போபர்ஸ் இரும்புத் தொழில் நிறுவனமான, இது சுவீடன் நாட்டில் கார்ல்ஸ்கோகா வில் அமைந்துள்ளது. 1646 ல் உருவாக்கப்பட்ட ஹேமர் மில் பூபர்ஸ் எனும் நிறுவனத்திடமிருந்து தோன்றியதாகும். போபர்ஸ் நிறுவனம் நிர்மானிக்கப்பட்ட ஆண்டு 1873.

போபர்ஸ் 120 மிமீ கடற்படை சுடுகலன்
கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட போபர்ஸ் பீரங்கி

1999 ஆம் ஆண்டு சாப் என்ற செல்சியஸ் குழு நிறுவனம் இதைத் தாய் நிறுவனமான போபர்ஸிடமிருந்து வாங்கியது. சாப் எரிகணைத் தயாரிப்பின் பக்கம் திரும்பியதால். செப்டம்பர் 2000 ல் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள , ஐக்கிய இராணுவத் தளவாடத் தொழிற்சாலை (யூ டி ஐ-UDI-United Defense Industries) போபர்ஸ் படைக்கலன் பிரிவை தன் வசமாக்கிக்கொண்டது.

தப்பொழுது போபர்ஸ் இரண்டு வகை நிறுவனங்களாகப் பிரிந்து செயல்படுகின்றது.

  • பி ஏ இ போபர்ஸ்
  • சாப் போபர்ஸ்

போபர்ஸ் ஐ நிர்வகித்த மிகப்பழமையானத் தலைவர்களில் குறிப்பிடத் தக்கவர் ஆல்பிரட் நோபல், நிர்வகித்த ஆண்டு 1894 முதல் அவர் இறந்த டிசம்பர் 1896 வரை. இவர் காலத்தில் இத் தொழிற்சாலை மிகவும் மேம்பட்டது.

போபர்ஸ் என்ற வணிக சின்னம் புகழடையக் காரணமானத் தயாரிப்பாக 40 மிமீ எதிர் வான்படை தாக்குதல் சுடுகலன் ஐக் கூறலாம். இரண்டாம் உலகப்போரில் பெரிதும் பயன் பட்ட இதை போபர்ஸ் சுடுகலன் என்று அழைக்கப்பட்டது.

போபர்ஸ் நிறுவனம் சமீபக் காலங்களில் பல சந்தேக சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டது. இதனால் போபர்சிற்கு அவதூறு நிலை ஏற்பட்டது. சுவீடனால் 1986 ல் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட படைக்கலன்களில் தனிப்பட்ட ஆதாயம் அடைந்ததாக இன்று வரை நிருபிக்கப்படாத குற்றச் சிக்கலில் சிக்கிக்கொண்டது.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
போபர்ஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போபர்ஸ்&oldid=2782410" இலிருந்து மீள்விக்கப்பட்டது