பௌளி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம் தொகு

 
பௌளி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
 
பௌளி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த1), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி13 ப த1 ச்
அவரோகணம்: ச் நி31 ப க3 ரி1

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சாடவ" இராகம் என்பர்.

உருப்படிகள்[1] தொகு

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கீர்த்தனை மேலுகோவைய்யா தியாகராஜ சுவாமிகள் ஜம்பை
கிருதி கருணாநிதியே பாபநாசம் சிவன் திரிபுடை
கிருதி ஸ்ரீ பார்வதி முத்துசுவாமி தீட்சிதர் ஆதி
கிருதி சம்போ மகாதேவா நீலகண்ட சிவன் ஆதி
கிருதி தூய நெஞ்சமுள்ள இலட்சுமணப்பிள்ளை ஆதி
கிருதி நீ தயவாய் முத்துத்தாண்டவர் ஆதி
கிருதி என் முறை கேட்டு பெரியசாமித் தூரன் ஆதி
கிருதி பார்வதி நாயகா சுவாதித் திருநாள் ராம வர்மா ஆதி


இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பௌளி&oldid=1304044" இலிருந்து மீள்விக்கப்பட்டது