பேச்சு:வெண் எகிர்சிதறல்


பைந்தமிழ் நிகர்ச்சொல் தொகு

Albedoவிற்கு நிகராய் “ஜொலிப்பு” என்பதை பயன்படுத்தலாமா? -நரசிம்மவர்மன்10 11:30, 10 செப்டெம்பர் 2007 (UTC)Reply

ஜொலிப்பு என்பது ஒரு பொதுவாக எவரும் பயன்படுத்தும் சொல். இது ஒரு கலைச் சொல்லல்ல மட்டுமல்ல தமிழ்ச் சொல்லுமல்ல. செல்வா ஒரு நல்ல தமிழ் சொல்லுடன் வருவார் என நம்புகிறேன்.--Kanags 11:41, 10 செப்டெம்பர் 2007 (UTC)Reply
Albedo என்பதற்கு ஒள் எகிர்வு (ஒள்ளெகிர்வு), எகிர்வு விகிதம், எகிர்விகிதம், ஒள் எகிர்ச்சி, ஒள்ளெகிர்ச்சி விகிதம், வெண்ணெகிர்வு என்று பலவாறு கூறலாம். --செல்வா 13:38, 12 செப்டெம்பர் 2007 (UTC)Reply
நாம் எதிர்பார்த்தபடி செல்வா அவர்கள் ஆல்பெடோவிற்குத் தமிழ் நிகரிகள் பரிந்துரைத்துள்ளார், அவற்றுள் வெண்ணெகிர்வு பொருத்தமாய் இருப்பதாய் எண்ணுகின்றேன் (albus -> albedo. albus = (இலத்தீன்)வெண்மை) , தங்கள் கருத்தையும் பகர்க! -நரசிம்மவர்மன்10 07:21, 17 செப்டெம்பர் 2007 (UTC)Reply

இதையும் பார்க்கவும் -- Sundar \பேச்சு 06:26, 17 செப்டெம்பர் 2007 (UTC)Reply

சுந்தர், அந்த Tamilvu சுட்டிக்கு நன்றி. அங்கு albedo என்பதற்கு பின்வருமாறு தந்திருக்கிறார்கள்:

Tamil Subject
வெண்மையுறல் Medical Terms
அல்பீடோ Physics

ம்ம்.. அவர்களும் அதனைத் தமிழ்ப்படுத்த நினைக்கவில்லை.--Kanags 08:27, 17 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நரசிம்மவர்மன், கனகு, சுந்தர், நாம் அதிர் --> அதிர்ச்சி, மலர் (வினை) - மலர்ச்சி, கிளர் -> கிளர்ச்சி, வளர் -> வளர்ச்சி என்று கூறுவதுபோல், எதிர் (எதிர்தல் என்னும் வினை) --> எதிர்ச்சி (Reflection, reflectivity) என்று ஆளலாம். எதிர்ப்பு, எதிர்வு எதிர்தல் என்பன பிற பெயர்ச்சொல் வடிவங்கள் (நட என்பது நடை, நடப்பு, நடக்கை, நடத்தை, நடத்தல் ஆகிய பெயர்ச்சொல் வடிவங்களில் வருவதுபோல், தமிழில் பல பெயர்ச்சொல் வடிவங்களில் ஒரு சொல் வரலாம்). இதே போல் பிறழ் -> பிறழ்ச்சி (பிறழ்வு), மகிழ் -> மகிழ்ச்சி என்றெல்லாம் வரும். எதிர்ச்சி என்பது நல்ல சொல்லாகப் படுகின்றது. Albedo வில் வெண்மை என்னும் கருத்து இருந்தாலும், அது தேவைதானா என்று எண்ணிப்பார்க்க வேண்டும். ஒளியெதிர்ச்சி மட்டும் போதுமா அல்லது வெண்ணெகிர்வு (வெண்ணெகிர்ச்சி) என்று வெண்மை குறிக்கவேண்டுமா என்றும் கருதவேண்டும்.--செல்வா 11:58, 17 செப்டெம்பர் 2007 (UTC)Reply

வெண்ணெகிர்வு, வெண்ணெகிர்ச்சி ஆகியவை literal தமிழாக்கமாகவே தோன்றுகிறது. அதைக் காட்டிலும் ஒளி எகிர்வு, ஒளி எதிர்ச்சி என்று ஒளி என்னும் சொல்லைக் கொண்டு வரும் சொற்கள் கூடிய பொருள் தரும் சொற்களாகத் தோன்றுகின்றன.--Ravishankar 18:25, 17 செப்டெம்பர் 2007 (UTC)Reply

இக்கண்ணோட்டத்தில் ஒளியெகிர்வு பொருத்தமாய் தோன்றினாலும், albedo-வை நாம் reflectivity-யிலிருந்து நிச்சயம் வேறுபடுத்தி உணர்த்த வேண்டும்!
  • albedo என்பது diffuse reflectivity, அஃதாவது, பிரதிபலிப்பு மற்றும் ஒளிச்சிதறல் என்ற இவ்விரு நிகழ்வுகளின் ஒரேவினை!
  • மேலும், வெண்மையை அடிப்படையாய்க் கொண்டே இக்கணியம் அளக்கப்படுகிறது, அஃதாவது, ஒளியை எகிர்த்து வெண்மையாய் தோன்றும் பொருளின் albedo 1-க்கு அருகிலும், கருமையாய் தோன்றும் பொருளின் albedo சூன்யத்தின் அருகிலும் கொள்ளப்படும்!
இவற்றின் அடிப்படையில் "வெண்-" தேவையென்பது என்கருத்து!
-நரசிம்மவர்மன்10 06:14, 18 செப்டெம்பர் 2007 (UTC)Reply

