ப. அருளி

சொல்லாய்வறிஞர்

அருளியார் என அறியப்படும் ப. அருளி (பிறப்பு 17 சூன் 1950), புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ச் சொல்லாய்வறிஞர் ஆவார்.

பிறப்புபா. அருளி
17 சூன் 1950 (1950-06-17) (அகவை 73)
பாண்டிச்சேரி, பிரெஞ்சு இந்தியா (தற்போது புதுச்சேரி, இந்தியா)
குடியுரிமைஇந்தியர்
கல்விஇளங்கலை வணிகவியல், இளங்கலைச் சட்டம்
இலக்கிய இயக்கம்தனித்தமிழ் இயக்கம்
துணைவர்
தேன்மொழி
(தி. 1980; இற. 2020)
பிள்ளைகள்அறிவன்
தெள்ளியன்
குடும்பத்தினர்பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மாமனார்)
இறைக்குருவன் (தமர்)

வாழ்க்கைக் குறிப்பு தொகு

17 சூன் 1950 அன்று பிறந்த அருளியார் வணிகவியல், சட்டம் பயின்றவர். வழக்கறிஞராக 1980 முதல் 1984 வரை பணியாற்றியுள்ளார்.

கல்விப்பணி தொகு

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இவருக்கென்றே தனித்துறையை அரசு உருவாக்கியது.[சான்று தேவை] ப. அருளி தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருந்து தகைமையாளராக 1980 முதல் 1984 வரையிலும் (Honorary - Fellow) ஆய்வறிஞராக 1995 முதல் 2007 வரையிலும் (Scholastic Researcher) பேராசிரியராக 2007 முதல் 2010 வரையும் பணிபுரிந்துள்ளார்.

இவர் தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தமிழ் வேர்ச்சொல் ஆய்வுகளில் புலமை பெற்றவர். தூய தமிழில் உரையாற்றுவதால் தமிழகத்திலும், அயல்நாடுகளிலும் புகழ்பெற்ற பேச்சாளராக விளங்குபவர். தமிழினத் தொண்டியக்கம் நிறுவி, குமுகத் தொண்டாற்றுபவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தூயதமிழ்- சொல்லாக்க அகரமுதலித் துறையின் தலைவராகப் பணிபுரிந்துள்ளார். இவர் 20 க்கும் மேற்பட்ட நூல்களையும் 250 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இயற்றியுள்ளார். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக ஆய்வரங்கங்களில் ஆய்வுரைகளை வழங்கியுள்ளார்

எழுதியுள்ள நூல்கள் தொகு

ஆண்டு தலைப்பு வகை பதிப்பகம்
1979 நிறைந்தேன்! கவிதைத் தொகுப்பு
தகுதி மொழியாய்வுக் கட்டுரை
1981 சிங்கள அமர்க்களம்
1982 அயற்சொல் அகராதி!... அகரமுதலி
1983 இவை தமிழல்ல!...
இந்திய அரசே இன்னுமா உறக்கம்?
1985 தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில்

அருளி ஆற்றிய மொழியியல் உரைகள் (ஐந்து தொகுதிகள்)

1988 இரு வானொலி உரைகள்
1989 பெற்றோரைப்பற்றி!
1992 யா! (ஒரு வேர்ச்சொல் விளக்கம்)
தென்மொழியின் தொண்டு (இதன் தொடக்கக் காலம் பற்றிய ஒரு மேற்பார்வை)
அச்சங்களும்-வெறிகளும் - ஓர் அகரமுதலி

(Dictionary of Phobias and Manias)

அகரமுதலி
2002 அருங்கலைச்சொல் அகரமுதலி

Dictionary of Technical Terms[1]

அகரமுதலி
2005 நம் செம்மொழி
2006 நம் இன்பியல் குறள்மறை கூறும் இல்வாழ்வு

(விரிவாக்கச் செம்பதிப்பு)

2007 இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதி

(நான்கு தொகுதிகள்)

அகரமுதலி
நான் முன்னுரைத்த முன்னுரைகள்

(இரு தொகுதிகள்)

வேரும் விரிவும் (வேர்ச்சொல்லியல் கட்டுரைகள்)

(இரு தொகுதிகள்)

மரம்-செடி-கொடி-வேர்

(இரு தொகுதிகள்)

2016 Original Origines, Voume 1, [2]
2017 Original Origines, Voume 2, [3]

தனி வாழ்க்கை தொகு

தமிழ்த்தேசியத்தந்தை பெருஞ்சித்திரனாரின் மகளான தா.பெ.அ. தேன்மொழியை 1980-இல் மணந்தார் அருளி. இவ்விணையருக்கு அறிவன்-தெள்ளியன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். தழல் தேன்மொழி, 14 செப்டம்பர் 2020 அன்று காலை 4 மணியளவில் புதுச்சேரி திலாசுப்பேட்டையில் காலமானார்.[4][5]

சான்றுகள் தொகு

  1. Dictionary of Technical Terms-அருங்கலைச்சொல் அகரமுதலி,2002, அருளி.ப, தமிழ்ப் பல்கலைக்கழகம்: தஞ்சாவூர்
  2. Veriyam Publications, Puducherry
  3. Veriyam Publications, Puducherry
  4. "https://twitter.com/kryes/status/1305612023347245058". Twitter. பார்க்கப்பட்ட நாள் 2022-10-30. {{cite web}}: External link in |title= (help)
  5. "மறைவு - செய்திகள்". tamil.thenseide.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-30.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._அருளி&oldid=3827879" இலிருந்து மீள்விக்கப்பட்டது