பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்

பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 300 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது. அவற்றுள் 181 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

நிகர சொத்து மதிப்பு மற்றும் இலாபம் ஈட்டும் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை, மகா நவரத்தின நிறுவனங்கள், நவரத்தின நிறுவனங்கள் மற்றும் சிறு நவரத்தின நிறுவனங்கள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2][3]

21 சூலை 2014 நிலவரத்தின் படி, இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் மகாநவரத்தினம் தகுதியும், 16 நிறுவனங்கள் நவரத்தினம் தகுதியும், 71 நிறுவனங்கள் சிறு நவரத்தினம் தகுதியும் கொண்டுள்ளது.[2] 71 சிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில் முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.

மகா நவரத்தினம் தகுதிக்கான அம்சங்கள் தொகு

  • நவரத்தினம் தகுதி கொண்டிருக்க வேண்டும்
  • இந்தியப் பங்குச் சந்தையில் பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும்.
  • ஆண்டு வருமானம், கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக ரூ. 20,000 கோடிக்கு மேலாக இருந்திருக்க வேண்டும்.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தின் சராசரி ஆண்டு நிகர சொத்து மதிப்பு ரூ. 10,000 கோடிக்கு மேலாக இருந்திருக்க வேண்டும்.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் அனைத்து வரிகளையும் செலுத்திய பிறகு, இலாபம் 2,500 கோடிக்கும் மேலாக இருந்திருக்க வேண்டும்.
  • நிறுவனம் உலகளாவிய இருப்பு கொண்டிருக்க வேண்டும்.

மகா நவரத்தினம் தகுதி பெற்ற நிறுவனங்கள் தொகு

நவரத்தினம் தகுதிக்கான அம்சங்கள் தொகு

  • சிறு நவரத்தினம் தகுதி கொண்டிருக்க வேண்டும்.
  • கடந்த ஐந்தாண்டுகளில் நிறுவனம், நிகர மதிப்பு மற்றும் வரிக்கு பிந்தைய நிகர லாபம், ஒரு பங்கின் ஈவுத்தொகை மற்றும் முலதனச் செயல்பாடு அடிப்படையில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

நவரத்தின தகுதி பெற்ற நிறுவனங்கள் தொகு

சிறு நவரத்தின நிறுவனங்கள் தொகு

சிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில், முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.

முதல் வகை சிறு நவரத்தின நிறுவனங்கள் தொகு

இரண்டாம் வகை சிறு நவரத்தின நிறுவனங்கள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://www.bsepsu.com/list-cpse.asp List of CPSEs - BSE
  2. 2.0 2.1 Eligibility Criteria for Grant of Maharatna, Navratna and Miniratna Status to CPSEs
  3. http://dpe.nic.in/about-us/management-division/maharatna-navratna-miniratna-cpse