போரான் முப்புரோமைடு

வேதிச் சேர்மம்

போரான் முப்புரோமைடு (Boron tribromide) BBr3 என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் வேதிச் சேர்மம் ஆகும். போரான், மற்றும் புரோமின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் நிறமற்றதாகவும் புகையும் நீர்மமாகவும் காணப்படுகிறது.

போரான் முப்புரோமைடு
Boron tribromide
போரான் முப்புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
போரான் டிரைபுரோமைடு
வேறு பெயர்கள்
முப்புரோமோபோரேன்,போரான் புரோமைடு
இனங்காட்டிகள்
10294-33-4 Y
ChemSpider 16787736 Y
EC number 233-657-9
InChI
  • InChI=1S/B.3BrH/h;3*1H/q+3;;;/p-3 Y
    Key: LKBREHQHCVRNFR-UHFFFAOYSA-K Y
  • InChI=1/BBr3/c2-1(3)4
    Key: ILAHWRKJUDSMFH-UHFFFAOYAA
  • InChI=1/B.3BrH/h;3*1H/q+3;;;/p-3
    Key: LKBREHQHCVRNFR-DFZHHIFOAX
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 25134
வே.ந.வி.ப எண் ED7400000
SMILES
  • BrB(Br)Br
  • [BH6+3].[Br-].[Br-].[Br-]
UNII A453DV9339 Y
UN number 2692
பண்புகள்
BBr3
வாய்ப்பாட்டு எடை 250.52 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 2.643 கி/செ.மீ3
உருகுநிலை −46.3 °C (−51.3 °F; 226.8 K)
கொதிநிலை 91.3 °C (196.3 °F; 364.4 K)
தீவிரமாக வினைபுரியும்
கரைதிறன் எத்தனால், CCl4 போன்றவற்றில் கரையும்
ஆவியமுக்கம் 7.2 கிலோபாசுகல் (20 °செ)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.00207
பிசுக்குமை 7.31 x 10−4 பாசுகல் (20 °செ)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-0.8207 கியூ/கி
நியம மோலார்
எந்திரோப்பி So298
228 யூ/மோல் கெல்வின்
வெப்பக் கொண்மை, C 0.2706 யூ/கெ
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

வேதிப்பண்புகள் தொகு

வலிமை மிகுந்த இலூயிசு அமிலமாகச் செயல்படும் இச்சேர்மம் வர்த்தக நோக்கிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.

ஈதர்களை பிளவுபடுத்தும் வினைகளில், திறன்மிக்க மெத்திலகற்ற அல்லது ஆல்க்கைல்நீக்க முகவராகச் செயல்படுகிறது. பெரும்பாலும் மருந்து வகை வேதிப்பொருட்கள் தயாரிப்பில் வளையம் உருவாக்கல் வினைகளிலும் இச்சேர்மம் முக்கியப்பங்கு வகிக்கிறது[1]. மூவினைய ஆல்க்கைல் ஈதர்களின் ஆல்க்கைலகற்ற வழிமுறை, ஓர் அணைவுச் சேர்மம் உருவாதல் வழியாக நிகழ்கிறது. போரான் மையமும் ஈதர் ஆக்சிசனும் இணைந்து அணைவுச் சேர்மம் உருவாவதைத் தொடர்ந்து ஆல்க்கைல் புரோமைடு நீக்கம் அடைவதால் இருபுரோமோ(கரிம)போரேன் உருவாகிறது.

ROR + BBr3 → RO+(BBr3)R → ROBBr2 + RBr

இதேபோல அரைல் மெத்தில் ஈதர்கள், BBr3-ஈதர் கூட்டு விளைபொருட்கள் ஈடுபடும் இருமூலக்கூற்று வழிமுறையால் ஆல்க்கைல் நீக்கம் செய்யப்படுகின்றன[2]

RO+(BBr3)CH3 + RO+(BBr3)CH3→ RO(BBr3) + CH3Br + RO+(BBr2)CH3.

தொடர்ந்து இருபுரோமோ(கரிம)போரேன் நீராற்பகுப்பு அடைந்து ஒரு ஐதராக்சில் குழு, போரிக் அமிலம், ஐதரசன் புரோமைடு ஆகிய விளை பொருட்களைக் கொடுக்கிறது[3]

ROBBr2 + 3H2O → ROH + B(OH)3 + 2HBr.

ஒலிஃபின் பலபடியாக்கல் வினையிலும், பிரைடல் கிராப்ட்சு வேதியியலில் இலூயிக் அமில வினையூக்கியாகவும் இச்சேர்மம் பயன்படுகிறது.

