மகாநகர் (The Big City, 1963) ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும்.

மகாநகர்
இயக்கம்சத்யஜித் ராய்
கதைசத்யஜித் ராய், நாவல் நரேந்திரனாத் மித்ரா
நடிப்புஅனில் சாட்டர்ஜி,
மாதபி முகர்ஜி,
ஜெய பச்சன்,
விக்கி ரெட்வுட்,
செஃபாலிக்கா தேவி,
ஹாரென் சாட்டர்ஜி
விநியோகம்எட்வர்ட் ஹரிசன்
வெளியீடு1963
ஓட்டம்131 நிமிடங்கள்
மொழிவங்காள மொழி

வகை தொகு

கலைப்படம்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

1950 ஆம் ஆண்டுகளின் பின்னணியில் நடைபெறும் இத்திரைப்படத்தில் மசூம்தார் (மாதபி முகர்ஜீ) ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.இவரது கணவரின் வருமானம் குடும்பத்திற்குப் போதுமான அளவு இல்லாதுபோகவே இவரும் வேலை செய்யத் தொடங்ககுகின்றார்.வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்பவராக வேலையொன்றினைப்பெற்று குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியினை ஏற்படுத்துகின்றார்.ஆனாலும் தனது சிறு வயது மகன் தாயாரைக் காணாது மனம் நொந்து போய் வீட்டில் இருப்பதனையும் உணர்கின்றார்.இச்சமயம் வேலை செய்யும் இடத்தில் மிகுந்த வரவேற்பைப்பெறும் மஸூம்தார் வேலை செய்யும் நபர்களுடன் நெருங்கிப்பழகுவதனைத் தற்செயலாகப் பார்த்துவிடும் இவர் கணவரால் ஆரம்பத்தில் சந்தேகப்பார்வையுடன் பார்க்கப்படுகின்றார். அத்தகைகைய காரணங்களினால் தனது மனைவியை வேலை செய்யச் செல்ல வேண்டாமென அவர் கூறுகின்றார். அதே போல் வேலையை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தினை எடுத்துச்செல்லும் சமயம் தனது கணவர் வேலை செய்த வங்கியில் பிரச்சினை ஏற்பட்டு வேலையினை இழக்க நேரிடுகின்றது.அதனால் தனது வேலையினைத் தொடர்ந்து செய்யும் மசூம்தார் தன்னுடன் வேலை செய்த தோழி சுகயீனம் காரணமாக வேலை செய்ய வராததினையும் பொருட்படுத்தாது அவரை வேலைவிட்டு நீக்கிய காரணத்திற்காக தனது தலைமை அதிகாரியிடம் தனது ராஜினாமாக் கடிதத்தினை அளித்துப்பின் வீடு செல்கின்றார்.

விருதுகள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாநகர்&oldid=3322227" இலிருந்து மீள்விக்கப்பட்டது