பேச்சு:விண்டோசு எக்சு. பி.

விண்டோசு எக்சு. பி. எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Downgrade ஆ download ஆ? --செல்வா 15:37, 21 டிசம்பர் 2008 (UTC)

Downgrade சரியானது ஆனால் சரியான தமிழ் அகப்படவில்லை. (பதவியிறக்கம் ?). விண்டோஸ் எக்ஸ்பி இப்போது மைக்ரோசாப்ட் தளத்தில் இருந்து பதிவிறக்க முடியாது (ஜூன் 2008 முதல் என்று நினைக்கின்றேன் சரிபார்க்கவேண்டும்)--உமாபதி \பேச்சு 17:46, 21 டிசம்பர் 2008 (UTC)

தகவற்சட்டத்தில் திருத்தங்கள் வேண்டியிருக்கின்றது. "ஆக்குகையாளர்" என்னும் சொல்லும் "நிருவனம்" என்னும் சொல்லும் "ஆக்குநர்", "நிறுவனம்" என்று மாற்றப்படல் வேண்டும். இப்பொழுது தகவற்சட்டத்த்தில் மாற்றியுள்ளேன், ஆனால் குறிச்சொற்களாகப் பயன்படுத்தும் இடங்களிலும் மாற்றுதல் வேண்டும்.--செல்வா 15:47, 21 டிசம்பர் 2008 (UTC)

ஓரளவு சரிசெய்துள்ளேன். பார்க்கவும் --உமாபதி \பேச்சு 17:46, 21 டிசம்பர் 2008 (UTC)

விண்டோஸ் தொகு

இதன் தலைப்பு விண்டோஸ் என்று இருப்பதே சரி. அவ்வாறே அந் நிறுவன வலைத்தளத்தில் உள்ளது. http://www.bhashaindia.com/Patrons/PatronsHome.htm?lang=ta --Natkeeran 04:17, 22 டிசம்பர் 2008 (UTC)

வின்டோஸ் என்பதே windows என்பதற்கு மிகக்கிட்டவான உச்சரிப்பு. விண்டோஸ் என்பது விண்(ணுலகம்) என்று உச்சரிப்பது போல் தெரிகிறது.--Kanags \பேச்சு 06:07, 22 டிசம்பர் 2008 (UTC)
nd - ண்ட் என்றும் nt - ன்ட் என்றும் இருப்பது சரியாக இருக்கும்--ரவி 08:13, 22 டிசம்பர் 2008 (UTC)
-nd, -nt இரண்டுமே தமிழில் ண்டு, ண்ட் என்று எழுதுவது வழக்கம். டகரம் நாமடி ஒலியாகையால் அதற்கு முன் ணகரம் வருவது இயல்பு. நாம் ன்ட் என்று எழுதுவது சரியானதுப்போல் இருந்தாலும், நம் டகர ஒலியை குழப்புவது. Player என்பதை நாம் பிலேயர் என்று எழுதலாம், தமிழில் பகரத்திற்கு அடுத்து லகரம் வருவது இயற்கை (புல், புலவு, பில், பில்லு), என்றாலும் பிளேயர் என்று எழுதி அது தரும் பிழையான பலுக்கலைப் பின்பற்றுவதே நல்லது. விளாடிமிர், பிளேயர், பிளே ஸ்டேஷன், பிளஷர் (pleasure) போன்ற சொல்லாட்சிகள் தமிழ் இயல்புக்கு ஒத்தது. விண்டோசு என்பதே சரியாக இருக்கும் (-சு என்று முடிவதை -ஸ் என்று எழுதுவதை இங்கு பொருட்படுத்தாதீர்கள்). வின்டோஸ் என்று எழுதுவதால், நம் ஒலிப்பு முறையை வேற்று மொழிச்சொல்லுக்காக இழக்கின்றோம் (குழப்பம் ஏற்படுத்துகிறோம்). தனியாக Win என்று வந்தால் வின் என்று எழுதுவதில் குழப்பம் இல்லை. Winchester என்று எழுதும்பொழுது வின்ச்செஸ்டர் என்று எழுதுவதில் குழப்பம் இல்லை. (இங்கும் வின்செஸ்டர் என்று எழுதினால் Winjester என்று ஒலிக்க வேண்டும்). ஒலிப்புத்துல்லியம் மிகவும் பார்ப்பது நம் மொழிக்குத் தீங்காக அமையும். பெடரிக், பிரடரிக் என்று எழுதுவதே போதும் என்பது போன்ற நினைப்பே இங்கும் தேவை.--செல்வா 14:13, 22 டிசம்பர் 2008 (UTC)
Return to "விண்டோசு எக்சு. பி." page.