பையர்நாயக்கன்பட்டி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
பையர்நாயக்கன்பட்டி (Bairnayakkampatty) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது பையர்நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
பையர்நாயக்கன்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636906 |
அமைவிடம் தொகு
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து ஒரு 75 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு தொகு
2011 ஆண்டைய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1,391 குடும்பங்கள் உள்ளன. ஊரின் மொத்த மக்கள் தொகை 5,650 ஆகும். இதில் 2,859 ஆண்களும் 2,791 பெண்களும் அடங்குவர்.[2]