பேச்சு:வீட்டுத் தன்னியக்கம்

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.

தானியக்கம் எதிர் தன்னியக்கம் தொகு

தானியக்கம், தன்னியக்கம் - எது சரி?--ரவி 04:45, 14 நவம்பர் 2008 (UTC)Reply

தன்னியக்கம் என்று விக்சனரி சொல்கிறது. மற்ற பயனர்களும் கருத்து தெரிவித்தால் நன்று. Robotics, Automation ஓரளவு வேறுபாடு உண்டு. Robotics தானியங்கிகள், அல்லது Robitics Agnets பற்றியது, Automation செயலாக்கங்களை தன்னியங்க வைப்பது...!!

தானியங்கியல் என்பதில் தான் என்று வருவதால் தானியக்கம் என்பதும் நன்று என்றே தோன்றுகிறது. --Natkeeran 22:37, 14 நவம்பர் 2008 (UTC)Reply

தானாகவே இயங்குவதால் தானியங்கி என்கிறோம். தன்னியக்கம் என்பதில் தன்னுடைய இயக்கம் என்ற பொருள் வருவதுபோல் தெரிகிறது. நானும் தன்னியக்கம் என்ற சொல்லைக் கட்டுரைகளில் பயன்படுத்தியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இது பற்றி மேலும் ஆராய்ந்து பார்க்கலாம். ஆனால் வீடு தன்னியக்கம் என்பது சரியல்ல. தன்னியக்கம் என்பது சரி என்றாலும், வீட்டுத் தன்னியக்கம் என்று வரவேண்டும். மயூரநாதன் 09:06, 15 நவம்பர் 2008 (UTC)Reply
Return to "வீட்டுத் தன்னியக்கம்" page.