மகுந்து பிகாரி லால்

இந்திய விலங்கியாளர்

மகுந்து பிகாரி லால் சகாப்பு (Makund Bihari Lal Sahab) இந்தியாவைச் சேர்ந்த ஒரு விலங்கியல் நிபுணராவார். 1907 ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] [2] ராதாசோமி ஆன்மீக நிறுவனத்தின் ஏழாவது மதிப்பிற்குரிய தலைவராக இவர் கருதப்படுகிறார்.[3] [4] ஆக்ராவிலுள்ள தயால்பாக்கில் மகுந்து பிகாரி லால் வசித்து வந்தார். விலங்கியல் துறையில் ஒரு பேராசிரியராகப் பணியாற்றினார் [5] பின்னர் 1968-1971 ஆம் ஆண்டுகளில் லக்னோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.[6] மேலும் மகுந்து பிகாரி லால் தயால்பாக் கல்வி நிறுவனத்தின் நிறுவன இயக்குனராகவும் அதன் கல்விக் கொள்கையின் முதன்மை வடிவமைப்பாளராகவும் இருந்தார். [7]

மகுந்து பிகாரி லால்
Makund Bihari Lal
பிறப்பு(1907-01-31)சனவரி 31, 1907
இறப்புதிசம்பர் 5, 2002(2002-12-05) (அகவை 95)
துறைவிலங்கியல்
கல்வி கற்ற இடங்கள்லக்னோ பல்கலைக்கழகம்

1942 ஆம் ஆண்டில் மகுந்து பிகாரி லால் இந்திய அறிவியல் கல்விக் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [8] 1962 ஆம் ஆண்டில் இவர் இந்திய தேசிய அறிவியல் கல்விக் கழகத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [9]

கல்வி தொகு

பிகாரிலால் சகாப் லக்னோ பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்கள் பெறுவதற்கு முன்பு சிதபூர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் லக்னோவின் கிறித்துவ இடைநிலைக் கல்லூரியில் பயின்றார். இவரது ஆராய்ச்சி பணிகளுக்காக இவருக்கு அறிவியல் முனைவர் விருதை எடின்பர்க் பல்கலைக்கழகம் வழங்கி சிறப்பித்தது. "பறவைகளின் தட்டைப்புழு ஒட்டுண்ணிகள்" என்ற தலைப்பில் இவரது ஆய்வுக்கட்டுரை இருந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. Proceedings of the International Conference on International Conference on Environmental Parasitology and Community Health Care Initiatives: ENPARACOHI--2007, October 13-15, 2007. 2007. https://books.google.com/books?id=mfHXYrS3nw4C&q=Lal+Sahab&pg=PR11. 
  2. Kanungo, M.S. (25 February 2003). "Makund Behari Lal" (PDF). Indian Institute of Science. Archived from the original (PDF) on 17 டிசம்பர் 2004. பார்க்கப்பட்ட நாள் 4 ஆகஸ்ட் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "Sant Satguru in Radhasoami Faith". www.dayalbagh.org.in.
  4. Juergensmeyer, Mark (1995). Radhasoami Reality: The Logic of a Modern Faith. https://archive.org/details/radhasoamirealit0000mark. 
  5. "Zoology at Lucknow: Dr. M. B. Lal". Nature 176 (4489): 907–908. 12 November 1955. doi:10.1038/176907e0. https://archive.org/details/sim_nature-uk_1955-11-12_176_4489/page/907. 
  6. ":: Lucknow University". www.lkouniv.ac.in. Archived from the original on 2017-09-15. பார்க்கப்பட்ட நாள் 2021-08-04.
  7. "Home". www.dei.ac.in.
  8. "Fellow Profile". Indian Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 7 January 2020.
  9. "Deceased Fellow Detail". Indian National Science Academy. Archived from the original on 14 ஆகஸ்ட் 2020. பார்க்கப்பட்ட நாள் 7 January 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகுந்து_பிகாரி_லால்&oldid=3937283" இலிருந்து மீள்விக்கப்பட்டது