போரிஸ் பசனோவ்

போரிஸ் ஜியார்ஜியெவிக் பசனோவ் (உருசியம்: Борис Георгиевич Бажанов, சிலநேரங்களில் Bajanov என்றும் உச்சரிக்கப்படும்) (1900–1983) சோவியத் யூனியனின் பொலிட்புரோ கட்சியின் செயலாளராகவும் ஜோசப் ஸ்டாலினின் தனிச் செயலராக 1923 முதல் 1925 வரையும் இருந்தார்.[1][2] 1925 முதல் 1928 வரை பொலிட்புரோவில் பல பதவிகளை வகித்த பின்னர், பசனோவ் சோவியத் யூனியனிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். ஆனால், தொடர்ந்து ஸ்டாலினின் தனிச்செயலராக இருந்து பலவற்றைச் செய்துவந்தார். ஃபிரான்சில் பசனோவைக் கொல்ல ஸ்டாலின் செய்த பல முயற்சிகளும் தோல்வியுற்றன. 1930இலிருந்து பசனோவ் தனது வாழ்க்கை நினைவுக்குறிப்புகளை எழுதி அவற்றை நூல்களாக வெளியிட்டார். அவற்றில் ஸ்டாலினின் செயல்களுக்குப் பின்னிருந்த கமுக்க விடயங்களைத் தொடர்ந்து வெளியிட்டுவந்தார். அவை 1983இல் அவரது மறைவுக்குப் பின்னர் மொழிபெயர்க்கப்பட்டன.

போரிஸ் பசனோவ் (Boris Bazhanov)
பிறப்புபோரிஸ் பசனோவ்
(1900-01-01)1 சனவரி 1900
மோகிலெவ்-பொடொல்ஸ்கிய், உருசியப் பேரரசு
இறப்பு1 சனவரி 1983(1983-01-01) (அகவை 83)
பாரிஸ், ஃபிரான்சு
இருப்பிடம்ஃபிரான்சு
தேசியம்உக்ரேனியன்
மற்ற பெயர்கள்
  • Boris Bašanov
  • Boris Bajanov
  • Boris Baschanow
குடியுரிமைஃபிரெஞ்சு
அறியப்படுவதுஸ்டாலின் காலத்தியப் பற்றிழப்பாளர்

மேற்கோள்கள் தொகு

  1. Krasnov, Vladislav (1985). Soviet Defectors: The KGB Wanted List. Hoover Press. pp. 11–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8179-8231-0. பார்க்கப்பட்ட நாள் 6 November 2008.
  2. Medvedev, Roy Aleksandrovich (1989). Let History Judge: The Origins and Consequences of Stalinism. Columbia University Press. p. 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-231-06350-4. பார்க்கப்பட்ட நாள் 6 November 2008.

உதவி நூல்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போரிஸ்_பசனோவ்&oldid=3223146" இலிருந்து மீள்விக்கப்பட்டது