பொக்காரா (Pokhara) (நேபாள்|पोखरा), காத்மாண்டுவிற்கு அடுத்து, நேபாள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். விலைவாசி அதிகமாக உள்ள நகரங்களில் பொக்காராவும் ஒன்று.[1] பொக்காரா, காஸ்கி மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. தலைநகர் காத்மாண்டிலிருந்து மேற்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் பொக்காரா மாநகரம் அமைந்துள்ளது. பெரும்பாலான கூர்க்கா படை வீரர்களின் தாயகமாக பொக்காரா உள்ளது.

பொக்காரா
पोखरा
மலை வாழிடம்
அடைபெயர்(கள்): பொக்கு
நாடுநேபாளம்
பெரும் பிரிவுமேற்கு
மண்டலம்கண்டகி
மாவட்டம்காஸ்கி மாவட்டம்
எழுத்தறிவு விகிதம் 83% High
Incorporated1962
பரப்பளவு
 • மொத்தம்55.22 km2 (21.32 sq mi)
 • நீர்4.4 km2 (1.7 sq mi)
உயர் புள்ளி1,740 m (5,710 ft)
தாழ் புள்ளி827 m (2,713 ft)
மக்கள்தொகை (2011 (last census))
 • மொத்தம்255,465
 • அடர்த்தி4,798.8/km2 (12,429/sq mi)
 • இனக் குழுக்கள்காஸ், அந்தணர், செட்டிரி, தாக்கூரி, தலித், குரூங், மகர், நேவார், தக்களி
 • சமயங்கள்இந்து, பௌத்தம், கிறித்தவம்
நேர வலயம்GMT +5:45
தொலைபேசி குறியிடு எண்33700 (WRPD), 33702, 33704, 33706, 33708, 33713
தொலைபேசி குறியீடு061
இணையதளம்pokhara.gov.np

இமயமலைத் தொடரில் 827 முதல் 1740 அடி உயரத்தில் அமைந்துள்ளது.[2][3] பொக்காரா நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில், சுமார் 8000 மீட்டர்களுக்கு மேல் உயரம் கொண்ட அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு என மூன்று கொடிமுடிகள் அமைந்துள்ளன.[4]

காத்மாண்டிலிருந்த்து முக்திநாத் யாத்திரை செல்பவர்கள் பொக்காரா வழியாகச் செல்ல வேண்டும்.

புவியியல் தொகு

 
நேபாளத்தில் பொக்காராவின் அமைவிடம்

பொகாரா பள்ளத்தாக்கில் வடமேற்கில் பொக்காரா நகரம் அமைந்துள்ளது.[5] பொக்காரா, இமயமலைத் தொடரில் 827 மீட்டர் முதல் 1,7400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஆண்டிற்கு சராசரியாக 131 முதல் 222 அங்குலம் அல்லது 3350 முதல் 5600 மில்லி மீட்டர் மழை பொழிகிறது.[6] சேதி கண்டகி ஆறு பொக்காரா நகரத்தில் பாய்கிறது.[7] .[8][9] பொக்காராவிலிருந்து தெற்கே 4. 4 கிலோ மீட்டர் தொலைவில் பெவா ஏரி அமைந்துள்ளது.

பொக்காரா நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில், 8000 மீட்டர்களுக்கு மேல் உயரம் கொண்ட அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு என மூன்று கொடிமுடிகள் அமைந்துள்ளன.<[10]

தட்ப வெப்பம் தொகு

கோடைக் காலத்தில் அதிக பட்சம் 25 முதல் 33 பாகை செல்சியல் வெப்பமும், குளிர் காலத்தில் 2 முதல் 15 பாகை வெப்பமும் காணப்படுகிறது. ஆண்டிற்கு சராசரியாக 131 முதல் 222 இன்ச் அல்லது 3350 முதல் 5600 மில்லி மீட்டர் மழை பொழிகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், பொக்காரா (1981-2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 19.7
(67.5)
22.2
(72)
26.7
(80.1)
29.8
(85.6)
30.1
(86.2)
30.6
(87.1)
30.0
(86)
30.2
(86.4)
29.3
(84.7)
27.5
(81.5)
24.1
(75.4)
20.7
(69.3)
26.7
(80.1)
தினசரி சராசரி °C (°F) 13.4
(56.1)
15.7
(60.3)
19.8
(67.6)
22.8
(73)
24.3
(75.7)
25.8
(78.4)
26.0
(78.8)
26.1
(79)
25.1
(77.2)
22.1
(71.8)
18.0
(64.4)
14.4
(57.9)
21.1
(70)
தாழ் சராசரி °C (°F) 7.1
(44.8)
9.2
(48.6)
12.8
(55)
15.7
(60.3)
18.4
(65.1)
20.9
(69.6)
22.0
(71.6)
22.0
(71.6)
20.8
(69.4)
16.7
(62.1)
11.9
(53.4)
8
(46)
15.5
(59.9)
பொழிவு mm (inches) 23
(0.91)
35
(1.38)
60
(2.36)
128
(5.04)
359
(14.13)
669
(26.34)
940
(37.01)
866
(34.09)
641
(25.24)
140
(5.51)
18
(0.71)
22
(0.87)
3,901
(153.58)
ஆதாரம்: Sistema de Clasificación Bioclimática Mundial[11]

