பைத்யநாத் ராத்

பைத்யநாத் ராத் (Baidyanath Rath) (14 ஏப்ரல் 1911 - 2 மார்ச் 2007) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஒடிசாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். [1] [2] [3] ராத் 2 மார்ச் 2007 அன்று 95 வயதில் இறந்தார். [4] [5]

பைத்யநாத் ராத்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1952–1954
தொகுதிஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1911-04-14)14 ஏப்ரல் 1911
இறப்பு2 மார்ச்சு 2007(2007-03-02) (அகவை 95)
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
துணைவர்திலோத்தமா தேவி
மூலம்: [1]

தொடக்க கால வாழ்க்கை மற்றும் அரசியல் பங்கேற்பு தொகு

1911 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் புவனேசுஸ்வருக்கு அருகிலுள்ள கலராகங் கிராமத்தில் பிறந்தார்.இவர் சுவப்னேஸ்வர் மிஸ்ராவின் மகன் ஆவார். ஆனால், இவரது மாமா ரகுநாத் தத்துக்கு குழந்தை இல்லாததால் இவரைத் தத்தெடுத்தார். இவர் பாட்டியாவிலுள்ள கீழ்நிலைப் பள்ளியில் படித்தபோது, ​​ஒத்துழையாமை இயக்கத்திற்கு முன்பு 1920-ல் கட்டாக்கில் வந்து கதாஜோதி ஆற்றங்கரையில் உரை நிகழ்த்திய மகாத்மா காந்தியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. பிரித்தானிய அரசுக்கு எதிராக கடுமையாகப் போராடும் வகையில் இது அவருக்கு ஊக்கமளிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கட்டாக்கில் உள்ள இராவன்சா கல்லூரியில் தனது படிப்பைத் தொடர்ந்தார். இவர் அங்கு இளங்கலை அறிவியல் படித்தார். அங்கு பைத்யநாத் மாணவர் சங்கத்தின் தலைவராகவும் செயலாளராகவும் இருந்த பகவதி சரண் பாணிகிரகியுடன் தொடர்பு கொண்டார். இவர் அனந்த் சரண் பட்நாயக் மற்றும் விஸ்வநாத் பசயேத் ஆகியோருடன் சேர்ந்து ஒடிசா மாணவர் சங்கத்தை உருவாக்கினார், இது ஒடிசாவில் எதிர்கால பொதுவுடைமை இயக்கம் உருவாவதற்கான கருவாக மாறியது. இளங்கலை அறிவியல் முடித்து சட்டம் படிக்கும் போது, ​​ஹரேகிருஷ்ண மஹதாபின் அழைப்பின் பேரில், அகர்பராவில் உள்ள அவரது வித்யா மந்திர் அல்லது காங்கிரஸ் ஆசிரமத்தில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். அங்கு இவர் மாணவர்களிடையே சுதந்திரப் போராட்ட உணர்வை ஏற்படுத்தினார். ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு இவர் மீண்டும் கட்டாக் திரும்பினார். பகவதி பாணிகிரகி, அனந்த் பட்நாயக், விஸ்வநாத் பசயேத், குருசரண் பட்நாயக் மற்றும் ராமக்ருஷ்ண பதி ஆகியோருடன் இணைந்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் ஒடிசா பகுதியை உருவாக்கினார். சுதந்திரத்தின் உண்மையான இலக்கான சுரண்டலற்ற சமூகத்தை உருவாக்குவதே இவர்களின் குறிக்கோளாக இருந்தது. 1938 ஆம் ஆண்டில், இவர் தனது இயக்க நண்பர்களுடன் தேன்கனலில் பிரஜாமண்டல் இயக்கத்தில் பங்கேற்றார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003". {{cite web}}: Missing or empty |url= (help)
  2. India. Parliament. Lok Sabha (1965). Lok Sabha Debates. 
  3. India. Parliament. Rajya Sabha (1952). Who's who. 
  4. "List Of Rajyasabha Members Namewise". {{cite web}}: Missing or empty |url= (help)
  5. "Late Baidyanath Rath". {{cite web}}: Missing or empty |url= (help)
  6. Mahotsav, Amrit, "Baidyanath Rath", Azadi Ka Amrit Mahotsav, Ministry of Culture, Government of India (in English), பார்க்கப்பட்ட நாள் 2023-11-03{{citation}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைத்யநாத்_ராத்&oldid=3820408" இலிருந்து மீள்விக்கப்பட்டது