர் வால்சு என்பவர் கண்டுபிடித்தது. ஆங்கிலம் தவிர்த்த வேறு மொழிகளில் (டச்சு உட்பட) வான் டர் வால்சின் சமன்பாடு என்றே தலைப்பிடப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 12:33, 22 மே 2016 (UTC)Reply

அறபு, ஆங்கிலம், பாரசீகம், யேர்மனியம் போன்ற மொழிகளி்ல அது ஒரு பெயராகத் தரப்பட்டுள்ளது. வேறு சில மொழிகளில் அவருடைய சமன்பாடு என்ற பொருளில் தரப்பட்டுள்ளது. எனவே, வால்சுடைய சமன்பாடு என்றோ வால்சுச் சமன்பாடு என்று பெயராகவோ எவ்வாறு எழுதினாலும் தகும். ஆயினும் வாலின் சமன்பாடு என்பது பிழை.--பாஹிம் (பேச்சு) 12:44, 22 மே 2016 (UTC)Reply

Return to "வான் டர் வால்சின் சமன்பாடு" page.