வரலாறு தொகு

 
பெவா ஏரி, ஆண்டு 1982

மத்தியகாலத்தில், சீனாவிற்கும் இந்தியாவிற்கு இடையே வணிகத்திற்கு பொக்காரா நகரம் முக்கிய வழியாக விளங்கியது. 17ஆம் நூற்றாண்டில், ஷா வம்சத்தின் நேபாள இராச்சியத்தில், கஸ்கி குறுநில மன்னராட்சியில் ஒரு பகுதியாக பொக்காரே இருந்தது.[12]

வழிபாட்டுத் தலங்கள் தொகு

 
பொக்காரா சாந்தி தூபி
 
இராதாகிருஷ்ணர் கோயில்
 
உலக அமைதிக்கான பௌத்த மடாலயம், பொக்காரா

பொக்காராவில் இந்து கோயில்களும் மற்றும் பௌத்த மடாலயங்களும் அருஅருகே காணப்படுகிறது.[13][14] சில முக்கிய கோயில்கள்;

  • பொக்காரா சாந்தி தூபி
  • வராகி கோயில், பெவா ஏரி
  • விந்தியவாசினி கோயில்
  • உலக அமைதிக்கான மடாலயம்
  • இராதாகிருஷ்ணன் கோயில்

சுற்றுலா & பொருளாதாரம் தொகு

 
புரானாவ் கடை வீதி
 
பெவா ஏரியின் மேல் பாராகிளைடர் பயிற்சி

திபெத்தை 1950இல் சீனா ஆக்கிரமிப்பு செய்த பிறகு மற்றும் 1962இல் நடந்த இந்திய-சீனப் போருக்கு பிறகு, சீனாவிலிருந்து பொக்காரா வழியாக இந்தியாவிற்கான வணிகம் முழுவதும் குறைந்து விட்டது. தற்போது நேபாளத்தின் மிகப்பெரும் பன்னாட்டுச் சுற்றுலாத் தலமாக பொக்காரா விளங்குகிறது.[15] மலையேற்றச் சுற்றுலாவும், மருத்துவச் சேவையும் பொக்காராவின் பொருளாதாரதிற்கான மூலமாக உள்ளது.[16] பொக்காரா நகரத்தில் 305 தங்கும் விடுதிகளில், இரண்டு ஐந்து நட்சத்திர விடுதிகளும், ஐந்து மூன்று நட்சத்திர விடுதிகளும், 15 இரண்டு நட்சத்திர விடுதிகளும் உள்ளன.[17] மத்திய காலத்தில் கட்டப்பட்ட வராகி கோயில், விந்தியவாசினி கோயில், சிதாதேவி கோயில் முதலிய இந்து வழிபாட்டுத் தலங்கள், இந்திய ஆன்மிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

சுற்றுலா பயணிகள் வருகை தொகு

ஆண்டு பன்னாட்டு சுற்றுலா பயணிகள்
பொக்காராவிற்கு வருகை[18]
%
ஆண்டு வெளிநாட்டு
பயணிகள்
% மாற்றங்கள்
முந்தைய ஆண்டு
1995 363,395 -
1996 393,613 8.3
1997 421,857 7.2
1998 463,684 9.9
1999 491,504 6.0
2000 463,646 -5.7
2001 77,853 -84
2002 68,056 -23.7
2003 85,529 22.7
2004 87,693 13.9
2005 74,012
2006 94,799
2007 165,177 74
2008 186,643
2009 203,527[19] 5
2010 230,799[20] 13.39
2011 736,215[21] 21.4
2012 803,092[18] 9.1
2013 798,000[22] -0.7

உணவகங்கள் & தங்குமிடங்கள் தொகு

பொக்காராவில் 250க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் கொண்டுள்ளது.[23] பொக்காராவில் இரண்டு ஐந்து நட்சத்திர விடுதிகள் உள்ளது.

