பேண்தகைமை அளவீடு

பேண்தகைமை அளவீடு (Sustainability measurement) என்பது, கணிய அடிப்படையிலான பேண்தகைமை மேலாண்மையில் பயன்படும் அளவீடுகளைக் குறிக்கும். சூழல், சமூக, பொருளாதாரப் பேண்தகைமைகளைத் தனித்தனியாகவும் பல்வேறு சேர்க்கை நிலைகளிலும் அளவிடுவதற்கான அளவீட்டு முறைகள் இன்னும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இவை குறிகாட்டிகள், benchmarks, தணிக்கை, சுட்டெண்கள் மற்றும் கணக்கு வைத்தல், என்பவற்றுடன், மதிப்பீடு, appraisal மற்றும் பிற முறைகளையும் உள்ளடக்குகின்றன.. இவை பல்வேறு வெளி, காலம் என்பவற்றைச் சார்ந்த அளவுத்திட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

சூழல் சார் நோக்கிலிருந்து பார்க்கும்போது பேண்தகைமை அளவீடு என்பதை சூழ்நிலை மண்டலச் சேவைகள் மீதான கேள்வியையும், கிடைக்கக்கூடிய அவற்றின் வழங்கலையும் ஒப்பிடுவதற்கான வள மேலாண்மையின் கணிய அம்சமாகக் கருதப்படலாம்.

பேண்தகைமைக் குறிகாட்டிகளும் அவற்றின் செயற்பாடுகளும் தொகு

பேண்தகைமைக் குறிகாட்டிகளின் முதன்மை நோக்கம், பேண்தகைமை ஆளுகை வழிமுறையின் ஒரு பகுதியான பொதுக் கொள்கை உருவாக்கத்துக்குத் தகவல்களை வழங்குவதாகும். பேண்தகைமைக் குறிகாட்டிகள் சமூக-பொருளாதார நடவடிக்கைகளுக்கும், சூழலுக்கும் இடையிலான எந்தவொரு ஊடுதொடர்பு அம்சங்கள் தொடர்பான தகவல்களையும் வழங்கக்கூடியன. உத்திசார் குறிகாட்டித் தொகுதிகளின் உருவாக்கம் பொதுவாக, என்ன நடக்கிறது? (விளக்கக் குறிகாட்டிகள்), இது தேவையா குறிக்கோள்களை எட்டுகிறோமா? (செயற் குறிகாட்டிகள்), மேம்படுகின்றோமா? (செயற்றிறன் குறிகாட்டிகள்), நடவடிக்கைகள் சரியாகச் செயற்படுகின்றனவா? (கொள்கைப் பயன் குறியீடு), முன்னரிலும் மேம்பட்டு இருக்கிறோமா? (மொத்தப் பொதுநலக் குறிகாட்டிகள்) போன்ற சில எளிமையான கேள்விகளைக் கையாள்கிறது. ஐரோப்பிய சூழல் முகமை பயன்படுத்தும் ஒரு பொதுக் கட்டமைப்பு, பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சி நிறுவனம் உருவாக்கிய DPSIR முறைமையில் சிறிது மாற்றம் செய்த முறையாகும். இது சூழல்சார் தாக்கங்களை ஐந்து கட்டங்களாகப் பிரிக்கின்றது.

சுட்டெண்கள் தொகு

  • காற்று தரச் சுட்டெண்
  • சிறுவர் வளர்ச்சிச் சுட்டெண்
  • ஊழல் Perceptions சுட்டெண்
  • குடியாட்சிச் சுட்டெண்
  • சூழல் செயற்பாட்டுச் சுட்டெண்
  • ஆற்றல் பேண்தகைமைச் சுட்டெண்
  • கல்விச் சுட்டெண்
  • சூழல் பேண்தகைமைச் சுட்டெண்
  • சூழல் Vulnerability சுட்டெண்
  • மொத்த உள்நாட்டுத் தனி நபர் உற்பத்தி
  • கினி கெழு
  • Gender Parity Index
  • பால்சார் வளர்ச்சிச் சுட்டெண்
  • Gender Empowerment Measure
  • மொத்தத் தேசிய மகிழ்நிலை
  • உண்மை முன்னேற்றக் குறியீடு

(முன்னைய பேண்தகு பொருளாதாரப் பொதுநலச் சுட்டெண்)

  • மொத்தத் தேசிய உற்பத்தி
  • மகிழ் கோள குறியீடு
  • மனித வளர்ச்சிச் சுட்டெண் (பார்க்க: மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்)
  • லெகாத்தம் வளநிலைச் சுட்டெண்
  • பேண்தகு பொருளாதாரப் பொதுநலச் சுட்டெண்
  • வாழ்நாள் எதிர்பார்ப்புச் சுட்டெண்
  • பேண்தகு ஆளுகைக் குறியீடுகள்.
  • பேண்தகு சமூகச் சுட்டெண்
  • நீர் வறுமைச் சுட்டெண்

அளவீட்டுமுறைகள் தொகு

  • நீர் சுழற்சி
  • கார்பன் சுழல்
  • பாசுபரசுச் சுழல்
  • நைதரசன் சுழல்
  • கந்தகச் சுழல்
  • ஓட்சிசன் சுழல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேண்தகைமை_அளவீடு&oldid=2015330" இலிருந்து மீள்விக்கப்பட்டது