அனைத்து மொழி விக்கிகளிலும் இக்கட்டுரையின் தலைப்பு albedo என்றே தரப்பட்டிருக்கிறது. மேலும் இது இலத்தீன் அடிச்சொல்லாதலால் அப்படியே வைத்திருப்பது நல்லது. இதனைத் தமிழில் பெயர்ப்பதில் அர்த்தமில்லை. தமிழில் பெயர்ப்பதால் வெவ்வேறு அர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, இதனை அல்பேடோ, ஆல்பேடோ, அல்லது அல்பீடோ என ஏதாவதொன்றை முதன்மைப்படுத்தி மற்றவற்றை வழிமாற்றலாம். அல்பீடோ அன்பது சரியான ஒலிப்பெயர்ப்பாகத் தெரிகிறது.--Kanags 08:23, 18 செப்டெம்பர் 2007 (UTC)Reply

நானும் கனக்ஸ் சொல்வதை எற்றுக்கொள்கின்றேன்! :-) -நரசிம்மவர்மன்10 09:42, 18 செப்டெம்பர் 2007 (UTC)Reply

kanags, nederlands (dutch) மொழியில் albedo என்று சொல்லாமல் மொழிபெயர்த்துத் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். இலத்தீன மொழித் தாக்கம் உள்ள மொழிக் குடும்பங்களிலும் மொழித் தூய்மை கொள்கை அவ்வளவாக இல்லாத மொழிகளிலும் அதே சொல் அப்படியே கையாளப்படுவதும் எதிர்ப்பார்க்கத்தக்கது தான். கருத்துருவங்களின் பெயர்களை மொழிபெயர்க்காமல் அப்படியே வைத்துக் கொள்ளலாம் என்பது ஏற்புடைய நிலைப்பாடாகத் தோன்றவில்லை. --Ravishankar 10:06, 18 செப்டெம்பர் 2007 (UTC)Reply

ஆம், ரவி சொல்வது சரிதான். மேற்கு ஐரோப்பிய மொழிகள் (ஆங்கிலம், டாய்ட்ச் (செருமன்), பிரெஞ்ச் முதலானவை) இலத்தீனையும், கிரேக்க மொழியையும் செம்மொழியாகக் கொண்டு, அவர்களின் கலைச்சொற்களை, அம்மொழிகளில் இருந்து ஆக்கிக்கொண்டனர் (அம்மொழிகளையும் அவர்கள் முறைப்படி படித்து வந்தார்கள். இன்று பொதுக்கல்வியாக அப்படி படிக்கவில்லை). தமிழும் சமசுகிருதமும் இலத்தீன், கிரேக்கம் போன்ற செம்மொழிகள்தாம், ஆகவே இவை அப்படி கலைச்சொற்களைப் பெறவேண்டியதில்லை. ஆனால் பொது வழக்கு நோக்கி, தனிமங்கள், வேதிப்பொருட்கள் முதலான சிலவற்றுக்கு அனைத்துலக கலைச்சொற்களாகக் கொள்ளலாம். ஆனால் ellipse என்பதை நீள்வட்டம் என்று சொல்வதுபோல, Albedo என்பதை வெண் எகிர்சிதறல் என்றோ வெணெதிர்விகிதம் என்றோ நாம் படித்தவுடன் என்னவென்று ஓரளவிற்காவது புரிந்துகொள்ளுமாறு ஆக்கிக்கொள்வதுதான் நல்லது என்பது என் கருத்து. பிற மொழி நிகரிகள் இணைப்பில் இருக்கும். ஆல்பீடோ என்று சொல்லத்தேவை இல்லை. கட்டுரையில் வேண்டுமானால், இதனை ஆல்பீடோ என்றால் என்ன, ஏன் அப்பெயர் உள்ளது என்ற குறிப்புகளைச் சேர்க்கலாம். ஒளி எதிர்வு/எதிர்ச்சி (Reflection, Reflectivity) என்பதற்கும், வெண் சிதறல் எதிர்ச்சிக்கும் வேறுபாடு விளங்குமாறு சொல்லாக்கிப் பயன்படுத்தலாம். --செல்வா 14:52, 18 செப்டெம்பர் 2007 (UTC)Reply


தலைப்புமாற்றம் தொகு

செல்வா முன்மொழிந்து மற்றும் பலரால் வழிமொழியப்பட்ட அல்பெடொ-விற்கான தமிழ்நிகர்ப்பதங்களான வெண் எகிர்சிதறல் அல்லது வெணெகிர்விகிதம் என்ற தலைபிலொன்றிற்க்கு இக்கட்டுரை வருகின்ற திங்கட்கிழமையன்று (24.09.2007)மாற்றப்படவுள்ளது, இம்மாற்றம் குறித்து தங்களின் மதிப்புகளை (ஏற்றோ அல்லது எதிர்த்தோ!) பதியவும். நன்றி! -நரசிம்மவர்மன்10 06:18, 20 செப்டெம்பர் 2007 (UTC) Reply

நன்று, மாற்றவும். வேண்டாம், (இன்னும்) சிறுது ஆலோசிபோம்!
நரசிம்மவர்மன்10 06:18, 20 செப்டெம்பர் 2007 (UTC)Reply
வெண்ணெகிர்சிதறல்-Kanags 09:09, 21 செப்டெம்பர் 2007 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெண்_எகிர்சிதறல்&oldid=3419258" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வெண் எகிர்சிதறல்" page.