மலையேற்றப் பயிற்சிக் களங்கள் தொகு

நேபாள நாட்டில் பொக்காரா முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு மலையேற்ற பயிற்சி நிலையங்கள் உள்ளது. இந்நிலையத்தின் மூலம் அன்னபூர்ணா 1, தவுளகிரி மற்றும் மனசுலு மலைகளில் மலையேற்ற பயிற்சி அளிக்கப்படுகிறது.

போக்குவரத்து வசதிகள் தொகு

நகரப் போக்குவரத்து வசதிகள் தொகு

நகரம், நகர்புறங்களில் மற்றும் அருகில் அமைந்த கிராமப்புறங்களில் அரசு பேருந்துகளும், சிற்றுந்து வசதிகள் உள்ளது.

மற்ற நகரங்களிடையே தொகு

நேபாளத்தின் மற்ற காத்மாண்டூ உட்பட பல நகரங்களை இணைக்க பொக்காரவிலிருந்து, பேருந்து மற்றும் விமான சேவைகள் உள்ளது. பொக்காராவில் புதிய பன்னாட்டு விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது.[24]

ஆறுகளும் ஏரிகளும் தொகு

 
வராகித் தீவுக் கோயில், பெவா ஏரி, பொக்காரா
 
சேதி ஆற்றில் காணப்படும் மலையிடுக்கு

பொக்காரா நீர் வளம் கொண்டது. முக்கிய நீர் நிலைகள்;[25][26]