மின்னணுவியல் தொழில் உற்பத்தியில் போரான் மூலமாக, போரான் முப்புரோமைடு பயன்படுத்தப்படுகிறது. பெருமளவில் குறைக்கடத்திகள் தயாரிக்கையில், கலப்பிடுதலுக்கான முன்படிவுச் செயல்முறையில் போரான் முப்புரோமைடைப் பயன்படுத்துகிறார்கள்[4]. மேலும், அரைல் ஆல்க்கைல் ஈதர்களை ஆல்க்கைல் நீக்கம் செய்யும் வினைகளில் இடைநிலையாகவும் போரான்முப்புரோமைடு பயன்படுகிறது. 3,4-இருமெத்தாக்சி சிடைரினை, 3,4-இருஐதராக்சி சிடைரினாக மாற்றும் மெத்திலகற்ற வினை ஒரு உதாரணமாகும்.

தயாரிப்பு தொகு

300 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் போரான் கார்பைடும் புரோமினும் சேர்ந்து வினைபுரிவதால் தொகுப்பு முறையில் போரான் முப்புரோமைடு உருவாகிறது. வெற்றிடக் காய்ச்சி வடித்தல் முறையில் போரான் முப்புரோமைடு தூய்மைப்படுத்தப்படுகிறது.

வரலாறு தொகு

1846 ஆம் ஆண்டில் எம்.போகியேல் முதன்முதலாக போரான் முப்புரோமைடைத் தயாரித்தார். உயர் வெப்பநிலையில் போரான் மூவாக்சைடுடன் கார்பன் மற்றும் புரோமினைச் சேர்த்து இவர் போரான் முப்புரோமைடைத் தயாரித்தார்:[5]

B2O3 + 3 C + 3 Br2 → 2 BBr3 + 3 CO.

1857 ஆம் ஆண்டு எப்.வோலரும் தெவில்லேவும் இத்தயாரிப்பு முறையை மேலும் மேம்படுத்தினர். படிகவடிவமல்லாத போரான் தனிமத்தில் வினையைத் தொடங்கி, குறைவான வெப்பநிலையிலேயே, உடன் விளைபொருளாக கார்பனோராக்சைடு உருவாகாமல் இவர்கள் போரான் முப்புரோமைடைத் தயாரித்தனர்:[6]

2 B + 3 Br2 → 2 BBr3.

மேற்கோள்கள் தொகு

  1. Doyagüez, E. G. (2005). "Boron Tribromide" (pdf). Synlett 2005 (10): 1636–1637. doi:10.1055/s-2005-868513. http://www.thieme-connect.de/ejournals/pdf/synlett/doi/10.1055/s-2005-868513.pdf. பார்த்த நாள்: 2016-10-15. 
  2. Sousa, C.; Silva, P.J (2013). "BBr3-Assisted Cleavage of Most Ethers Does Not Follow the Commonly Assumed Mechanism" (pdf). Eur. J. Org. CHem n/a (n/a): n/a. doi:10.1002/ejoc.201300337. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/ejoc.201300337/pdf. 
  3. McOmie, J. F. W.; Watts, M. L.; West, D. E. (1968). "Demethylation of Aryl Methyl Ethers by Boron Tribromide". Tetrahedron 24 (5): 2289–2292. doi:10.1016/0040-4020(68)88130-X. 
  4. Komatsu, Y.; Mihailetchi, V. D.; Geerligs, L. J.; van Dijk, B.; Rem, J. B.; Harris, M. (2009). "Homogeneous p+ emitter diffused using borontribromide for record 16.4% screen-printed large area n-type mc-Si solar cell". Solar Energy Materials and Solar Cells 93 (6–7): 750–752. doi:10.1016/j.solmat.2008.09.019. 
  5. Poggiale, M. (1846). "Nouveau composé de brome et de bore, ou acide bromoborique et bromoborate d'ammoniaque". Comptes Rendus Hebdomadaires des Séances de l'Académie des Sciences 22: 124–130. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k29798/f128.table. 
  6. Friedrich Wöhler; Henri Etienne Sainte-Claire Deville (1858). "Du Bore". Annales de Chimie et de Physique 52: 63–92. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k347939/f62.table. 

மேலும் படிக்க தொகு

புற இணைப்புகள் தொகு

  • Boron Tribromide at The Periodic Table of Videos (University of Nottingham)
  • NIOSH Pocket Guide to Chemical Hazards - Boron Tribromide (Centers for Disease Control and Prevention)
  • "Material Safety Data Sheet – Boron tribromide". Fisher Science.
  • US patent 2989375, May, F. H.; Bradford, J. L., "Production of Boron Tribromide", issued 1961-06-20, assigned to American Potash & Chemical 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரான்_முப்புரோமைடு&oldid=3252765" இலிருந்து மீள்விக்கப்பட்டது