பொது அறிவு என்பது சமூகம்,நிகழ்வுகள்,இலக்கியம் மற்றும் உலகம் குறித்த சிறு தகவல்களாகும்.இவற்றை அறிந்து வைத்திருக்க அத்துறையில் ஆழ்ந்த பயிற்சி தேவையில்லை. இத்தகவல்கள் உலக வாழ்வினிற்கு நேரான பலன்கள் எதனையும் தராதபோதும்,தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளைப் புரிந்து கொள்ள மிகவும் பயனாக உள்ளது. இவை ஒருவரின் பள்ளி/கல்லூரியில் பயிலும் கல்வியைத் தவிர்த்த கற்றலாக கருதப்படுகிறது.

இத்தகவல்களின் மேலாண்மையை சோதிக்கும் வினா-விடை போட்டிகள் பள்ளி/கல்லூரி வளாகங்களில் மிக பரவலாகக் காணப்படுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பள்ளிகளுக்கிடையேயான போர்ன்விடா குவிஸ்,கோடீசுவரன் போன்றவை தனியிடம் பிடித்துள்ளன.வேலைக்கான தேர்வுகள் மற்றும் நேர்முகங்களிலும் ஒருவரின் பொது அறிவுத்திறன் அவரது நினைவாற்றல் மற்றும் நடப்பு உலக பார்வையை வெளிப்படுத்துவதாக சோதிக்கப் படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_அறிவு&oldid=3941495" இலிருந்து மீள்விக்கப்பட்டது