ஏரிகள் தொகு

 
இமயமலை வல்லூறு, பொக்காரா
  • பெவா ஏரி
  • பெக்னாஸ் ஏரி
  • ரூபா ஏரி

ஆறுகள் தொகு

  • சேதி கண்டகி ஆறு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Cost of Living Index in Nepal - Statistics & Graphs of Nepalese Citizen's Economic Powe
  2. United Nations Field Coordination Office (UNFCO) (7 June 2011). "An Overview of the Western Development Region of Nepal" (PDF). Bharatpur, Nepal: United Nations: Nepal Information Platform. pp. 1–9. Archived from the original (PDF) on 2016-11-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-05.
  3. Pradhan, Pushkar Kumar (1982). "A Study of Traffic Flow on Siddartha and Prithvi Highway". The Himalayan Review 14: 38–51 இம் மூலத்தில் இருந்து 2015-03-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150331031227/http://nepjol.info/index.php/HR/article/download/4507/3755. 
  4. Earthquake Risk Reduction and Recovery Preparedness Programme for Nepal: UNDP/ERRRP – Project Nep/07/010 (July 2009). "Report on Impact of Settlement Pattern, Land Use Practice and Options in High Risk Areas: Pokhara Sub‐Metropolitan City" (PDF). Kathmandu: UNDP, Nepal. p. 10. Archived from the original (PDF) on 2016-04-14. பார்க்கப்பட்ட நாள் 2015-11-05.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  5. Gurung, Harka B. (2001). Pokhara Valley: A Geographical Survey. Kathmandu, Nepal: Nepal Geographical Society. 
  6. Bezruchka, Stephen; Lyons, Alonzo (2011). Trekking Nepal: A Traveler's Guide (8th ). Seattle, Washington, USA: The Mountaineers Books. பக். 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-89886-613-1. https://archive.org/details/trekkinginnepalt0000bezr_d4i2. 
  7. Tripathi, M. P.; Singh, S. B. (1996). "Histogenesis and Functional Characteristics of Pokhara, Nepal". New Perspectives in Urban Geography. New Delhi, India: M D Publications Pvt. Ltd. பக். 51–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7533-014-7. 
  8. Fort, Monique (2010). "The Pokhara Valley: A Product of a Natural Catastrophe". in Piotr Migoń. Geomorphological Landscapes of the World. London: Springer. பக். 265–274. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-481-3054-2. 
  9. Paudel, Lalu Prasad; Arita, Kazunori (April 2000). "Tectonic and polymetamorphic history of the Lesser Himalaya in central Nepal". Journal of Asian Earth Sciences 18 (5): 561–584. doi:10.1016/S1367-9120(99)00069-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1367-9120. http://www.sciencedirect.com/science/article/pii/S1367912099000693. 
  10. Herzog, Maurice (1952). Annapurna: The First Conquest of an 8,000-Meter Peak (Kindle Edition in 2011 ). New York, NY, USA: E. P. Dutton & Co. Inc.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4532-2073-3. https://archive.org/details/annapurnafirstco00herz_0. 
  11. NEPAL-POKHARA AIRPORT பரணிடப்பட்டது 2013-05-11 at the வந்தவழி இயந்திரம். Centro de Investigaciones Fitosociológicas. Retrieved 26 September 2014.
  12. Rai, Bandana (2009). "The Gorkha Kingdom". Gorkhas: The Warrior Race. Delhi, India: Kalpaz Publications. பக். 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7835-776-8. 
  13. Boke, Charis (2008). "Faithful Leisure, Faithful Work: Religious Practice as an Act of Consumption in Nepal". Himalayan Research Papers Archive: 1–21. 
  14. Adhikari, Jagannath (2004). "A socio-ecological analysis of 'the loss of public properties in an urban environivient: a case study of Pokhara, Nepal". Contributions to Nepalese Studies 31 (1): 85–114. http://lib.icimod.org/record/11534/files/6697.pdf. 
  15. Nepal, S. K.; Kohler, T.; Banzhaf, B. R. (2002). Great Himalaya: tourism and the dynamics of change in Nepal. Zurich, Switzerland: Swiss Foundation for Alpine Research. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-85515-106-7. https://archive.org/details/greathimalayatou0000nepa. 
  16. Zurick, David N. (1992). "Adventure Travel and Sustainable Tourism in the Peripheral Economy of Nepal". Annals of the Association of American Geographers 82 (4): 608–628. doi:10.1111/j.1467-8306.1992.tb01720.x. http://dx.doi.org/10.1111/j.1467-8306.1992.tb01720.x. 
  17. Adhikari, Bimal (2011). "Tourism Strategy of Nepalese Government And Tourist’s Purpose of Visit in Nepal". Aichi Shukutoku Knowledge Archive 7: 79–94. பன்னாட்டுத் தர தொடர் எண்:1881-0373. http://hdl.handle.net/10638/4985. 
  18. 18.0 18.1 Ghimire, Bal Krishna (Chief Editor) (2013). "Nepal Tourism Statistics 2012" (PDF). www.tourism.gov.np/. Kathmandu: Ministry of Culture, Tourism & Civil Aviation. Govt. of Nepal. Archived from the original (PDF) on 2013-09-03. பார்க்கப்பட்ட நாள் 2015-11-05. {{cite web}}: |first1= has generic name (help)
  19. Sharma, Lal Prasad (30 October 2010). "Tourist arrivals in Pokhara swell 20pc". The Kathmandu Post இம் மூலத்தில் இருந்து 7 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141207201546/http://www.ekantipur.com/the-kathmandu-post/2010/10/29/money/tourist-arrivals-in-pokhara-swell-20pc/214314/. 
  20. Pokhrel, Santosh (8 March 2011). "Tourist arrivals to Pokhara up". Republica இம் மூலத்தில் இருந்து 8 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140808050054/http://archives.myrepublica.com/portal/index.php?action=news_details&news_id=28994. 
  21. eTN (2 January 2012). "Nepal tourism misses 1 million arrivals target". eTN Global Travel Industry News இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924003244/http://www.eturbonews.com/27171/nepal-tourism-misses-1-million-arrivals-target. 
  22. TravelBizNews (8 March 2014). "798,000 tourists visited Nepal in 2013,arrivals down by 0.7 %". TravelBizNews Online இம் மூலத்தில் இருந்து 8 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141108025549/http://www.travelbiznews.com/news/item/2189-798-thousand-tourists-visited-nepal-in-2013. 
  23. Sedai, Ram Chandra (2011). "Tourist Accommodation Facilities in the major Tourist Areas of Nepal". Nepal Tourism and Development Review 1 (1): 102–123. doi:10.3126/ntdr.v1i1.7374. http://www.nepjol.info/index.php/NTDR/article/view/7374. 
  24. Himalayan News Service (15 October 2011). "Pokhara to have international airport". The Himalayan Times (Kathmandu) இம் மூலத்தில் இருந்து 3 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141103173920/http://www.thehimalayantimes.com/fullNews.php?headline=Pokhara+to+have++international+airport&NewsID=305805. 
  25. Thapa, Gopal B.; Weber, Karl E. (June 1992). "Deforestation in the Upper Pokhara Valley, Nepal". Singapore Journal of Tropical Geography 12 (1): 52–67. doi:10.1111/j.1467-9493.1991.tb00028.x. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1467-9493.1991.tb00028.x/abstract. 
  26. Bisht, Ramesh Chandra (2008). International Encyclopaedia of Himalayas (Vol. 4, Nepal Himalayas ). Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-8324-269-3. 

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pokhara
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பொக்காரா&oldid=3679905" இலிருந்து மீள்விக்கப்பட்டது