பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி ஜெயராமன் தமிழக அரசியல்வாதி ஆவார். அதிமுக தோன்றிய காலத்திலிருந்து அதில் இருக்கிறார். பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியைச் சேர்ந்த வரதராஜு செட்டியார், சரசுவதி அம்மாள் ஆகியோருக்குக்கு சூன் 7, 1953 அன்று பிறந்தார். பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் 1969ல் பள்ளிப்படிப்பை முடித்த இவர், பொள்ளாட்சி நாகம (NGM) கல்லூரியில் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன் உள்ள (PUC) படிப்பை 1973ல் முடித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2003ம் ஆண்டு பொருளியலில் முதுகலை பட்டம் பெற்றார். இவருக்கு ஒரு அக்காள் மற்றும் 2 தங்கைகள் உள்ளனர். இவருக்கு பாக்கியலட்சுமி, ஜோதி லட்சுமி இரண்டு மனைவிகளும் 2 மகன்களும் (முகுந்தன், அக்னீசு) 4 மகள்களும் (பிரவீன், அபிராமி, சுகன்யா, வைசுணவி) உள்ளனர்[1]. 1989ம் ஆண்டு அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிளவுற்றிருந்த போது ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் மேட்டுப்பாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றார். 1996ம் ஆண்டு அதிமுக சார்பாக பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட்டு தோற்றார். 2001ம் ஆண்டு பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தொழில்துறை அமைச்சராக சிறிது காலம் பதவி வகித்தார். 2004-ம் ஆண்டில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு 2006-ஆம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தார். 2006-இல் மீண்டும் பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி பெற்றார். 2011-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டப்பேரவை துணைத்தலைவர் ப. தனபால் சட்டப்பேரவை தலைவர் ஆனதை அடுத்து பேரவை துணைத்தலைவர் பதவிக்கு 2012 அக்டோபர் அன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "2011 தேர்தலுக்காக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த உறுதிமொழி ஆவணம்" (PDF). Archived from the original (PDF) on 2011-04-10. பார்க்கப்பட்ட நாள் 2012-10-11.
  2. பொள்ளாச்சி ஜெயராமன் வேட்பு மனு - விகடன்[தொடர்பிழந்த இணைப்பு]

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொள்ளாச்சி_ஜெயராமன்&oldid=3944015" இலிருந்து மீள்விக்கப்பட்டது